உன் கையிலிருக்கிறது என்ன WHAT IS THAT IN THINE HAND? 55-06-11 1. சகோதரனே, உங்களுக்கு அன்பான நன்றி, இது என்னவென்றால்..... ? ...... மாலை வணக்கம் நண்பர்களே, இன்றிரவு இங்கிருப்பதில் மகிழ்ச்சிகரமான ஒன்று, நாங்கள் இங்கே வெளியில் இருக்க முடிந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்; கடந்த இரவு நடந்த அவருடைய அற்புதமான ஆராதனைகளுக்காகவும்; முதல் தடவையாக நான் மக்களின் மத்தியில் சென்று அவர்களுக்கு மிக நீண்ட நேரமாக பிரசங்கித்து அவர்களுக்கு ஊழியம் செய்யத்தக்கதாக எனக்கு தருணம் கிடைத்தது என்பதைக் கேட்பதற்கும் நல்ல கர்த்தருக்கு நன்றி. 2. கடந்த மாலை வேளையில் நான் வெளியில் சென்று கொண்டிருந்த போது என்னுடன் உடன் வந்தவர்கள் என்னிடமாக, நான் அந்த விதமான கூட்டத்தை நடத்தி மக்களின் மேல் கைகளை வைத்து அப்படியாக நான் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை என்று கூறினார்கள்; அவர்கள் நினைத்தது இப்படியாக . . . பிரசங்க மேடையிலிருந்து அழைப்பு விடுவிக்கப்பட்டதும் நூறு சதவீத மக்கள் அப்படியே ஆமோத்திக்கின்றனர், என்று அவர்கள் கூறினர். அவர்கள், "அதைக்குறித்து மக்கள் என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே அப்பொழுதே நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்” என்று கூறினர். அப்பொழுது நான், “ஆம், அவர்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் விசுவாசிக்கின்றனர்” என்று கூறினேன். 3. நான் சக்கர நாற்காலிகள் மத்தியில் நடந்து கொண்டிருந்த போது, எனக்கு முன்பாக பில்லி நடந்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்தேன். அப்பொழுது நான் பக்கவாட்டில் பார்க்கநேர்ந்தது. அப்பொழுது நான் கண்டது என்னவென்றால் முன்னே நடந்து சென்றுக் கொண்டிருந்தது பில்லி அல்ல; அவர் நடந்துக் கொண்டிருந்தார். பிறகு நான் திரும்பவுமாக மேலே வந்தேன், அப்பொழுதிலிருந்து கர்த்தர் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்தார், அங்கே சக்கர நாற்காலியில் உட்கார்ந்துள்ளவர்களில் சிலர் ஜனக்கூட்டத்தின் மத்தியில் நடப்பார்களென்றும் சிலர் வெளியே நடந்துச் செல்வார்கள் என்றும் கூறினார். அப்பொழுது, என்னுடன் வந்திருந்த மனிதர் "அது நடந்தேறுமா?” என்று கூறினார். அதற்கு நான் நீங்கள் அப்படியே அதை கவனித்துப் பார்த்துக்கொண்டிருங்கள் என்று கூறினேன். ஆகவே அங்கே கடந்த இரவு .... அது சரி. அது என்னவென்றால், இந்த வாரத்தில் முடக்கு வாதத்தினால் தாக்கப்பட்டு சக்கர நாற்காலியிலிருந்த ஐந்து பேர் சுகமடைந்ததுவே. அது நம்முடைய கர்த்தர் செய்துக் கொண்டிருக்கின்ற அற்புதங்களே. அந்த இரவைக் காட்டிலும் இன்னும் அதிகமானவைகளைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கின்றேன், நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? அவர் செய்வார் என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம்.  4. இப்பொழுது, நாளை இரவு, இந்த ஆராதனையின் முடிவானதாயிருக்கையில் ... நீங்கள் எங்களிடமாக மிகவும் அருமையாக இருந்தீர்கள், வானிலையானது குளிராகவும் மழையாகவும் இருக்கையில் வெளியில் வந்து உட்கார்ந்தீர்கள்.... நீங்கள் மிக மிக அருமையானவர்களாக இருந்தீர்கள், நாங்கள் எப்பொழுதுமே உங்களை நினைவில் கொள்ளுவோம். எனக்கு சிறிது கஷ்டமாக இருந்தது நீங்கள்..... அருமையான காரியம் என்னவென்றால் நீங்கள் மிகவும் அருமையாக நடந்துக் கொண்டீர்கள், ஏனென்றால் மக்களிடம் இந்த விதமாக நான் பேசுவது அல்லது பிரசங்கித்துவிட்டு அதன் பிறகு பீட அழைப்பை விடுப்பது என்பது வழக்கமான ஒரு காரியம் அல்ல. 5. ஏதோ சில காரணத்தால் சகோதரன் மூர் வரவில்லை, சகோதரன் ஆர்கன் பிரைட் வரவில்லை, ஆனால் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சகோதரன் தாம்ஸ் வந்துள்ளார், அவருடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, அவர் இங்கே எங்கோ ஓரிடத்தில் இருந்தார்; சற்று முன்னர் அவர் “ஆமென்'' என்று கூறினதை நான் கேட்டேன். இதோ இங்கே அவர் வருகின்றார். அது என்னவென்றால்..... வில்லியம் பிரன்ஹாம் என்று பெயரிடப்பட்ட சிறு பையனாக அவன் இருக்க முடியாது. ஆம், என்னே ... மகனே, முதல் முறையாக நான் உன்னைக் கண்டேன். நீ அருமையான பையன் ஆவாய். கூடிய சீக்கிரத்தில் உன்னை என் வீட்டில் சந்திப்பேன் என்று நான் எதிர்ப்பார்க்கின்றேன். பாருங்கள்? ஆம், அது மிக அருமையானதாகும். சகோதரன் தாம்ஸ் பேசுவதை நீங்கள் எல்லோரும் கேட்டு மகிழ்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவேளை நாளை இங்கே ஏதாவதொரு சபையில் அவர் இருப்பார். சகோதரன் பீலர் இங்கே அமர்ந்திருக்கின்றார். அவரும் கூட ஒருக்கால் நாளைய தினத்தில் எங்காவது ஓரிடத்தில் இருப்பார். இங்கே உள்ள மனிதரும் வேறு சில சபைகளில் பிரசங்கிப்பதற்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நான் யூகிக்கின்றேன்.  6. இப்பொழுது, ஆராதனையில் இருக்கின்ற நீங்கள், எங்களுடன் வருகை தந்திருப்பவர்கள், என்னே, நீங்கள் - நீங்கள் ஒரு நல்ல சபையைக் கண்டு நாளை காலை சபைக்குச் செல்லுங்கள். இங்கே இருக்கின்ற இந்த எல்லா போதர்களும், இங்கே அட்லா அல்லது மகோனைச் சுற்றிலும் உள்ள இந்த முழு சுவிசேஷ சபைகளின் சார்பாக இங்கே வந்துள்ளனார். தங்களுடைய சபைகளில் நீங்கள் ஆராதிப்பதற்காக மிக்க மகிழ்ச்சிக் கொள்வார்கள்.  7. இங்கே சிறிய சகோதரன் பாமரைத் தவிர வேறு எந்த சகோதரரையும் சந்திக்க எனக்குத் தருணம் கூடக் கிடைக்கவில்லை. ஒருக்கால் இரண்டு சகோதரரின் கைகளைநான் குலுக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாரும் சகோதரன் பாமரைப் போல இருப்பார்களானால், அவர்கள் எல்லோரும் அருமையான மக்களாவர் - நான் அதை உங்களுக்குக் கூறுகிறேன். அவர்களெல்லாரும் மிகவும் அருமையானவர்கள். மிக அருமையான சகோதரர் ஆவர்.  8. ஆகவே இப்பொழுது, நாளை நாடு முழுவதுமாக - முழுவதுமாக அருமையான ஆராதனைகள் நடக்க விருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். நாளை உங்கள் உத்தியோகத்தின் ஸ்தானத்தில் நில்லுங்கள். சரி; நாளை ஞாயிறு பள்ளிக்குச் செல்லுங்கள். நாம் பார்ப்போம்... நாளை மதிய ஆராதனைகள் இங்கே இருக்கின்றன என்று நான் யூகிக்கின்றேன். அது சரி தானே? நாளை மதியம்? (யாரோ ஒருவர் “நாளை இரவு” என்று கூறுகின்றார் - ஆசி) நாளை இரவா? ஓ அவர்கள் மாற்றம் செய்துள்ளனர் ..... அப்படியானால் நீங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த ஆராதனையானது எப்படி? ஓ, நாளை இரவு இங்கே ஆராதனைகள் உள்ளன. சரி, இப்பொழுது, கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக என்பதே எங்களுடைய உத்தமமான ஜெபமாக இருக்கின்றது. இப்பொழுது, சிறிது நேரம் தியானிக்கத்தக்கதாக நாம் எடுத்திருக்கும் பொருளானது, அதை நாங்கள் மறுபடியும் கூற விரும்புகிறோம்; அவர் செய்திருக்கின்ற எல்லாவற்றிற்காகவும் நம்முடைய அருமையான கர்த்தருக்கு நாங்கள் மிகப்பெரிய நன்றியைச் செலுத்துகிறோம்.  9. இப்பொழுது, இவ்வளவு நாட்களாக நடந்துள்ள எந்த ஒரு அமெரிக்கக் கூட்டத்திலும், முடக்குவாதத்தினால் முழுவதுமாக உடல் செயலிழந்து முடங்கிப்போயிருந்த நிலையில் இருந்த ஐந்து பேர்கள் ஒரே கூட்டத்தில் சுகமாக்கப்பட்டது என்பது நம்முடைய கர்த்தர் நமக்கு இந்த வருட முழுவதிலும் செய்துள்ள மகத்தான காரியங்களில் இதுவும் ஒன்று என்று நான் விசுவாசிக்கின்றேன். இப்பொழுது, ஆப்பிரிக்காவில் அல்லது இந்தியாவின் மற்றையபிரதேசங்களிலும் நடந்தவைகள் அல்லது அதைப் போன்ற ஒன்று நடக்கிறதென்றால், அது வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ஆனால், இங்கே அமெரிக்காவில் அநேக ஆராதனைகள் நடந்துக் கொண்டிருப்பதால்... ஆனால் ஒரே காரியம், நாம் பத்து இரவுகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. நாம் வழக்கமாக இங்கேயும் அங்கேயுமாக மூன்று முதல் ஐந்து இரவுகள் கூட்டம் நடத்தி விட்டு பிறகு அங்கிருந்து சென்று விடுவோம். ஆகவே, நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் மகத்தான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகின்றேன் என்பதை நீங்கள் காணவும், அறிந்துக் கொள்வதற்காக மாத்திரமே, நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.  10. மக்களில் அநேகம் பேர் சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்கள் கூறுகின்றனர். எல்லாவிதமான வியாதிகளும் மற்றும் சுகமாக்கப்பட்ட எல்லாவற்றையுங்குறித்து மக்கள் சாட்சிக் கொடுப்பதை இன்று சகோதரன் உட் மற்றும் அவர்களும் என்னிடமாகக் கூறினார்கள். கட்டிலின் மேல் கிடத்தப்பட்ட அநேகர் ...... இன்றிரவு ஒரு கட்டில் கூட இருக்குமா என்று நான் வியக்கின்றேன். கட்டிலில் கிடத்தப்பட்டவர்களையும் மற்றவற்றையும் தேவன் முற்றிலுமாக சுகப்படுத்தி கட்டில்களை அப்புறப்படுத்தி விட்டார். அது அற்புதமானதல்லவா?  11. கூறப்போவோமானால், கடந்த மாலை வேளையில், பிரசங்க மேடையின் மேல் வந்து கொண்டிருந்தவர்களின் முதலாவதாக வந்தவரின் காரியமானது மிகவும் மோசமான, பரிதாபத்திற்குரிய நிலையிலிருந்தது என்று கூறுகின்றேன். கடந்த சில இரவுகளாக ஒரு பெண், தலை மிகப்பெரிதாக வீங்கின நிலையில் இருக்கும் “வாட்டர் ஹெட்” என்னும் வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்த (Water head) தன்னுடைய குழந்தையுடன் உட்கார்ந்திருந்ததை நான் கவனித்தேன். மருத்துவ ஆராய்ச்சியின்படியோ, விஞ்ஞான ஆராய்ச்சியின்படியோ அந்த குழந்தைக்கு ஒன்றுமே செய்துஉதவ முடியாதிருந்தது. அக்குழந்தைகளால் முற்றிலுமாக ஒன்றுமே செய்ய முடியாது. அந்த ஏழைத்தாய் மிக ஆர்வமுடையவளாக ஒவ்வொரு இரவும் அந்த சிறு பையனை துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு வந்தாள். அது அழுதுக்கொண்டே இருந்தது. நான் அந்த சிறு குழந்தையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், பிரச்சனை என்ன என்பதை என்னால் காணமுடிந்தது. தரிசனங்கள் அநேக தடவைகள் பேசுகின்றன; நான் அவைகளைக் குறித்து ஒன்றும் பேசுவது கூட கிடையாது.  12. சற்று முன்னர் ஒரு நபர் என்னை தொலைபேசியில் அழைத்தார், முன்னொரு இரவு அந்த நபரை நான் உணவு விடுதியில் சந்தித்தேன். அப்பொழுது கர்த்தர் அவரிடம் இருந்த தவறு என்ன என்று என்னிடம் கூறினார். அந்த நபர் என்னை தொலைபேசியில் அழைத்து "உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்னை ..... நான் உங்களைக் கண்டது முதல் என் உடல் நலம் அதிகமாக மேம்பட்டது” என்றார். அவரிடம் இருந்த தவறு என்ன என்று ஏற்கெனவே நான் அவருக்குக் கூறியிருந்தேன்; அவருக்கு ஏறக்குறைய மயக்கம் வந்துவிட்டது. உங்களுக்குத் தெரியுமா ..... அப்பொழுது அவர் .... அது தான். நீங்கள் கவனிக்க மாத்திரம் செய்யுங்கள்; அது எப்படியாயினும் நடக்கப் போவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, அதைக் குறித்து அவர்களுக்குத் தெரியுமா என்பதில் முக்கியத்துவம் எதுவுமில்லை, அது சரியாகி விடும் என்று தேவன் கூறியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருப்பது தான் காரியம் ஆகும். ஆகவே, நீங்கள் பாருங்கள், அது - அது காரியத்தை முற்றுப் பெறச் செய்யும். மக்கள் அதை அறிந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்பது காரியம் அல்ல. தேவன் அதைக் கூறியுள்ள போது, சரி, ஆமென், அதை அப்படியே விட்டு விடுங்கள்; ஒரு சிறு ஊக்குவித்தலானது அவர்களுக்கு உதவியாக இருக்குமென்று நீங்கள் நினைப்பீர்களானால் அப்பொழுது நீங்கள் சிலகாரியங்களைக் கூறுவீர்கள். 13. ஆனால் இந்த சிறு குழந்தை பிரசங்க மேடைக்கு வந்தது, அதனுடைய தலை மிகப் பெரியதாக வீங்கியிருந்தது, அது மிகவும் களைப்புற்றிருந்த தன்னுடைய சிறிய ஏழைத்தாயின் மீது சாய்ந்துக் கொண்டிருந்தது. நான் என் கரங்களை அந்த குழந்தையின் மீது வைத்த போது, அந்த ஒளியானது அந்தக் குழந்தையின் தலையின் மேலே சுழன்றதை நான் கண்டேன், ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகின்றது என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆகவே, நான் அந்தத் தாயிடம் குழந்தையை வீட்டிற்குக் கொண்டு செல்வாளா என்று கேட்டேன்; அப்பொழுது அதற்கு ஏதோ ஒன்று சம்பவித்தது என்று நான் அறிந்திருந்தேன். அந்த தாயிற்கு அதை நிரூபிக்க ஏதோ ஒன்று என்னிடம் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும். ஆனால் நான் அவளிடமாகக் கூறினேன், நான், “நீ குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குக் செல் ...'' என்று கூறினேன். அவள் நகரத்திற்கு வெளியே இருந்தாள், சுமார் நூறு மைல்களுக்குப்பால் என்று அவளிடம் கூறினேன் என்று நான் நம்புகிறேன்.  14. ஒரு இரவு கூட்டத்திற்குக் குழந்தையைக் கொண்டு வருவதற்காக அவள் சுமார் இருநூறு மைல்கள் பிரயாணம் செய்கின்றாள், அவள் வீடு சென்றாள், நான் அவளிடம், “குழந்தையின் தலையைச் சுற்றி ஒரு கயிறை வைத்து கயிறின் அளவைக் குறித்துக் கொள். பிறகு அந்த அளவின்படி கயிறை வெட்டு; பிறகு அடுத்த இரவு அந்த கயிறை தலையில் சுற்றி வை, நாளை இரவு, பிறகு குழந்தையின் தலை எவ்வளவாக சுருங்கினது என்று கயிற்றில் அளவெடுத்து என்னிடமாக அந்தக் கயிற்றைக் கொண்டு வா” என்று கூறியிருந்தேன். ஆகவே சுமார் பதினெட்டு அல்லது இருபது மணி நேரம் சென்றது. இதோ சுமார் ஒன்றை அங்குலம் அளவு கொண்ட கயிறு, சுமார் பதினெட்டு மணி நேரத்திற்குள் குழந்தையின் தலை சுருங்கினது. குழந்தையுடன் அந்தத் தாய் இன்றிரவு இங்கே இருக்கின்றாளா ... ஓ அவள் ஏற்கெனவே ... இதோ அந்தத் தாய் இங்கே இருக்கின்றாள். அது சரி. அது சரி. சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 15. இப்பொழுது, சகோதரியே, நான் அவ்வாறு செய்ததன் காரணம் என்னவென்றால்; நீங்கள் சிறிது ஊக்குவிக்கப் படுவீர்கள் என்பதற்காகவே. நான் - நான் - நான் பெற்றிராத அநேக காரியங்களுக்காக நான் ஜெபித்துள்ளேன், ஆனால் இன்றிரவு நம்முடைய சிருஷ்டிகருக்கு முன்பாக நான் அவிசுவாசிப்பதில்லை, இன்னும் உத்தமமாகவே நான் கேட்பேன். நான் கேட்கின்றதை அவர் எனக்குக் கொடுக்கும் வரையிலும் அல்லது நான் கேட்கின்ற காரியத்தை அவராலே ஏன் கொடுக்க முடியாது என்று என்னிடமாக அவர் கூறுகின்ற வரையிலும் நான் தேவனிடமாக அந்தவிதமான உத்தமத்துடனே எந்த ஒரு காரியத்தையும் நான் கேட்பேன்.  16. இப்பொழுது ஒன்றரை அங்குல அளவு, அந்த சிறிய ... அந்தக் குழந்தையின் தலை சுமார் பதினெட்டு அல்லது இருபது மணி நேரத்திற்குள் சுருங்கினது. அது உங்களை ஊக்குவிப்பதற்காகவே, பாருங்கள். இப்பொழுது, அப்படியே விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், பாருங்கள், இப்பொழுது, அது - அது சுமார் எழுபத்திரண்டு மணி நேரங்களுக்கு அப்படியாக சுருங்கிக்கொண்டே இருக்கும். பிறகு நீங்கள் கவனிப்பீர்கள் - நீங்கள் அந்த கயிற்றின் அளவை வெட்டிக் கொண்டேயிருங்கள். அது நின்று போகும். ஒரு வேளை சிறிது நேரத்திற்கு மோசமாகவும் ஆகலாம், என்ன நடந்தாலும் சரி, நீங்கள் விசுவாசித்துக் கொண்டேயிருங்கள், புரிகின்றதா? நீங்கள் உங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கும் வரைக்கும்...  17. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், ஒரு அசுத்த ஆவியானது ஒரு நபரிலிருந்து வெளியே சென்ற உடன் அது வறண்ட நிலங்களில் நடந்து திரிந்து தன்னை விட இன்னும் மோசமான ஏழு ஆவிகளுடனே திரும்பி வரும், அதனால் முடியுமானால், உள்ளே சென்று முழு கட்டுக்குள் காரியங்களை எடுத்துக் கொள்ளும், அப்பொழுது நிலைமையானது மிகவும் மோசமாக மாறும். ஆனால் அந்த வீட்டின் நல்ல மனிதன் அங்கே இல்லையென்றால், அதை அப்படியே புறம்பேவைக்கின்ற உங்கள் விசுவாசமாகிய அது ..... அதை எதிர்த்துச் சண்டையிட வேண்டாம். அது திரும்பி உங்களிடம் சண்டையிடும். அதை அப்படியே புறம்பே தள்ளுங்கள், அதற்கு கவனம் செலுத்தாமல் அப்படியே விட்டு விடுங்கள். அவ்வளவு தான். அப்படியே தொடர்ந்து முன்னே செல்லுங்கள். அது முடிந்து போன ஒன்று என்று சொல்லுங்கள்; அது நல்லதாக முடியும். உங்கள் குழந்தை முழுவதுமாக சரியாகிவிடும். இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.  18. இப்பொழுது இன்றிரவு ... நான் வார்த்தையை மிகவும் நேசிக்கிறேன். நீங்களும் கூட வார்த்தையை நேசிக்கிறீர்கள் அல்லவா? விசுவாசம் கேள்வியினாலே வரும், வார்த்தையைக் கேட்பதினால் வரும். நான் இன்றிரவு ஒரு சிறிய பொருளிற்காக, சிறிய பகுதியை இங்கே வாசிக்க விரும்புகிறேன். யாத்திராகமம் 4வது அதிகாரத்திலிருந்து நாங்கள் வாசிக்க விரும்புகிறோம், கர்த்தருக்கு சித்தமானால் 2-வது வசனத்திலிருந்து ஆரம்பித்து வாசிப்போம். நாம் 2ஆம் வசனமும் 3ஆம் வசனத்தின் ஒரு பகுதியையும் ஒருக்கால் வாசிப்போமாக. கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையில் போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்ட போது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப்பிடி என்றார் ; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்த போது அது அவன் கையிலே கோலாயிற்று. இப்பொழுது, இதின் ஆக்கியோனிடமாக பேசும் போது, ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை சற்று வணங்குவோமாக, பிறகு இந்த கைக்குட்டைகளுக்காக ஜெபிப்போமாக. 19. எங்கள் அன்புள்ள பரலோகப் பிதாவே, இங்கே இன்றிரவு இந்த வானத்தின் கூரையின் கீழே மறுபடியுமாக கூடி வந்து, எங்களுக்கு ஒத்தாசை வருகின்ற பரலோகத்தை மேல் நோக்கிப் பார்க்கவும், மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். எங்களுடைய ஒத்தாசை கர்த்தரிடத்திலிருந்து வருகின்றது. அவர் இன்றைக்கும் ஜீவித்து அரசாளுகிறார் என்றும், இன்னுமாக தம்முடைய சபையை தம்முடைய உயிர்த்தெழுதலின் சாட்சியில்லாமல் விடவில்லை என்று அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறோம்.  20. இன்னும் சில நிமிடங்களில் உம்முடைய சித்தமாயிருக்கும் பட்சத்தில், நாங்கள் இப்பொழுது பேசவிருக்கின்ற இஸ்ரவேல் புத்திரர் எவ்வாறு தங்கள் பாரங்களினூடாக கடந்து சென்றார்கள், யோசேப்பின் எலும்புகள் வைக்கப்பட்ட பெட்டகத்திற்குள்ளாக உற்றுப் பார்த்தார்கள், என்றாவது ஒரு நாளிலே அவர்கள் வெளியே செல்லப் போகின்றார்கள் என்று தேவன் தாமே அந்த தீர்க்கதரிசியின் மூலமாக வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று அறிந்தவர்களாக, அங்கே யோசேப்பினுடைய எலும்புகளைப் பார்த்தார்கள் என்பதைப் போல நாங்களும் இருக்கிறதற்காக இன்றிரவு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர் களாக இருக்கின்றோம். ஆகவே இன்றிரவு, செழிப்பின் குமாரனாகிய யோசேப்பிற்கு நிழலாக, கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து இன்றிரவு ஜீவிக்கின்றவராக நம் மத்தியில் ஒரு தெய்வீக அத்தாட்சியாக இருக்கின்றார், ஒரு நாளிலே நாங்கள் வெளியே செல்லப்போகிறோம், சாத்தான் மற்றும் அவனுடைய வல்லமைகள் யாவும் இருக்கின்ற இந்த பிரச்சனை மற்றும் பாவத்தின் உலகிலிருந்து வெளியே செல்லப் போகின்றோம், நாங்கள் அவனிடத்திலிருந்து என்றைக்குமாய் விடுவிக்கப்படுவோம்.  21. இப்பொழுதும் கர்த்தாவே, நான் இந்த வார்த்தையின் பேரில் தியானிக்கையில், பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து வார்த்தைக்குள்ளாகச் சென்று அதை ஒவ்வொரு இருதயத்திற்கும் பகிர்ந்தளிப்பாராக, இது இன்றிரவு எங்களுக்குத் தேவையாயிருக்கின்றது. ஆகவே அவர் தாமே அப்பத்தைப் பிட்டு அந்த நாளிலே ஒரு சாதாரண போதகர் செய்ததிலிருந்து சற்று வித்தியாசமான ஒன்றைச் செய்த போது எம்மாவுவிலிருந்து வந்தவர்கள் கூறினது போல நாங்களும் கூறுவோமாக... அவர் மாத்திரமே அதைச் செய்ய முடியும் என்கின்ற விதத்தில் செய்தார். ஆகவே, பிதாவே, ஒவ்வொரு நாளும் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு மதப்பிரகாரமான ஆராதனைகளிலும் நாங்கள் காண முடியாத ஒன்றை இன்றிரவு அவர் தாமே சாதாரணமாக ஒன்றில் விசேஷமானதைச் செய்யும் படியாக நாங்கள் ஜெபிக்கின்றோம். அதனாலே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அதே இயேசுகிறிஸ்து தாமே இன்றிரவு உள்ளே நடந்து வந்து, மக்களின் மத்தியில் நடந்து அப்பொழுது செய்த அதே காரியங்களை இப்பொழுதும் செய்வதை மக்கள் தாமே காணுவார்களாக, பிதாவே, இதை அருளும்.  22. இங்கே வைக்கப்பட்டிருக்கின்ற கைக்குட்டைகள், ஏழை, எளிய, வியாதிப்பட்ட பிள்ளைகள், தந்தைகள், தாய்கள், பிசாசின் ஒடுக்குதல் மற்றும் வியாதிகளால் அவதியுற்று வெளியே படுத்துக் கிடக்கின்ற அநேக மக்களுக்கு அறிகுறியாக, பிரதிநித்துவமாக இருக்கின்றது. இந்த கைக்குட்டைகள் எந்த மக்களின் மீது வைக்கப்பட்டிருக்கின்றதோ, அந்த மக்களை கட்டியிருக்கின்ற ஒவ்வொரு பிசாசின் வல்லமையையும், ஒவ்வொரு அசுத்த ஆவியையும் கடிந்து கொள்கையில், பிதாவே, அவைகளின் மீது ஜெபத்தோடே கைகள் வைக்கப் பட்டிருக்கையில், நீர்தாமே எனக்கு செவிகொடுத்து, கர்த்தாவே, என் இருதயத்தின் நேர்மையை நீர் தாமே அறிந்துக் கொள்ளும்படிக்கு நான் ஜெபிக்கின்றேன். இந்த கைக்குட்டைகள் தாமே அவர்களின் மீது வைக்கப்படுகையில், கர்த்தாவே, அவர்கள் தாமே விடுவிக்கப்பட்டு, களிகூர்ந்துக் கொண்டு தங்கள் வழிகளிகளிலே செல்வார்களாக, சாத்தான் கட்டப்பட்டு புறம்பே இருளிலே தள்ளப்படுவானாக. பிதாவே, இதை அருளும். இந்த ஆராதனையில் இன்னுமாக வரவிருக்கின்ற பகுதியிலே அதிகமாக அறிந்துக்கொள்ள எங்களுக்கு உதவிசெய்யும், இதை இயேசுவின் நாமத்திலே கேட்கின்றோம், ஆமென்.  23. இப்பொழுது, நாம் இங்கே கர்த்தருடைய வார்த்தையின் பேரில் சிறிது நேரம் தியானிக்கையில், நான் நம்புகிறேன் ஒவ்வொருவரும் . . . நான் வேகமாக கடந்து செல்ல முயற்சிக்கின்றேன், காற்றானது சிறிது குளிராக வியாதியுற்ற மக்களின் மீது அடிக்கின்றது என்பதை நான் அறிந்திருக்கின்றேன். ஆகவே நான் சீக்கிரமாக முடிக்க முயற்சிக்கின்றேன். ஒருக்கால் நாளை இரவு சற்று வெப்பமாக இருக்கும். அப்பொழுது நாம் சற்று நீண்ட நேரம் தரித்திருக்கலாம்.  24. முன்பொரு நாள் நான் வெளியே சென்றுக் கொண்டிருக்கையில் மேலே நோக்கிப் பார்த்தேன். திரு.உட்ட் மற்றும் நானும் சாலையில் பிரயாணித்துக் கொண்டிருக்கையில் ஏழை விவசாயிகள் தங்கள் சோளத்தை சுருட்டி வைத்து இருந்ததை நான் கண்டேன். நானும் சிறிது விவசாயம் செய்ததுண்டு, தர்பூசணிப்பழங்கள் மற்றும் காரியங்கள் இருந்தது, பஞ்சு உலர்ந்துக் கொண்டிருந்தது. நான் வீடு சென்று, “அருமையான தேவனே, தாங்கள் ஒரு திறந்த வெளிக் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளோம் என்பதை நான் அறிவேன், ஆனாலும் அந்த மக்களுக்கு சிறிது மழையை அனுப்பும். ஏனென்றால் அவர்களுக்கு மழை மிகவும் தேவையாயிருக்கின்றது” என்று நான் கூறினேன். அப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவின் சுயாதிபத்தியத்தைக் குறித்து யோசித்தேன். ஆராதனை ஆரம்பிப்பதற்கு முன்பு வரை அவர் மழை பொழியும்படிக்குச் செய்தார். நாம் ஆராதனையை நடத்தின் போது அவர் மழையை நிறுத்தினார், பிறகு கடந்த இரவு ஒரு நல்ல மழை பெய்யும்படிக்குச் செய்து நனையச் செய்தார். இன்றிரவு வானம் தெளிந்திருக்க கடந்த இரவு மழை பொழிந்து முடிக்கப் பண்ணினார். ஓ, என்னே, அவர் எவ்வளவு அற்புதமானவராக இருக்கின்றார். காரியத்தை எப்படி செய்யவேண்டுமென்று அவருக்குத் தெரியும், அவருக்குத் தெரியுமல்லவா? அதற்காக அவரை நாம் மிகவுமாக நேசிக்கின்றோம். அவர் எல்லாதுதிக்கும் பாத்திரராவார். இப்பொழுது, இன்றிரவு “உன் கையிலிருக்கிறது என்ன?” என்னும் பொருளின் பேரில் நான் சற்று நேரம் பேச விரும்புகிறேன்.  25. இப்பொழுது, இன்றிரவின் இந்த - நம்முடைய பொருளானது இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படி தேவன் உபயோகப்படுத்தின ஒரு மனிதனாகிய மோசேயைக் குறித்ததேயாகும். இன்றிரவு தேவனுடைய மக்கள் அநேகர் அடிமைத்தனத்தில் இருக்கின்றனர். 26. ஒரு தாய் குழந்தையுடன் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன், அக்குழந்தையின் கால்கள் சிறிது உருக்குலைந்து காணப்படுகிறது அல்லது ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டுள்ளதைப் போல காணப்படுகிறது. அக்குழந்தை தன் தாயின் அருகில் படுத்துக்கிடக்கின்றது. இங்கே ஒரு சிறு பையன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றான், அவன் ஒரு சிறு குழந்தையாவான், ஒருக்கால் போலியோ அல்லது வேறெதாவது ஒரு வியாதியினால் பாதிக்கப்பட்டிருக்கின்றான். அவனுடைய சிறு கால் எல்லாவிதமான பிணைப்புக்கட்டுகளாலும் முழுவதுமாக சுற்றப்பட்டிருக்கின்றன. ஒரு வாலிபப் பெண் இங்கே உட்கார்ந்திருப்பதை நான் கவனித்தேன். அழகான சிறிய பெண். அவள் தன்னுடைய இளம் வாலிபப் பிரயாயத்தில் இருக்கின்றாள், மேலும் அவளுடைய ஏழை வயதான தந்தை தன் உடல் முற்றிலுமாக வளைந்து வளைந்து மடங்கிப் போய் அந்த விதமாக சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடக்கின்றார். அது அடிமைத்தனமாகும். சாத்தான் அதைச் செய்துள்ளான். இங்கே ஒரு கருப்பு நிற சகோதரன் உட்கார்ந்திருக்கின்றார். யாரோ ஒருவர் அவரருகே உட்கார்ந்து அவரைப் பிடித்து...அல்லது, அவருக்கு அருகில் இருக்கின்றார். சாத்தான் மக்களை எந்த விதமான ஒரு அடிமைத்தனத்திற்குள்ளாக வைத்திருக்கின்றான் என்பதை சற்று நோக்கிப் பாருங்கள்.  27. தேவன் தாமே அந்த எபிரெயர்களை நேசித்தது போல உங்களையும் அதே விதத்தில் நேசிக்கின்றார். ஆகவே, தேவன் அங்கே மோசேயை அனுப்பினது ஏனென்றால் அவர் தாமே வந்து அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே எடுப்பார் என்று அவர் வாக்குத்தத்தம் செய்திருந்தார்...  28. இந்தக் கடைசி நாளிலே அவர் தாமே அந்த பரிசுத்த ஆவியாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய மத்தியிலே அனுப்பி எல்லா வியாதிப்பட்டவர்களையும், உபத்திரவப்படுகிறவர்களையும் விடுவிப்பார் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். ஏனென்றால் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, அவர் இந்த பூமியை விட்டுச் செல்வதற்கு முன்பு அவர் கூறின கடைசி வார்த்தைகள், அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கூறினார். எவ்வளவு தூரம்? அப்போஸ்தலர் காலம் வரைக்குமா? உலகமெங்கும். சுவிசேஷம் இன்னுமாக உலகமெங்கும் சென்றடையவில்லை. “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. அவர்கள் வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைத்தால் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். அதைத் தான் வேதாகமம் கூறியுள்ளது. 29. இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்; அதற்கு முன்பு அவர் சபைக்கு கடைசி கட்டளையை கொடுத்தாரானால் அது என்னவென்றால்; வியாதியஸ்தரை சுகமாக்குங்கள் என்பதேயாகும். அவர் சபைக்கு அளித்த முதலாவது கட்டளையே என்னவென்றால்; வியாதியஸ்தரை சுகமாக்குங்கள் என்பதே தான். அவர் தம்முடைய எழுபது பேரையும் மற்றும் பன்னிரெண்டு பேரையும் தெரிந்தெடுத்து அவர்களை அனுப்பினார், அசுத்த ஆவிகளுக்கு எதிராக வல்லமையும், பிசாசுகளைத் துரத்தவும், வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தவும் அவர்களுக்கு வல்லமையை அளித்தார், அது தான் முதலாவது கட்டளையாகும். கடைசி கட்டளை என்னவென்றால் உலகமெங்கும் போய் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்துங்கள் என்பதே தான். அந்த வேதவசனத்தைக் குறித்து பார்ப்போமானால், அநேக வேத சாஸ்திரிகள் அந்த வசனத்தை குறித்து விவாதித்து, தங்களுக்குள்ளே என்ன கூறிக்கொண்டார்கள் என்றால், இப்பொழுது நான் மேற்கோள் காட்டின மாற்கு 16, 9ஆம் வசனத்திலிருந்து இருப்பவைகள் ஆவியானவரால் ஊக்குவிக்கப் படாமல் எழுதப்பட்ட ஒன்று என்று கூறினார்கள்.  30. இது எனக்கு ஒன்றை நினைவுப்படுத்துகின்றது. பிரசங்க பீடமானது நகைச்சுவை செய்வதற்கான ஒரு இடமென்று நான் விசுவாசிப்பதில்லை. நகைச்சுவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிரசங்க பீடத்தைச் சுத்தமாக வைத்திருங்கள். நகைச்சுவைகள் அங்கே வெளியில் தான் கூறப்பட வேண்டும். ஆகவே நான் இப்பொழுது காட்டவிருக்கின்ற இந்த ஒரு சிறிய மேற்கோளானது உண்மையானது, இது ஒரு நகைச்சுவையைப் போலக் காணப்படும். ஆனால் அது நகைச்சுவை அன்று.  31. பிரதேசம் என்று நான் அழைக்கும் ஓரிடத்தில் ஒரு மனிதன் இருந்தான். ஊழியத்திற்கான அழைப்பைப் பெற்றவனாக அவன் இருந்தான். அவனுடைய தாயார் மிக அருமையான வயதான பெண் ஆவார்கள், அவன் ஒரு போதகனாகும்படிக்குஅவனை ஒரு வேதாகம கல்லூரிக்கு அவள் அனுப்பினாள். அவன் எப்படி பிரசங்கம் செய்ய வேண்டுமென்றும் மற்ற காரியங்களைக் கற்றுக் கொள்ளவும் கல்லூரிக்கு , வேதாகம கலாசாலைக்கு சென்றிருந்த வேளையில் அவனுடைய தாயார் வியாதிப்பட்டார்கள், மிகவுமாக வியாதிப்பட்டார்கள்; அவளுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. அப்பொழுது அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்தார்கள். அவர் வந்து அவரால் முடிந்த எல்லாவற்றையும் அவளுக்கு செய்தார். மருந்துகள் கொடுத்தார். அவளால் பென்சிலின் மருந்தை எடுக்க முடியவில்லை; அவள் உடம்பு அந்த பென்சிலின் மருந்தை ஏற்றுக் கொள்ளாதபடிக்கு ஒவ்வாமை (அலர்ஜி) அவளுக்கு இருந்தது. ஆகவே அந்த மருத்துவர் அவளுக்கு சல்ஃபா மருந்து மற்றும் வேறு சில மருந்துகளையும் கொடுத்தார்; ஆனாலும் அது வியாதியைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அந்த பெண்ணின் நுரையீரல்கள் மிகவுமாக சளியினால் அடைக்கப்பட்டது, அவளுடைய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆகவே, அவர்கள் அவனுக்கு ஒரு தந்தியை அனுப்பி அவன் தயாராக இருக்கும்படிக்கு கூறினார்கள், ஏனென்றால் அவனுடைய தாயார் உடனடியாக மரித்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் . . . அவன் வீட்டிற்கு வர வேண்டுமென்று விரும்பினர். அவன் அநேக மைல்களுக்கு அப்பால் தூரமாக இருந்தான்.  32. ஆனால் சடுதியாக ஒரு சமயம், என்ன, அங்கே மூலையில் ஒரு சிறிய பெண் வசித்தாள், அவள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருந்த முழு சுவிசேஷ சபையைச் சேர்ந்தவளாவாள், அவள் அந்த இடத்தின் மூலையில் வசித்து வந்தாள். ஆகவே, அவள் அந்த வயதான பெண்ணைக் காணச் சென்றாள், அப்பொழுது அவள் “சகோதரியே, எங்கள் மேய்ப்பரும் மற்றும் சபையில் உள்ள நாங்களும் விசுவாசிப்பது என்னவென்றால் வியாதிப்பட்ட மக்களை சுகப்படுத்தவே இயேசு மரித்தார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.உங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லையென்றால், எங்கள் மேய்ப்பர் வந்து உங்களுக்கு ஜெபிக்க அனுமதிக்கலாம் அல்லவா? ஒருக்கால் தேவன் அவருடைய ஜெபத்திற்கு பதிலளித்து உங்களை சுகப்படுத்தலாமே" என்று கூறினாள். அதற்கு அந்தப் பெண், “அது மிக அருமையான ஒன்றாக இருக்கும். அவரை வரச்சொல்லுங்கள்” என்று கூறினாள். ஆகவே அந்தப்பெண் அந்த மனிதன் அங்கே வந்து அவளுக்காக ஜெபித்தார், அப்பொழுது அவள் சுகமடைந்தாள்.  33. சுமார் ஒரு வருடம் கழித்து அவளுடைய மகன் வீட்டிற்கு வந்தான், சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவன், "அம்மா, சரி, நீங்கள் நிமோனியா காய்ச்சலினால் பீடிக்கப் பட்டிருந்த போது, எந்நேரத்திலும் புறப்பட வேண்டும் என்னும் நிலையில் இருந்தேனே, ஆனால் நீங்கள் மிகச் சீக்கிரமாக சுகமடைந்து விட்டீர்களே, எந்தவிதமான ஒரு மருந்தை அந்த மருத்துவர் கொடுத்தார் என்று நீங்கள் எனக்கு கூறவில்லையே என்று கேட்டான். அதற்கு அவள், “ஓ, மகனே, அதை நான் உனக்குக் கூற மறந்து விட்டேன். அங்கே மூலையில் இருக்கின்ற அந்த சிறு மிஷன் சபையைக் குறித்து உனக்குத் தெரியுமா?” என்றாள். அதற்கு அவன், “ஆமாம்” என்றான்.  34. அவள், “உனக்குத் தெரியுமா, அந்த பெண் இங்கே வந்தாள், தன்னுடைய மேய்ப்பர் வந்து எனக்காக ஜெபிக்கும்படிக்கு நீ அனுமதிக்க வேண்டும்” என்றாள். மேலும் அவள், “இதோ பார், அவர் இங்கே வந்து வேதாகமத்தில் மாற்கு 16ஆம் அதிகாரத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்தார். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது, அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று வாசித்தார், இதோ, கர்த்தர் உடனடியாக என்னை சுகப்படுத்தினார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கூறினாள். இன்னும் அவள் கூறினாள்..... 35. அப்பொழுது அந்தப் பையன், “இதோ பாருங்கள் அம்மா, சற்று கவனியுங்கள், அந்த மக்கள் எழுதப்படிக்கக் கூட தெரியாதவர்களாயிற்றே, பாருங்கள், அவர்களால் புரிந்துக் கொள்ளவே முடியாதே. நாமோ. . . தெய்வீக சுகமளித்தல் என்கின்ற காரியமானது வேதாகமத்தில் கிடையவே கிடையாது. அது கடந்த நாட்களுக்குரிய ஒன்றாகும். இதோ பாருங்கள், எங்களுடைய வேதாகமக் கல்லூரியில் நாங்கள் கற்றுக்கொண்டது என்னவென்றால் மாற்கு பதினாறாம் அதிகாரம் 9ஆம் வசனத்திலிருந்து இருப்பவை ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்டதன்று என்பதே” என்று கூறினான். அந்த சிறிய தாய், “உம், அல்லேலூயா” என்று கூறினார்கள். அதற்கு அவன், "அம்மா", என்றான், மேலும் அவன், "என்ன நீங்களும் அந்த மக்களைப் போலவே நடந்துக் கொள்கிறீர்களே” என்று கூறினான். அவள், “ஆம், தேவனுக்கு மகிமை” என்று கூறினாள். அவன், “ஓ, அம்மா, உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டான்.  36. அப்பொழுது அவள், “நான் சற்று சிந்தித்துப் பார்த்தேன்; ஊக்குவிக்கப்படாத வார்த்தையைக் கொண்டு கர்த்தரால் என்னை சுகப்படுத்த முடியுமானால், அது ஊக்குவிக்கப்பட்ட வார்த்தையாக இருக்குமானால் அவர் என்னவெல்லாம் செய்வார்?” என்று கூறினாள். ஊக்குவிக்கப்பட்ட... ஆகவே அது சரி தான். அது முழுவதுமே ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட்டு எழுதப்பட்ட ஒன்று என்று நான் விசுவாசிக்கின்றேன், அதனுடைய ஒவ்வொரு சிறு துண்டு கூட ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே அது நம்மெல்லாருக்கும் சொந்தமானதாகும், அதனுடைய ஒவ்வொரு துணிக்கையும் நமதாகும். 37. நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை அல்லது எந்த ஒரு காரியத்திலும் குறையே இல்லை. இந்த பிரயாணத்திற்கு நமக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் அளித்துள்ளார். சரியாக இங்கே நமக்கு அவர் அளித்துள்ளார். ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறக்கும் போது, அவன் தன்னுடைய பிரயாணத்திற்குத் தேவைப்படும் காரியத்தை பெற்றுக்கொள்ள ஒரு காசோலைப் புத்தகத்தை (Cheque Book) கர்த்தர் அவனுக்கு அளிக்கின்றார்: ஒவ்வொரு காசோலையின் கீழே, எந்த ஒரு மீட்பின் ஆசீர்வாதத்திற்கும், இயேசுவின் நாமத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது. நீங்கள் அந்த காசோலையில் எழுதி அனுப்ப மாத்திரம் செய்தால் போதும். அந்த காசோலையில் எழுதப்பட்டுள்ளதிற்குரியதை அவர் அளிப்பதைப் பாருங்கள். அது சரியே. அதை அங்கே அனுப்ப மாத்திரம் - மாத்திரம் செய்யுங்கள் ; அது அங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள உங்களுடைய டெபாசிட் (Deposit), வைப்புத் தொகையாகும். அந்த வைப்புத் தொகை ஏற்கனவே அங்கே இருக்கின்றது. அந்த வைப்புத் தொகை கல்வாரியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது: நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம் (were healed)” முழுவதுமாக அது அவருடைய இரத்தத்தினாலே கையொப்பமிடப்பட்டுள்ளது; ஆகவே எல்லாம் முடிந்து விட்டது. விருப்பமுள்ளவன் யாராயிருந்தாலும் வரக்கடவன். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றிரவு நம் மத்தியில் உயிருடன் இருக்கின்றார் என்று இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.  38. அடிமைத்தனத்திலிருக்கின்ற நமக்கு அவர்தான் நம்முடைய விடுவிப்பவர் ஆவார். நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அடிமைத்தனத்தில் இருக்கின்ற எந்த ஒரு நபரையும் இன்றிரவு அவர்களை விடுவிக்க இயேசு கிறிஸ்து இங்கேஇருக்கின்றார். இப்பொழுது, உங்களை விடுவிக்க நான் இங்கே இல்லை; ஏனென்றால் என்னால் அதைச் செய்ய முடியாது. அதைச் செய்வதற்கு நான் அனுப்பப்படவில்லை. சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காகவே தான் நான் அனுப்பப் பட்டுள்ளேன். அவ்வளவு தான். கிறிஸ்து தான் விடுவிக்க வந்துள்ளார்.  39. இப்பொழுது, மோசே, அவன் குழந்தையாக அப்பொழுது தான் பிறந்திருந்தான்.... அவன் பிறந்த சூழ்நிலையானது எகிப்தில் பிறப்பதென்பது மிகவும் அபாயகரமான ஒன்றாக இருந்தது; எல்லா ஆண் குழந்தைகளையும் அவர்கள் சாகடித்துக் கொண்டிருந்தனர். சரியாக அந்த நேரத்தில் தான் மோசே பிறந்தான். அந்தக்குழந்தையானது மிகவும் அழகான ஒன்றாக இருந்ததை அந்தத் தாய் கண்டாள், பார்வோனின் மிரட்டல்களுக்கும், அப்பொழுது பிறந்த குழந்தைகளுக்கு அவன் செய்ததைக் குறித்தும் அவள் பயப்படவேயில்லை.  40. இப்பொழுது, உங்களால் காணக்கூடுமானால், நண்பர்களே, நான் ஆரம்பிக்கையில் இதை நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலுக்கு முன்னதாகவே இருக்கின்றன. அது தான் தொல்லைகளைப் பிறப்பிக்கின்றன, பாருங்கள். எந்த ஒரு காரியத்தையும் போலியாகச் செய்ய முயற்சிக்காதீர்கள்; தேவனுடைய ராஜ்யத்தில் என்னவாக நீங்கள் இருக்கின்றீர்களோ அந்த விதமாக மாத்திரமே நீங்கள் இருங்கள். நீங்கள் ஒரு விரலாயிருந்தால், விரலாகவே மாத்திரம் இருங்கள். நீங்கள் ஒரு மூக்காக இருப்பீர்களானால், மூக்காகவே இருந்து விடுங்கள்; கண் என்றால், கண்ணாக இருங்கள். என் விரல் கண்ணாயிராததினால் என் விரல் விரலாக இருக்கக்கூடாது என்று தீர்மானிப்பதில்லை என்று நான் நம்புகிறேன். அது சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்துவிடும். நிச்சயமாக அது என்னை செயல்பாட்டிலிருந்து சற்று அப்பாலே வைக்கும். ஆகவே நம்முடையஸ்தானங்களையெல்லாம் அந்த விதமாகத் தான் நாம் பெற்று முன்னே செல்ல வேண்டும். ஆகவே எல்லாம் ஒன்று சேர்ந்து தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாக ஆகின்றது, என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.  41. இப்பொழுது, வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே இருக்கின்றது என்பதைக் காண்பிக்கின்றது. இயேசுவைப் பாருங்கள், ஏதேன் தோட்டத்திலிருந்து வந்த ஸ்திரீயின் வித்தாக அவர் இருந்தார். அவர் தேவன், குமாரனாக பிறந்தார். மோசே, அவன் பிறக்கையில் மிகவும் அழகான ஒரு குழந்தையாக இருந்தான், விடுவிக்கிறவனாக இருக்கும் படியாகப் பிறந்தான். அவன் தீர்க்கதரிசியாகத் தான் இருந்தாக வேண்டும், அது அவனுக்கென்று வகுத்தளிக்கப்பட்ட ஒன்று, அவனால் அதற்கு எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது. அவனுடைய பிறப்பிலேயே ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படிக்கு தேவன் அவனுக்குச் செய்திருந்தார். யோவான் ஸ்நானகனைப் பாருங்கள், அவன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே: வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக அவன் இருந்தான்.  42. எரேமியாவைப் பாருங்கள், எரேமியா 1:4, என்று நான் நம்புகிறேன். தேவன் எரேமியாவிடம், ''நான் உன்னை அறிந்தேன், உன்னைப் பரிசுத்தப்படுத்தி உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன், நீதாயின் வயிற்றில் உருவாகு முன்னே உன்னை அறிந்தேன்” என்று கூறினார். இப்பொழுது, நீங்கள் முன்குறித்தலிலும், முன்னறிதலிலும் விசுவாசம் வைத்துத்தானாக வேண்டும். நீங்கள்... அது அங்கே இருக்கின்றது.  43. வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதலில்லாமலேயே இருக்கின்றன. (ஆங்கில வேதாகமத்தில் மனந்திரும்புதல் இல்லாமலே without repentance, என்று கூறப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அதைத்தான் தேவன் சபையில்அமைத்திருக்கின்றார். கரங்களை வைத்து ஆவிக்குரிய வரங்களை அளிப்பது என்பதைக் குறித்து பின்மாரி மழை சபையின் சகோதரரிடம் நான் சிறிது வித்தியாசப்படுகிறேன். நீங்கள் அதைத் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன், பாருங்கள், ஆனால் அது பரவாயில்லை; அதன் பேரில் நாம் மிகவுமாக தர்க்கம் பண்ணப்போவதில்லை, ஆனால் அதன் பேரில் நீங்கள் தவறாகத் தான் இருக்கின்றீர்கள் என்று நான் நம்புகிறேன், பாருங்கள்.  44. பவுலும் தீமோத்தேயுவும், தீமோத்தேயு ஒரு ஊழியக்காரனென்றும் வரம் பெற்ற மனிதனென்றும் அவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அந்த விதமாக இருக்கும் ஒரு மனிதனை நாங்கள் காண்கையில் அவன் மீது கைகளை வைக்கும்படிக்கு, பாப்டிஸ்ட் சபையில் அதே காரியத்தைத் தான் நாம் செய்கின்றோம், மற்ற எல்லா சபைகளிலும் அவ்விதமாகத்தான் செய்கின்றனர். ஆனால் அவனுக்கு ஒரு ஆவிக்குரிய வரத்தை அளிப்பதற்கு அல்ல, அவனுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தை அளித்து தேவன் அவனுக்கு அளித்திருக்கும் வரத்தைக் கொண்டு ஊழியம் செய்யும்படிக்கு அவனை ஆசீர்வதித்தலே தான். அது தான் வித்தியாசமாகும். உங்களுக்குப் புரிகின்றதா. ஆகவே, நீங்கள் ஒரு முயற்சியை எடுத்து அவனுக்கு ஒரு வரத்தை அளிக்க முனைவீர்களானால், (பாருங்கள்), அதைத் தான் மனிதன் செய்கின்றான், அது ஒரு போதும் கிரியை செய்யவே செய்யாது. இது வரை அக்காரியமானது வெற்றிகரமானதாக இருந்ததில்லை. இனிமேலும் அது வெற்றிகரமானதாக இருக்காது என்றே நான் நினைக்கின்றேன்.  45. இப்பொழுது - . . ஆனால் தேவன் எந்த ஒன்றையும் செய்யும் போது, அது வித்தியாசமானதாகும். தான் மோசே என்பதை மோசே உணர்ந்து கொண்டான். தேவன், எப்படியாக அவர் அவனைப் பாதுகாத்து அவனை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். அவன் வயது சென்ற போது, மக்கள் தான் கூறுவதை நிச்சயமாக புரிந்துக் கொள்வார்கள் என்றும், புரிந்துக் கொள்ளுவதற்கான ஆவிக்குரிய மனதையும் கொண்டிருப்பார்கள் என்றும் அவன் எண்ணினான்.  46. இப்பொழுது, நமக்கு நேரமிருந்திருக்குமானால், சீதோஷணமானது மிகவும் குளிராக இல்லாதிருக்குமானால் நன்றாக இருந்திருக்கும், நான் சிறிது சமயத்திற்கு பேசும்படியாக ஒரு பகுதியை வைத்திருக்கின்றேன். மக்கள் அதைப் புரிந்துக் கொள்ளும்படிக்கு தவறிவிட்டார்கள், மிகவுமாக தவறி விட்டார்கள். அவர்களை விடுவிக்கும் படிக்காக அனுப்பப் பட்டவன் தாமே தான் என்று மக்கள் - தன்னுடைய சொந்த மக்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று நினைத்து அவன் அந்த எகிப்தியனை கொன்று வீழ்த்தினான், ஆனால் அவர்கள் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை.  47. இப்பொழுது, பிறகு என்ன நடந்ததென்று நாம் காண்போமானால், அவன் மீதியான் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனான், அங்கே சிப்போராள் என்னும் பேர் கொண்ட ஒரு எத்தோப்பியப் பெண்ணை அவன் விவாகம் செய்தான். மோசே துவக்கத்திலே மிகவும் கோபக்காரனாக இருந்தான். அதை நாம் அறிந்திருக்கிறோம். அந்த கோப சுபாவத்தை தேவன் அவனிடத்திலிருந்து வெளியே எடுத்துப் போட வேண்டியிருந்தது. ஆகவே.... பிறகு அவன் இந்த பெண்ணை மணந்தான், அவனுடைய மாமனுக்கு ஒரு வேலைக்காரனாக ஆனான், வனாந்திரத்தின் பின்புறத்தில் ஆடுகளை மேய்த்து வந்தான். 48. ஒரு நாளிலே, இந்த மனிதன் எண்பது வயது நிரம்பின ஒருவனாக இருந்ததை என்னால் கற்பனைச் செய்து பார்க்க முடிகின்றது. அங்கே அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்..... இதோ அவன் ஆடுகளை மேய்த்து வந்தவனாக, வெறும் ஒரு ஆடு மேய்ப்பனாக மாத்திரம் இருக்கின்றான், தேவனுடைய சித்தத்திற்கு புறம்பே சென்ற ஒரு மனிதனாக இருந்து ஒரு மனிதனைக் கொலைச் செய்து, அந்த இடத்திலே ஒரு ஆடு மேய்ப்பவனாக இப்பொழுது இருக்கின்றான். 49. ஆகவே, தேவன் எதையாவதொன்றை முன்குறித்திருப்பாரானால், பரலோகத்தில் தேவன் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அந்த விதமாக நிச்சயமாக அது நடந்தேறும். எப்படியாயினும் அது நிறைவேறப்போகின்றது. இயேசு கிறிஸ்து இரண்டாவது முறை வருவதை தடுக்க உலகத்தில் ஒன்றுமே கிடையாது. அவ்விதமாக நடக்க தேவன் முன்குறித்திருக்கிறார். தெய்வீக சுகமளித்தலின் செய்தியை நீங்கள் தடுக்கத்தக்கதாக உலகத்தில் எந்த ஒரு வழியும் உங்களுக்குக் கிடையாது. உங்களால் முடிந்த வரைக்கும் அதனுடன் சண்டையிட முடியும், ஆனால் அது புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று தேவன் முன்குறித்திருக்கின்றார், அவ்வளவு தான், அது புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருக்கின்றது, அது சரி. என்னவாயிருந்தாலும் பரவாயில்லை, யாராவதொருவர் . . . தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதாக இருக்கின்ற சிறந்த ஒன்று என்னவென்றால் தேவனுடைய திட்டத்தில் சேர்ந்துக் கொண்டு சபையுடன் முன்னே அணிவகுத்துச் செல்வது தான், எனக்குத் தெரிந்தவரையில் அது தான் நீங்கள் செய்யத்தக்கதாக இருக்கின்ற சிறந்ததான ஒன்றாகும்.  50. இங்கே சில சமயங்களுக்கு முன்னால், சுதந்திர சிலைக்குள்ளாக (நியூ யார்க்கிலுள்ள Statue of Liberty சிலை - தமிழாக்கியோன்) மேலே ஏறிப்போனேன். சிலையின் கைப்பாகத்திற்கு சென்றேன். அங்கே ஜன்னலிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த போது அங்கே குருவிகள் கூட்டம் ஒன்று செத்துக் கிடந்தது. அங்கே சுற்றிலும் செத்துக் கிடந்தது, அங்கே வெளியில் சுற்றிலும் விழுந்து கிடந்தது. அப்பொழுது நான் வழிகாட்டியிடம், "என்ன இது, என்ன ஆயிற்று? அந்த சிறு குருவிகள் செத்துகிடக்கின்றதே” என்று கூறினேன்.  51. அதற்கு அவன், “ஐயா, கடந்த இரவு புயல் அடித்தது, அப்பொழுது அந்த சிறு குருவிகள் சுற்றிலும் பறந்து இந்த சுதந்திர சிலையின் ஒளிக்குள்ளாகச் சென்றன. அந்த ஒளியின்வெளிச்சத்தின் பாதையிலே சென்று பாதுகாப்பான இடத்தை அடையாமல், அவை வந்து ஒளியின் மீது மோதி அதை அணைக்க முயன்று தங்கள் மூளை சிதறி இறந்து போயின" என்று கூறினான். அவைகளுக்கு உதவி செய்ய இருந்த அதை அக்குருவிகள் மோதி அணைக்கப் பார்த்து அவ்விதமாகச் செய்கையில் தங்களையே மாய்த்துக் கொண்டன.  52. அப்பொழுது நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம், பொதுவான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட தேவனை நம்பாத மனிதர்கள், தேவன் இருக்கிறார் என்று சந்தேகங் கொள்கிறவர்கள், அவிசுவாசிகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இன்னுமாக அந்த ஒளியின் மீது மோதுவீர்களானால், தேவனுடைய ஒளியின் மீது மோதி அதை அணைக்க முயற்சிப்பீர்களானால், நீங்கள் உங்கள் சாவு வரத்தக்கதாக மோதி அவமானத்தில் கீழே விழுவீர்கள், ஆனாலும் இன்னுமாக தேவனுடைய ஒளியானது காலங்களினூடாக பிரகாசித்துக் கொண்டே இருக்கும்” என்று கூறினேன். அது சரியே. யாராலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும், எப்படியாயினும் சரி, தேவன் முன்னே சென்று கொண்டேயிருப்பார். ஆகவே சிறந்த காரியம் என்னவென்றால் சரியாக அவருடன் சேர்ந்துக் கொண்டு பரிசுத்த ஆவியின் பெருக்கெடுப்பில் சரியாக அதனோடே கூட சென்றுக் கொண்டே இருப்பதாகும்.  53. ஆகவே மோசே அங்கே வனாந்திரத்தின் பின்புறத்தில் இருக்கையில், ஒரு நாள், நம்பிக்கையிழந்த நிலையில் அங்கே நடந்து சென்றுக்கொண்டிருந்தான் என்று நான் கற்பனை செய்து பார்க்கின்றேன். அவன் நடந்துக்கொண்டே எகிப்தில் நடந்தவற்றைக் குறித்தும் மற்றும் அவனுடைய எல்லா நண்பர்களைக் குறித்தும் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். இதோ இங்கே அவன் வேறொரு மக்கள் இனத்தோடு விவாகம் செய்துக் கொண்டு தன்னுடைய மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்தான். அப்பொழுது அவன் அங்கேசற்று நோக்கிப் பார்க்கும்படியாக நேர்ந்தது, அங்கே ஒரு முட்செடி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஆனால் அந்த முட்செடி வெந்து போகாதிருந்தது. வினோதமாக இருக்கின்றதே என்று அவன் நினைத்தான். ஆகவே அது தேவன் மோசேயின் கவனத்தைக் கவர முயற்சி செய்துக் கொண்டிருத்தல் ஆகும்.  54. உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும், ஆனால் இங்கே வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கூட்டமானது . . . தேவன் மரித்தோரை உயிரோடெழும்பச் செய்துள்ளார் என்றும் இன்றிரவு இயேசு ஜீவிக்கிறவராக இருந்து வியாதியஸ்தரையும் பிணியாளிகளையும் சுகப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பதை அறியாமல் இங்கே சுற்றிலும் இருக்கின்ற சபைகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற மக்களாகிய உங்களில் சிலரின் கவனத்தைக் கவருவதற்காகவே தேவன் இங்கே வெளியே இந்தக் கூட்டத்தை அமைத்துள்ளார்.  55. ஒருக்கால் நீங்கள் இங்கே வந்து, இந்த ஊனமுற்றோர், முடவர், உடல் உருக்குலைந்து கிடக்கின்றவர்கள் தங்கள் சக்கர நாற்காலிகளிலிருந்து எழுந்து நின்று நடந்து செல்வதைக் காணவும், தம்முடைய ஆவி இங்கே மக்கள் கூட்டத்தினூடாக அசைந்து சென்று மக்களைத் திருத்தி, இங்கே பிரசங்க பீடத்திலிருந்து பாவிகள் கடிந்துக் கொள்ளப்படுவதையும், பரிசுத்தவான்கள், தேவ ஜனங்கள் இங்கே வந்து மக்கள் எந்த இடத்தில் பாவம் செய்கிறார்கள் என்றும் காரியங்கள் எப்படி உள்ளன என்றும் கூறப்படுவதையும் காணும்படிக்கு தேவன் உங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அதனுடைய ஒவ்வொரு வார்த்தையும் தவற முடியாத சாத்தியமாகும். நீங்கள் திரும்பும் படிக்கு ஏதுவாக, நீங்கள் இங்கே வந்து அதைப் போன்றிருக்கின்ற ஒன்றைக் காணத்தக்கதாக, தேவன் உங்கள் கவனத்தைக் கவரும்படிக்குச் செய்திருக்கமாட்டார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் சபையிலிருந்து திரும்பஅல்ல, ஆனால் நீங்கள் வாழ்கின்ற பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பி, மறுபடியும் பிறந்து, புதிய பிறப்பில் ஜீவிக்கின்ற தேவனுக்கு ஊழியம் செய்யும்படிக்குத் திரும்ப மாத்திரமே. ஒருக்கால் தேவன் அதை செய்துக்கொண்டிருக்கலாம்.  56. மோசே திரும்பினான், அந்த எரிகின்ற முட்செடியை பார்த்த போது அவன் புறப்பட்டான். “சரி, நான் மேலே சென்று அது எந்தவிதமான ஒரு காட்சியாக இருக்கும் என்பதைக் காணுவேனாக” என்று கூறினான். வழக்கமாக தேவன் தம்மைத் தாமே அக்கினியில் வெளிப்படுத்துகின்றார். ஆகவே அவன் திரும்பி அதைக் காணச் சென்றான், அப்பொழுது அந்த முட்செடியிலிருந்து தேவன் அவனுடன் பேசினார். “மோசே, உன் பாதரட்சையை கழற்றிப்போடு, ஏனென்றால் நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி" என்று கூறினார்.  57. இப்பொழுது, மோசே, “கர்த்தாவே, நான் உம்மிடம் பயபக்தியாக இருக்கப்போகின்றேன்; நான் என்னுடைய தொப்பியைக் கழற்றப்போகின்றேன். அது மிக அருமையான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும், “உன் தொப்பியை” என்று தேவன் கூறவில்லை; அவர், “உன் பாதரட்சை ” என்று கூறினார். இப்பொழுது நான், “சரி, நான் சபையைச் சேர்ந்துக் கொண்டேன்; மற்றவன் செய்தது போலவே நானும் நல்லதைத் தானே செய்துள்ளேன்?” என்று கூறினால் எப்படியிருக்கும். “ஒரு மனிதன் சபையை சேர்ந்துக் கொள்ளாவிட்டால்.. .” என்று தேவன் கூறவில்லை. அவர், “ஒரு மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டும்...'' என்றார். அவன் தாமே.....  58. “சரி, நான் - நான் ஒரு நல்ல சபைக்கு செல்வேன்” என்று கூறலாம். அது சரி தான், ஆனால் தேவைப்படுவது அதுவல்ல. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் ஒருக்காலும் பிரவேசிக்கமாட்டான்”. தேவன் ஸ்திரமான ஒரு திட்டத்தைக்கொண்டுள்ளார். மற்றவை எவ்வளவாக அருமையாக, நல்லதாக காணப்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல. தேவனுடைய சுவிசேஷத்துடன் நீங்கள் வரிசைப்பட வேண்டும். வேதாகமம் அதைக் கூறுகின்றது. ஆகவே நாம் செய்தாக வேண்டிய காரியம் அதுவே தான்.  59. ஆகவே மோசே தேவனுடைய திட்டத்துடன் தன்னைச் சேர்த்துக் கொண்டு வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டிய தாயிற்று. பயபக்தி என்று மோசே நினைத்தது அல்ல, ஆனால் பயபக்தி என்று எதை தேவன் அழைத்தாரோ அதனுடன் வரிசைப்படுத்திக் கொண்டான். ஆகவே அவன் உட்கார்ந்து தன்னுடைய பாதரட்சையைக் கழற்றி மேலே நடந்து சென்றான். அவன் கூறினான், நான்... அவர், "என் ஜனத்தின் கூக்குரலைக் கேட்டு, நான் இறங்கி வந்துள்ளேன், அவர்களை விடுவிக்கும்படியாக உன்னை நான் அங்கே அனுப்பப்போகின்றேன்” என்று கூறினார்.  60. மோசேதன்னுடைய குறையைக் குறித்து முறையிட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன், "இதோ பாருங்கள், நான் திக்குவாயன். என்னால் மிக அருமையாகப் பேசமுடியாது, நான் வாக்குவல்லவன் அல்ல” என்று கூறினான். அவன் முறையிட ஆரம்பித்தான், அப்பொழுது தேவன், தாம் ஆரோனை அனுப்புவதாக அவனிடம் கூறினார். அதன் பிறகு அவன் விரும்பினது .... “அவருடைய மகிமையைத் தன்னால் காணமுடியுமா, அவர் செய்தது என்று மக்களிடமாக நான் எதைக் கூறுவது?" என அவன் கூறினான். அப்பொழுது தேவன் மோசேயிடம், “உன் கையிலிருக்கிறது என்ன?” என்றார்.  61. இப்பொழுது, அங்கே அருகாமையில் என்னவெல்லாம் இருந்ததோ, தேவனால் எந்த ஒன்றையும் உபயோகப்படுத்தியிருக்க முடியும். முட்செடியைக் கூட தேவனால் உபயோகப்படுத்தியிருக்க முடியும். ஆனால் மோசே தன் கையில் ஒன்றை வைத்திருந்தான். அவன், “ஒரு கோல்” என்றான். 62. அவர், “அதைத் தரையிலே போடு” என்று கூறினார். அப்பொழுது அவன் அதைக் கீழே போட்டான். அவன் போட்ட போது அது ஒரு சர்ப்பமாக மாறினது. அதன் வாலைக் கொண்டு மோசே தூக்கினான்; அப்பொழுது அது மறுபடியுமாக ஒரு கோலாக மாறினது. அதனைக் கொண்டு மோசே என்ன செய்ய முடியுமென்றும், தாம் இன்னுமாக ஜீவனுள்ள தேவனாயிருக்கின்றார் என்றும் தேவன் மோசேக்குக்குக் காண்பித்தார். அவர் ஒரு இயற்கையான ஒன்றை எடுத்து அதை இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றாக அவரால் அதை மாற்ற முடியும். தாம் விரும்பினதை எல்லாம் அவரால் செய்ய முடியும். ஏனென்றால் அவர் தேவன் ஆவார்.  63. மோசே அந்தக் கோலை தன் கையில் எடுத்துக் கொண்டு ஓடினான், தன்னுடைய மனைவியாகிய சிப்போராளை அழைத்து அவளை ஒரு கோவேறுக் கழுதையின் மேல் உட்கார வைத்து, பிள்ளைகளை இரண்டு இடுப்பிலும் வைத்தான். ஒரு கழுதையை எடுத்து அதற்கு கயிற்றைக் கட்டித் தன் கையில் கோலை வைத்துக் கொண்டு இருபது இலட்சம் மக்களை விடுவிக்கத்தக்கதாக எகிப்துக்கு புறப்பட்டுப் போனான்.  64. உங்களால் அதைச் சற்று கற்பனைச் செய்து பார்க்க முடிகின்றதா? மோசே அவ்விதமாகச் செல்கின்ற காட்சியானது எவ்வளவு அபத்தமான ஒரு காட்சியாக இருந்திருக்கும்! எண்பது வயது நிரம்பின இந்த மனிதன், அவனுடைய வெள்ளைத் தாடியும், முடியும் இந்த விதமாக காற்றில் அசைந்துக் கொண்டு, “தேவனுக்கு மகிமை” என்று சந்தோஷமாக சத்தமிட்டு கூச்சலிட்டுக் கொண்டு, தன் மனைவி ஒரு கோவேறுக் கழுதையின் மேல் உட்கார வைக்கப்பட்டு, ஒவ்வொரு இடுப்பிலும் ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டு எகிப்தை மேற்கொள்ளும்படிக்குச் செல்கின்றான். உங்களால் அதைக் கற்பனைச் செய்து பார்க்க முடியுமா?  65. மகத்தான சேனைகளும் மற்றும் போர்வீரர்களும் அந்த நாளிலே என்ன கூறியிருப்பார்கள் என்று நீங்கள்நினைக்கிறீர்கள். “உம், அந்த பரிதாபத்திற்குரிய கிழவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறியிருப்பார்கள். உலகம் எப்பொழுதும் அந்த விதமாகவே சிந்திக்கும், ஆனால் மோசே கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிருந்தான், அது நிறைவேறித்தான் ஆக வேண்டும். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்தான். அவன் தன்னுடைய வழியில் செல்கையில் தன்னுடைய கையில் அந்த பழைய கோலை வைத்திருந்தான். இதோ, ஒரு உலர்ந்த கோல், அந்த நாளின் உலகத்தையே படையெடுத்து வென்றிருந்த எகிப்தின் மகத்தான சேனைக்கு எதிராகச் சென்றுக் கொண்டிருக்கின்றது ... ஆயிரமாயிரக்கணக்கான குதிரை ரதங்கள், குதிரை வீரர்கள், ஈட்டி வீரர்கள், இருந்ததிலேயே மகத்தான யுத்த போர்ச்சேவக சேனைகள் ... இன்றைக்கு ஒரே ஒரு மனிதன் ரஷ்யாவிற்கு எதிராகச் செல்ல முயற்சிப்பது போல அல்லது அதைப் போன்ற ஒன்றைச் செய்ய முயல்வது போல. ஒருக்கால் அப்பொழுது ஒரு பெரிய தோற்கடிக்க முடியாத சேனையுடன் மோதுவதாக இருக்கலாம்.  66. ஆகவே, மோசே எண்பது வயது நிரம்பினவனாக, அவனுடைய தலையின் மேல் பகுதி வழுக்கையாகவும் அவனுடைய தாடி எவ்வளவாகக் தொங்கிக் கொண்டிருக்கிறதையும், அவனுடைய கழுத்தைச் சுற்றி முழுவதுமாக முடியுடன் இருந்து, இந்த கோவேறு கழுதையை நடத்திச் சென்று, அங்கே எகிப்தை மேற்கொள்ளச் செல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. இதில் இருக்கின்ற விஷயம் என்னவென்றால்; அவன் எகிப்தை ஜெயித்தான். அது சரியே. ஏனென்றால் தேவன் அந்த வாக்குத்தத்தத்தைச் செய்திருந்தார்.  67. தேவன் ஒன்றை வாக்குத்தத்தம் செய்வாரானால், தம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்ள அவர் கடமைப்பட்டுள்ளார். தேவன் எப்பொழுதுமே அதன் பின்னே நின்று துணை புரிவார். அதைக்குறித்து தேவன் - யார் என்னகூறினாலும் அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. தேவன் அவ்விதமாகக் கூறினாரென்றால், அது அப்படித்தான். உங்களுடைய ஆத்துமா, சரீரம் மற்றும் உங்கள் பெலத்தை அதன் மீது வைத்து இளைப்பாறுங்கள், ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தைக்குக் கடமைப்பட்டுள்ளார். நாம் பாடுகின்ற அந்த சிறிய பாட்டிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது, ஒவ்வொரு அதிகாரமும், வசனம், வரியும் என்னுடையது. அவருடைய தெய்வீக அன்பில் நான் நம்பிக்கை கொள்கிறேன், புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது.  68. விருப்பமுள்ளவன் வந்து கர்த்தருடைய ஜீவத்தண்ணீரின் ஊற்றில் இலவசமாய்ப் பருகலாம், எந்த ஒரு கிரயமுமின்றி, எந்த ஒரு விலையுமின்றி பருகலாம்; அதற்கான கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று. யார் வேண்டுமானாலும் வந்து பருகலாம். 69. எகிப்தை மேற்கொள்ள மோசே அங்கே செல்கின்றான்: எப்படிப்பட்ட ஒரு காட்சியாக அது இருந்திருக்கும்! அவன் அங்கே சென்றவுடன் அந்த பழைய கோலை எடுத்தான், அது ஒன்று மாத்திரமே அவன் கையில் இருந்தது, அதைக் கொண்டு அவன் எகிப்தை வெற்றி சிறந்தான், இஸ்ரவேல் புத்திரர்களை வழிநடத்தினான், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் வரைக்கும் அந்த அதே கோலைக் கொண்டு அவர்களை போஷித்தான். ஆமென். 70. ஒரு பழைய உலர்ந்துப் போன கோல். உங்கள் கையில் மிக அதிகமான ஒன்றை நீங்கள் வைத்திருக்காமல் இருக்கலாம். உங்களால் விசில் கூட அடிக்க முடியாதவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் கரத்தில் எந்த ஒன்றையாவது வைத்திருப்பீர்களானால், தேவன் அதை எடுத்து அவர் அதை ஆசீர்வதிக்கும் படிக்கு விடுங்கள். ஆமென்.வீட்டாருக்கு சாட்சி கொடுங்கள், உங்களால் மேற்கொண்டு எதையும் செய்ய முடியவில்லையெனில், உங்களை கையை உயர்த்தி "தேவனே, அதின் ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுங்கள், உங்கள் கையில் என்ன இருக்கின்றதோ அதை எடுத்து தேவனுடைய மகிமைக்கென்று உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.  71. ஒரு காலத்தில் ஒரு சிறு பையன் ஒருவன் இருந்தான், அவன் இயேசுவைக் காணச் சென்றான், அவன் கையில் நான்கு அல்லது ஐந்து சிறிய பிஸ்கட்டுகளையும் சில மீன்களையும் அங்கே வைத்திருந்தான். இப்பொழுது, அந்த சிறிய பையனின் கையில் அது அவ்வளவு அதிகமல்ல, ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரங்களுக்கு அது சென்றடைந்த உடனே, அவர் அதை ஆசீர்வதித்து ஐந்தாயிரம் பேர்களை போஷித்தார். நீங்கள் கொண்டிருக்கின்ற சிறிய ஒரு காரியமானது கூட, ஒரு சிறு விசுவாசத் தீப்பொரியாக இருக்கக்கூடும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றதும் கூட. அது உங்களுக்கு ஒரு பெரிய காரியமாக தென்படாது. ஆனால் ஒரு சாட்சியில் ஒரு முறை அதை கட்டவிழ்த்து விடு; அது அநேக நூற்றுக்கணக்கான மக்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவண்டை வருவதற்குக் கூட ஒரு காரணமாக அமையலாம்.  72. அங்கே வியாதிப்பட்டு அல்லது முடமாக உட்கார்ந்திருக்கின்றவர்களே, ஒரு சிறு துளி அளவு விசுவாசத்தை நீங்கள் கொண்டிருப்பீர்களானால், அதை இன்றிரவு அவிழ்த்து வெளியே கொண்டு வாருங்கள், “கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய வார்த்தையை நம்புவதற்கு இதை மாத்திரம் தான் நான் கொண்டுள்ளேன், இதோ நான் வருகிறேன். மீதமுள்ளதைப் பார்த்துக்கொள்வது உம்மைப் பொறுத்த ஒன்றாகும்” என்று கூறுங்கள். தேவன் காரியத்தின் முழுமையைகவனமாகப் பார்த்துக் கொள்வார். நீங்கள் அதை கட்டவிழ்த்து வெளியே மாத்திரம் கொண்டு வந்து அதை அவர் கொண்டிருக்கும்படியாக விட்டு விடுங்கள்  73. எந்த விதமான ஒரு அணுகுண்டை இயேசு கட்டவிழ்த்து விட்டார்? அவர் மீனை எடுத்தார், அவர் அவர்களுக்கு பச்சை மீனையோ அல்லது உயிரோடிருந்த ஒரு மீனையோ கொண்டு போஷிக்கவில்லை; அவர்களுக்கு சமைக்கப்பட்ட மீனையும் சமைக்கப்பட்ட அப்பத்தையும் கொண்டு போஷித்தார். ஆமென். எங்கிருந்து அது அவருக்குக் கிடைத்தது, அது எனக்குத் தெரியாது. எப்படியாயினும், அவர் - அவர் அவர்களை போஷித்தார் மக்களும் அதை சாப்பிட்டனர். சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு ஆள் வந்து, “எலியா அங்கே உட்கார்ந்திருந்ததையும் மற்றும் காகங்களையும் குறித்த கதையை நீங்கள் நம்புகிறீர்களா என்று கூறினது போல. நான், “ஆம், ஐயா, அதன் ஒவ்வொரு வார்த்தையும் நான் நம்புகிறேன்” என்றேன். அது சரியே.  74. எலியாவிற்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று அவர்கள் நினைத்தனர், அவன் அங்கே மலையின் மீது உட்கார்ந்துக் கொண்டு அவனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் அவனுக்குக் கிடைத்தது. ஆனால் கீழே இருந்த உயர் வகுப்பு மக்களும் சமுதாயமும் அங்கே பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர், ஆனாலும் அவர்கள் அவனை கிறுக்கன் என்று அழைத்தனர். அங்கே இருந்த மக்களை விட அவன் மிக நல்ல ஒரு நிலைமையில் இருந்தான்.. அவனுக்கு பசி எடுக்கும்போதெல்லாம் ஆகாரம் கொண்டு வர அவனுக்கு சில கறுப்பு நிற வேலைக்காரர்கள் இருந்தனர். இன்றிரவு இங்கே உட்கார்ந்திருக்கின்ற மக்களை விட எலியாவினுடைய நிலையானது மிக நல்ல விதத்தில் இருந்தது. அது சரி. அவனுக்கு பசி எடுத்தபோதெல்லாம் ஒரு காகம் சாண்ட்விச்சைக் கொண்டு வந்து அதை அவனுக்குக் கொடுத்து விட்டு பறந்துச் சென்றது. அவன் முழங்காற்படியிட்டுஅவனுக்கு தேவைப்படும்போதெல்லாம் குடிக்கத் தண்ணீரைப் பெற்றுக்கொண்டான். அவன் தேவனுடைய சித்தத்தில் இருந்தான். அவன் தேவனை அவருடைய வார்த்தையின் பேரிலே அப்படியே அவரை நம்பி ஏற்றுக் கொண்டான். ஆமென். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதுவே தான், அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்று எடுத்துக் கொள்வது தான். யாரோ ஒருவர் என்னிடமாக, "இதோ பாருங்கள் சகோதரன் பிரன்ஹாம், எலியாவிற்கு ஒரு காகம் சாண்ட்விச்சை எடுத்து வந்து கொடுத்தது என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்றார். நான், “ஆம் ஐயா” என்றேன். அவர், "சரி, அப்படியானால் காகத்திற்கு அது எப்படி கிடைத்தது?” என்றார்.  75. நான், “எனக்குத் தெரியாது” என்றேன். “காகம் அதை எடுத்து எலியாவிற்கு கொண்டு வந்தது, அவன் அதைச் சாப்பிட்டான்” என்றேன். நான், “அந்த விதமாகத் தான் பரிசுத்த ஆவியைக் குறித்தும் கூட” என்றேன். நான் சத்தமிடுவதைக் குறித்து அவர் என்னைப் பரியாசம் செய்துக் கொண்டிருந்தார். நான், "அது எங்கிருந்து வருகின்றது என்று என்னால் உங்களுக்குக் கூற முடியாது; பரிசுத்த ஆவியானவர் அதைக் கொண்டு வருகின்றார். நான் அதை உண்கிறேன். அதை நான் நேசிக்கின்றேன், அதனைக் கொண்டு தான் நான் வாழ்கின்றேன். அது எங்கிருந்து வருகிறதென்று எனக்குத் தெரியாது; ஆனால் நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன்; எனக்குத் தெரிந்ததெல்லாம் அது ஒன்று மாத்திரமே. அவர் எனக்குக் கொண்டு வந்து அளிக்கும் வரைக்குமாக நான் அதை எடுத்துக் கொள்ள வாஞ்சிக்கிறேன்” என்று கூறினேன். ஆமென்.  76. “அந்த மனிதன் மருத்துவரிடம் செல்வதேயில்லை, ஆனால் எப்படி அவன் நடக்கப்போகின்றான்” என்று கூறுவர்.அதற்கு என்னால் ஒன்றும் கூற முடியாது; அவ்விதம் நடக்கும் என்று தேவன் கூறுவாரானால், எப்படியாயினும் அதை அவர் நிறைவேறப்பண்ணுவார். நீங்கள் அதை கவனித்துப் பார்க்க மாத்திரம் செய்யுங்கள். அவருடைய வார்த்தையைப் பார்த்துக் கொள்வது தேவனுடைய வேலையாகும். அது நடந்தேறும் படிக்கு அவர் செய்து அந்த காரியத்தை அவர் பார்த்துக் கொள்வார், அதைச் செய்வதற்கு அவர் கடமைப்பட்டுள்ளார்; ஆம் அதை ஒவ்வொருவருடைய காரியத்திற்கும் செய்வார் (ஆமென்). அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அவரில் தைரியத்துடன் நம்பிக்கை வைக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் அல்லது பெண்ணுக்கும் அதைச் செய்வார். ஓ, என்னே, அது தான் உண்மையாகும். ஆம், ஐயா, மோசே அங்கே சென்றான், அவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் கூறியிருந்தாரோ அதைச் சரியாக அவன் செய்தான். நீங்கள் உங்கள் கையில் உள்ளதை எடுத்து தேவன் அதை வைத்துக் கொள்ளும்படிக்குச் செய்தால்....  77. இப்பொழுது, ஒரு காலத்திலே, அந்த காலத்திற்குப் பிறகு சிறிது காலம் கடந்து, தாவீது என்னும் பெயரைக் கொண்ட ஒரு சிறு ஆள் இருந்தான், அவன் மலையின் ஓரத்தில் வசித்து தன் தகப்பனுடைய ஆடுகளை போஷித்து வந்த ஒரு சிறு மேய்ப்பனாக இருந்தான். ஆனால் கர்த்தருடைய ஆசீர்வாதம் அவன் மீது இருந்ததென்று அவன் அறிந்திருந்தான். ஆகவே, தேவன் தன்னோடு இருக்கின்றார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே ஒரு நாள் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ண இஸ்ரவேலர் வெளியிலே கூடியிருந்தார்கள், அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாய் அவனிடம், “இதோ, நான் உன்னை உன் சகோதரரிடத்திற்கு அனுப்பப் போகிறேன்; அவர்களுக்கு சில உலர்ந்த திராட்சைகளையும் இன்னும் பிறவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் உன் சகோதரர்கள் எப்படி இருக்கின்றனர் என்று பார்த்துவிட்டு வா" என்று கூறினான். அவனுடைய இரண்டு மூத்த மகன்கள் யுத்தத்தில் இருந்தனர்.  78. ஆகவே தாவீது புறப்பட்டுச் சென்றான். உங்களுக்குத் தெரியுமா, அவன் அங்கே சென்றடைந்த போது அவன் ஒரு பெரிய காட்சியையே கண்டான். அங்கே பெலிஸ்தர்கள் ஒரு பக்கத்திலும் இஸ்ரவேலர் இந்தப் பக்கத்திலும் நின்றிருந்தார்கள். சுமார் ஏழு அடி நான்கு அங்குலம் உயரம் கொண்டவனாக, மகத்தான இராஜகுமார கம்பீர தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதனாக சவுல் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தான்; ஆனால் அந்த மலையிடைவெளியின் மறுபக்கத்தில் பெலிஸ்திய சேனை இருந்தது, அவர்களோடு ஒரு பெரிய சவாலை உறுமிக் கொண்டு ஒரு மிகப்பெரிய சாம்பியனான (Champion) கோலியாத் என்னும் பேர் கொண்ட ஒரு வீரன் நின்றான். என்னே, அவன் சுமார் ஒன்பது அடி நான்கு அங்குல உயரம் கொண்டவனாக இருந்தான், ஓ எப்படிப்பட்ட ஒரு மனிதனாக அவன் இருந்தான். ஆகவே, உங்களை விட சற்று பலம் கூட உள்ளதென்றும் அதினால் உங்கள் மீது ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்று பிசாசு அறியும் போது அவனால் முடியுமானால் நிச்சயமாக உங்களுக்குள்ளாக அதைக் குத்துவான்.  79. அப்பொழுது கோலியாத் அந்த மலையோரத்திற்கு வந்து, "அங்கே இருக்கிறவர்களே, நான் உங்களுக்கு ஒரு யோசனையைக் கூறப்போகிறேன். நாம் அதிக இரத்தத்தை சிந்த வேண்டாம்” என்றான். பாருங்கள். அவன் மிகப் பெரியவனாக இருந்தான், அவர்கள் எல்லாரையும் விட அவன் அதிக பலத்தைக் கொண்டு அவர்களை ஆதிக்கம் செய்யும் நிலையில் இருந்தான். ஆகவே அவன், “இதோ, இஸ்ரவேலின் சேனையில் இருக்கும் ஒரு மனிதனைத் தெரிந்துக் கொள்ளுங்கள், அவன் இங்கே என்னிடத்தில் வரட்டும், என்னிடம் யுத்தம் பண்ணட்டும். நான் அவனைக் கொல்வேனானால் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து எங்களைக் சேவிக்க வேண்டும். அவன் என்னைக் கொல்வானானால், அப்பொழுது நாங்கள்எல்லோரும் உங்களைச் சேவிப்போம்” என்று கூறினான். நிச்சயமாக, அந்த விதமாகத் தான் பிசாசும் கூடச் செய்வான். இப்பொழுது, இங்கே இந்த விதமாகக் கூறின இந்த மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். "நான் மாத்திரம் இதை, அல்லது அதை அல்லது மற்றதை காணக்கூடுமானால்”, என்பதே. அந்த விதமான ஒரு கருத்தை அவர்கள் கொள்ளும்போதெல்லாம்......  80. ஆனால் ஒரு நாளிலே கோலியாத் அவனுடைய வீம்புப் பேச்சை ஒரு வித்தியாசப்பட்ட மனிதனின் காதில் விழத்தக்கதாக கூவி விட்டான். அங்கே ஒரு சிறிய, எலும்பும் தோலும் போலக் காட்சியளித்த மெலிந்த உடம்பைக் கொண்ட, சுமார் நூற்று பத்து பவுண்ட் எடையைக் கொண்ட தளர்ந்த தோள்களையுடைய மற்றும் ஒரு மேய்ப்பனின் மேலங்கியைத் தரித்திருந்த ஒரு மனிதன் இருந்தான். ஆகவே அந்த நாள் காலையிலே சேனைகள் மேலும் கீழுமாக நடந்து ஒருவரையொருவர் நோக்கி சத்தமிட்டுக் கொண்டு யுத்தத்திற்குள் செல்ல முயற்சிக்கையில், அப்பொழுது அறைகூவலிட்டுக் கொண்டிருந்த இந்த மிகப் பெரிய மனிதன் வந்து, “இதோ, நான் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்” என்று கூறினான். ஆனால் அப்பொழுது அவன் கூறின அறை கூவல்கள், சவால்கள் அவனை விட வித்தியாசப்பட்டிருந்த ஒரு மனிதனின் காதுகளை எட்டிவிட்டது. ஆம் ஐயா.  81. தான் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று அறிந்திருந்த ஒரு சிறிய பையன் அங்கே இருந்தான். அப்பொழுது அவன், “இது என்ன? ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்துக் கொண்டேயிருக்கும்படிக்கு விருத்தசேதனம் இல்லாத இந்த - அந்த பெலிஸ்தனை அப்படியே விட்டு விடலாம் என்றா என்னிடம் கூறுகிறீர்கள்?'' என்று கேட்டான். ஆமென். தான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறிந்திருந்தான்.ஓ என்னே, கோலியாத், நீ அப்பொழுது தவறான வீண்பெருமையைப் பேசி விட்டாய்.  82. அவனுடைய சத்தம் தாவீதின் காதுகளில் விழுந்த போது, அவனுடைய சகோதரன் அவனிடம், “இதோ பார், உன் இருதயத்திலுள்ள குரும்புத்தனங்கள் எனக்குத் தெரியும். அந்த விதமான காரியங்களைக் கூறுவதை சற்று நிறுத்தி விடு” என்று கூறினான். அவர்களில் சிலர். "என்ன, அவன் இராஜாவின் குமாரத்தியை விவாகம் செய்து கொள்ளலாமே, அப்பொழுது அவர் அவனுக்கு பெரும் பொருட்களை அளிப்பாரல்லவா, அவனுடைய வீடு இஸ்ரவேலில் சுதந்திரமாக இருக்குமே'' என்று இன்னும் பிறவைகளையும் கூறினார்கள். அவன், “நீங்கள் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பவைகளெல்லாம் அர்த்தமற்றவையாகும்?” என்றான். என்னே! இந்த மெலிந்த நொடிந்து போன மனிதன், அந்த விதமாகத்தான் அவன் .....  83. தோற்றங்களை வைத்து நீங்கள் காரியங்களை நிதானிக்கக்கூடாது. இருதயத்தில் என்ன இருக்கின்றதோ அதைக் கொண்டு தான் நீங்கள் செயல்பட வேண்டும். அது சரி. நீங்கள் தோற்றங்களை வைத்து காரியங்களைச் செய்ய முனைந்தால், என்னே, ஒரு கன்மலையிலிருந்து தண்ணீர் கிடைக்குமோ என்று இஸ்ரவேலர் நினைத்திருப்பார்களானால் அவர்களுக்கு மிகப்பயங்கரமான ஒரு தருணத்தை அவர்கள் கொண்டிருந்திருப்பார்கள். தேசத்திலேயே மிகவும் வறட்சியான ஒரு பிரதேசமாக அது இருந்தது. ஆனால் தேவன், "கன்மலையைப் பார்த்து பேசு. அந்த ஒன்றில் தான் தண்ணீர் இருக்கின்றது.” என்று கூறினார்.  84. இன்றைக்கும் கூட அவர்கள், தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இருக்குமானால் அது அந்த மிகப்பெரிய உயர்தரமான சபைகளில் தான் இருக்கும் என்று கூறுகின்றனர். அதைக்குறித்துத் தான் நீங்கள் சிந்திக்கின்றீர்கள், பாருங்கள்.அது சரி. ஒருக்கால் கண்டதிலேயே மிக வறட்சியான ஒரு இடமாக அது இருக்கலாம், ஆனால் நீங்கள் அதைப்பார்த்து பேசினால் மாத்திரம் போதும், அங்கே தண்ணீர் இருக்கும். ஆமென். 85. இப்பொழுது, நீங்கள் கவனிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தாவீது, அவன் அங்கே நடந்து செல்வதை என்னால் காணமுடிகின்றது; அவர்கள் அவனை இராஜாவுக்கு முன்பாக கொண்டு சென்றார்கள். இராஜா, "இதோ, ஒரு நிமிடம் பொறுங்கள், அந்த வாலிபனை இங்கே கொண்டு வாருங்கள்” என்றான். அப்பொழுது தாவீது அவனிடமாக நடந்து சென்றான். சவுல் அவனை பிள்ளையாண்டான் என்று அழைத்தான். தோற்றத்திற்கு தாவீது ஒரு சிறிய, எலும்பும் தோலும் மாத்திரமே இருந்து மெலிந்து போன ஒருவனாகக் காணப்பட்டிருப்பான் (அதை நீங்கள் அறிவீர்கள்), சிறு தோள்கள் அப்பொழுது தான் வளர ஆரம்பித்தன, ஏதோ ஒரு விதமாக நடந்து சென்றிருப்பான், அந்த சிறிய நட்சத்திர கண்களைக் கொண்டு அவனைப் பார்த்தான். அப்பொழுது சவுல் "இதோ பார், சற்று கவனி, நீ அவனை எதிர்த்து யுத்தம் செய்ய முடியாது” என்று கூறினான். தாவீது, “இந்த இராட்சதனினிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய் அவனோடே யுத்தம் பண்ணுவேன்” என்று கூறினான். ஓ, என்னே, அந்த விதமானதைரியம் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கும் தானே? என்ன?  86. அவன் ஏன் அந்த விதமான ஒரு தைரியத்தைக் கொண்டிருந்தான் என்றும், எது வித்தியாசத்தை உண்டாக்கினது என்றும் நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் பார்க்கலாம். ஆம், ஐயா, அவன், “நான் போய் அந்த இராட்சதனோடே யுத்தம் பண்ணுவேன் என்று கூறினான். அதோ அங்கே மகத்தான அழகான குழந்தையாகிய சவுல் உட்கார்ந்திருந்தான், அவனும் கூட ஏறக்குறைய ஒரு இராட்சதனைப் போல பெரியவனாகஇருந்தான், இஸ்ரவேலின் இராஜாவாக இருந்த அவன் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தான், ஆனால் அங்கே போய் அவனுடன் யுத்தம் செய்ய பயப்பட்டான்.  87. இன்றைக்குத் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிராமல் இருக்கின்ற அநேக மக்களைக் குறித்து என் நினைவில் வருகின்றது. அவர்கள் வேதாகமத்தை விசுவாசிப்பதாக உரிமை கோருகிறார்கள், ஆனாலும் எந்தக் காரியத்திலும் பிசாசு அவர்கள் மீது நடந்துச் செல்லும்படிக்கு அவர்கள் விட்டு விடுகிறார்கள். நான் ஒரு பழமை நாகரீக, பரிசுத்த ஆவியின் அனுபவத்திலும், மறுபடியும் பிறத்தலில் விசுவாசம் கொண்டிருக்கிறேன், ஆழமாக வேறூன்றுதல், இருமுறை மரித்தல் ... நான் - நான் ஒரு மனிதனை உயிரோடே வைக்கும் ஒன்றில் தான் விசுவாசிக்கின்றேன். அது அவனுக்குள்ளாக தைரியத்தையும் அக்கினியையும் வைக்கின்றது. அது சரி. தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தம் எதுவாயிருப்பினும் அதன் பேரில் அவன் பிசாசுடன் நேருக்கு நேராக எதிர்த்து நிற்கும்படிக்குச் செய்து, அது எப்படியாகக் காணப்பட்டாலும் அது சத்தியம் என்று அதை அழைக்கும்படிக்குச் செய்யும். அந்த சிறிய தாவீது ... ஆம், சவுல், “உன்னால் முடியாது" என்று கூறினான். அவனோ, “நீர் என்னை அனுப்பும்” என்று கூறினான். அவன், “இதோ பார், உன்னால் அவனோடு யுத்தம் செய்ய முடியும் என்று எப்படி நீ அறிவாய்?” என்றான். அதற்கு தாவீது, “சற்று கவனியுங்கள். நான் உங்களுக்கு ஒன்றைக் கூறப்போகிறேன். எனக்கு சில அனுபவங்கள் உண்டு” என்றான். இன்றைக்கு அவ்விதம் தான் காரியமானது நடைபெறுகிறது. அனுபவத்தைப் பெற்றிருக்கின்ற ஒருவரால் மட்டுமே. 88. “நான் ஒரு அனுபவத்தைக் கொண்டிருக்கின்றேன். நான் என் தகப்பனுடைய ஆடுகளை அங்கே வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த போது ஒரு விசை சிங்கமும் ஒரு விசை கரடியும் வந்து ஒரு சிறியதை, ஒரு சிறிய ஆட்டைப் பிடித்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது. நான் அதைத் தொடர்ந்து போய், ஒரு கவண் கல்லால் அதன் தலையை அடித்தேன், அதனுடைய வாயிலிருந்து ஆட்டைப் பிடுங்கின போது, அது எழுந்து நின்றது, அப்பொழுது நான் அதை அடித்துக் கொன்றேன். சிங்கத்தை என் கைக்கு ஒப்புவித்த தேவன், கரடியை என் கையில் ஒப்புவித்த தேவன் தாமே, விருத்தசேதனமே இல்லாத இந்த பெலிஸ்தனை என் கையில் எவ்வளவாக ஒப்புவிக்க வல்லவராயிருக்கிறார்” என்று தாவீது கூறினான். அது சரியே.  89. அப்பொழுது சவுல், “இங்கே வா, இதோ நான் உன்னை ஒரு சிறந்த மதபோதக பிரசங்கியாக ஆக்குவேனாக” என்று கூறினான். ஆகவே அவன் தாவீதை அழைத்துச் சென்று அவன் மீது ஒரு பெரிய கவசத்தை போட்டு அவன் தலையின் மீது ஒரு தலைச்சீராவையும் மற்றவற்றையும் அணிவித்தான். தாவீது அதைத் தன்னுடைய சிறிய காதுகளின் மீது அதை இழுத்தான், ஒரு பெரிய கவசத்தைத் தன் மீது அணிவித்துக் கொண்டு அதிலிருந்து வெளியே எட்டிப்பார்ப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள், அவனால் அசையக்கூட முடியவில்லை. அவனால் முன்னே நடந்து செல்ல முடியவில்லை.  90. இன்றைக்கு மக்களிடமாக இருக்கின்ற காரியம் அதுவேயாகும்: சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படியாக ஒரு மனிதன் தன்னுடைய இருதயத்தில் ஒரு சிறு அழைப்பைப் பெறுவானானால், நீ அவனை இங்கே இருக்கின்ற சில பெரிய வேதாகமக் கல்லூரிகளில் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, அவனுக்குள்ளாக இருக்கின்ற பிரசங்கிக்கின்ற காரியத்தை எடுத்துப் போட்டு விட்டு, அவனுக்குள்ளாக இந்த உலகப்பிரகாரமான வேதாகமக் கல்லூரி அறிவைப் புகுத்தி, அவனுக்குள்ளாக இருக்கின்ற பிரசங்கியின் தன்மைமுழுவதையுமாக எடுத்துப் போட்டு விட்டு பிறகு அவனை புறப்பட்டு போ என்று சொல்ல வேண்டியதாக இருக்கின்றது. அவனால் விசுவாசிக்க முடியாதிருப்பதில் வியப்பொன்று மில்லை. ஓ, என்னே! அவன் உலகத்தோடே சேணம் பூட்டப்பட்டு கட்டப்படுகின்றான். அல்லேலூயா! நாம் வெளியே வந்து பழமை நாகரீகமான பரிசுத்த ஆவியை அசைத்துக் காண்பித்து, இந்த பழைய பிணவறைகள் உருகிப் போகச் செய்ய வேண்டும், அவ்விதம் செய்வது தான் இங்கே சுற்றிலும் தேவையாயிருக்கின்ற ஒன்றாகும். ஆமென். ஆம், ஐயா.  91. அங்கே தாவீது நின்றான், சவுல் அதை அணிவித்தான் ... அவன் பி.ஏ. (B.A.) பட்டப்படிப்பைக் கொண்டிருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா, மேலும் அவன் எல்.எல். (LL) பட்டம், இரட்டை ஜி.டி. (GD) பட்டம் மற்றும் டி.டி. (DD) பட்டம் ஆகியவைகளைப் பெற்றிருந்தான் என்று நீங்கள் அறிவீர்கள். அதற்கு தாவீது, "இந்த காரியத்தைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இதை நான் சோதித்து நிரூபித்துக் கூடப் பார்க்கவில்லை. இது என்னவென்றுக் கூட எனக்குத் தெரியாது. இதைக் கொண்டு என்னால் யுத்தமிட முடியாது'' என்று கூறினான். இந்த மதபோதகக் கவசமானது தேவனுடைய மனிதனுக்கு பொருந்தவே பொருந்தாது என்று மிகச்சீக்கிரத்தில் சவுல் கண்டு கொண்டான். ஆமென்.  92. இன்றைக்கு மக்களிடமாக இருக்கின்ற காரியமானது அதுவாகும். நீங்கள் தாமே அந்த மதபோதகக் கவசங்களை அவர்களிடமிருந்து கழற்றிப் போட்டு விட்டு அதை ..... நான் ஒரு பழைய அனுபவத்தைக் கெண்டிருப்பதையே நான் விரும்புவேன்....... A, B, C, அ, ஆ, இ போன்ற முதல் எழுத்துக்களைக் கூட அறியாதிருக்கின்ற ஒரு மனிதனையே நான் தெரிந்துக்கொண்டு, அவனை இங்கே தேசத்தில் இருக்கின்ற எல்லா வேதாகமப் பள்ளிகளுக்கு அனுப்புவதைக் காட்டிலும், அவனை மலையோரத்தில் ஒரு பழைய கட்டைமரத்தண்டையிலே கொண்டு போய் அவன் ஒரு பழமை நாகரீக பரிசுத்த ஆவியின் அனுபவத்தைப் பெறும்படியாக அவனுக்கு ஜெபிப்பேன். அப்பள்ளிகள் தேவனுடைய வல்லமையையும் தேவனுடைய ஆசீர்வாதங்களையும் அவனுடைய வாழ்க்கையிலிருந்து வெளியே எடுத்துப் போட்டு விடும். ஆமென். சரியே. ஆம், ஐயா.  93. ஆகவே அங்கே தாவீது அந்த காரியத்தை உற்றுப் பார்த்து, “இதைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. அவர்கள் எப்படி ஆஆஆமென்' மற்றும் கடவுள் புகழ்ச்சி வாய்ப்பாடுகள், ஜெபங்களைக் கூறுகின்றனரோ அதைப் போல எனக்கு கூறத் தெரியாது. நீங்கள் அதை எப்படிச் செய்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சரியான ஒன்று என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்றினை நான் கொண்டிருக்கின்றேனே அதைக் கொண்டு நான் செல்லும்படிக்கு விடுங்கள்” என்று கூறினான். அல்லேலூயா.  94. அதைத் தான் நானும் கூறினேன். நான் என் சபையின் பொதுக் கண்காணிப்பாளரிடம் சென்று எப்படி கர்த்தருடைய தூதன் என்னை சந்தித்தார் என்று கூறும்படிக்கு நான் சென்று கூறின போது என்ன நடந்ததென்று எனக்குத் தெரியும். அவர் என்னிடம், “பில்லி, நீ வீட்டிற்கு புறப்பட்டுப் போ, நீ தீய சொப்பனம் ஒன்றைக் கண்டுள்ளாய். அப்படியா கூறுகின்றாய்! நீ வெறும் ஏழாம் வகுப்பு கல்வியை மாத்திரமே பெற்றுள்ளாய், நீயா? வியாதியஸ்தருக்காகவும் ஜெபம் செய்து, இராஜாக்களுக்கும் கூட நீ ஜெபிக்கப்போகின்றாயா?” என்று கூறினார். அதற்கு நான், “அதைத் தான் அவர் எனக்குக் கூறினார்” என்றேன். அவர் "நீ அதை எப்படிச் செய்யப்போகின்றாய்?” என்று கேட்டார். நான், 'எனக்குத் தெரியாது, ஆனால் அவர் என்னை இவ்வளவு தூரமாகக் கொண்டு வந்துள்ளார்; இனிமேலும் என்னை அவர் கொண்டுச் செல்வார்” என்று கூறினேன். வாக்குத்தத்தத்தைச் செய்துள்ள தேவனால் கூடும். அது காரியத்தைச் செய்யும். அவர், “ஆ, மகனே, நீ திரும்பிச் சென்றால் நலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகின்றது” என்று கூறினார். எனக்கு ஓய்வு தேவையில்லை. நான் உழைப்பிற்கு செல்ல வேண்டியுள்ளது. நான் மிக அதிக காலமாக ஓய்வில் இருந்து விட்டேன். இன்றைக்கு மக்களிடமாக இருக்கின்ற காரியமானது அதுவாகும். எழுந்து சென்று கொண்டேயிருங்கள். காலமானது ... ஜனங்கள் தொல்லையில் உள்ளனர். நாம் செல்வோமாக, அவர்களை கர்த்தராகிய இயேசுவண்டை மிகத் துரிதமாகக் கொண்டு வருவோமாக.  95. நாம் இங்கே கவனித்துப் பார்ப்போமானால், அந்த சிறிய தாவீது வந்து, “இதோ பாருங்கள், உங்களுடைய எல்லா கல்விப் பட்டங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது; உங்களுடைய கவசங்களைக் குறித்தும், நீங்கள் எல்லோரும் யுத்தமிட உபயோகிக்கும் காரியங்கள், வாதம் செய்வது, குழப்பமுண்டாக்குவது என்பவைகளைக் குறித்தும், எனக்கு ஒன்றுமே தெரியாது, ஆனால் ஒரு காரியத்தை மாத்திரம் நான் அறிவேன்: இந்த சிறிய பழைய கவண்கல்லில் நான் நம்பிக்கை வைத்து வந்துள்ளேன். இந்த கவண்கல்லைக் கொண்டு தான் தேவன் என்னை சிங்கத்தினிடமிருந்து தப்புவித்தார். இந்த கவண்கல்லைக் கொண்டு தான் மற்ற எல்லாக் காரியங் களிலிருந்தும் என்னை அவர் தப்புவித்தார், ஆகவே இந்த கவண்கல்லைக் கொண்டு விருத்ததேசனமில்லாத பெலிஸ்தனுடைய கைக்கும் என்னைத்தப்புவிப்பார்” என்று கூறினான்.  96. நான் பாவியாயிருந்து, இழக்கப்பட்டு, உலகத்திலே கிறிஸ்து இல்லாமல் மரித்துக் கொண்டிருந்த போது பரிசுத்தஆவியானவர் என்னை இரட்சித்தார் என்பதை நான் அறிவேன். நான் சோர்ந்து போயுள்ள நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் என்னை சந்தோஷப்படுத்துகிறார் என்பதை நான் அறிவேன். எனக்கு ஆகாரம் தேவைப்படும் போது பரிசுத்த ஆவியானவர் என்னை போஷிக்கின்றார் என்பதை நான் அறிவேன். தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கும் போது, நான் வியாதியாயிருப்பேனானால் பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு அதிகமாக என்னை சுகப்படுத்துவார்? உங்களுடைய மற்ற காரியங்களைக் குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைச் செய்துள்ளார் என்பதை நான் அறிவேன். அது தேவனுடைய வாக்குத்தத்தமாக இருப்பதால், தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தினோடே தம்மை பிணைத்துக் கொண்டு அதிலேயே நிலைக்கொண்டிருப்பார். தாவீதே, உன் கையிலிருக்கிறது என்ன? அவன், “ஒரு கவண்கல்” என்று கூறினான். ஆமென். "பதினைந்து அல்லது இருபது அடி நீளமுள்ள ஒரு ஈட்டியை வைத்துக் கொண்டு அங்கே நின்றுக் கொண்டிருக்கின்ற அந்த இராட்சதனோடு நீ எப்படி யுத்தமிடப்போகின்றாய்?” உன்னால் அவன் அருகாமையில் கூட நெருங்கவே முடியாதே. அதற்கு அவன், "நான் இதை சோதித்து நிரூபித்துள்ளேன். இது என்ன செய்யும் என்று எனக்குத் தெரியும். என்று கூறினான்.  97. அது சரியே. ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தேவனுடைய ஆவியால் பிறந்து பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பார்களானால், அது என்ன செய்யும் என்று அவர்கள் அறிவார்கள். நீங்கள் எதைக் குறித்தெல்லாம் விவாதம் செய்துக் கொண்டு மற்றும் உங்கள் வேதாகமக் கல்லூரிகள் என்ன சொல்லிக்கொடுக்கப் போகின்றது என்பதைக் குறித்து எனக்குத் தெரியாது; ஆனால் ஒரு காரியம் எனக்குத் தெரியும்; அது என்ன செய்யும் என்று தேவன் கூறியிருக்கின்றாரோ அதை அது செய்யும். 98. சிறிய தாவீது இயற்கையின் வழியாக தேவனைக் கற்றிருந்தான். அவன் அங்கே வெளியில் தனியாக இருந்தபடியால் அவன் அமர்ந்த தண்ணீர்களைக் குறித்தும் புல்லுள்ள இடங்களைக் குறித்தும் அவன் பேசினான். அவன் தேவனை அவருடைய அடிப்படையான நிலைமையில் கண்டான், தேவன் தம்முடைய இயற்கையில் இருந்து அசைந்துக் கொண்டிருந்தார். தேவன் இயற்கையில் இருக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவர் இயற்கையில் இருக்கின்றார். சூரியன் மறையும் போது அதிலும், மலர்கள் வளர்ந்து வரும்போது அதிலும் அவரைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும், சூரியன் எழும்பும் போது அதில் அவரைக் காண்பேன்.  99. இங்கே சில காலத்திற்கு முன்னர், அங்கே மேலே மலைகளில் இருந்தேன், நான் மிகவும் சோர்ந்து போய் இனிமேலும் பணியாற்ற முடியாது என்கின்ற ஒரு நிலை வரும் போது நான் அங்கே செல்வதுண்டு. ஒரு இலையுதிர்க்காலப் பொழுதின் போது நான் அங்கே மேலே சென்றேன். நான் கடம்பை மான் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். இலையுதிர்ச்சிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்தேன். நாங்கள் மிகவும் மேலே சென்றிருந்தோம். ஏனென்றால் பனியானது உருகி ஓடி மான் கூட்டமானது கீழே வரும்படிக்குச் செய்யவில்லை. நான் மேலே மரங்கள் இருந்த இடத்தின் ஓரத்தில் இருந்தேன். வருடத்தின் இலையுதிர்ச்சி காலத்தில் அங்கே மலைகளின் உச்சியில் - அது ..... சிறிது பனிப்பொழிவு இருக்கும், பிறகு சிறிது மழை பெய்யும், அதன் பிறகு சூரியன் வெளி வரும். மேலும் ... இலையுதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். நான் அங்கே சென்றுக் கொண்டிருந்த போது, வேட்டையாட வேண்டும் என்பதற்காக அல்ல ...... ஆனால் சிறிது கடந்து சென்று நான் தனியாக இருக்கவே சென்றேன். 100. நான் தேவனுடன் தனியாக இருக்க எனக்கு விருப்பம். ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் அது தான் பிரச்சனையாகும். சும்மா சோம்பித்திரிந்து சுற்றுமுற்றும் ஓடிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, நீங்கள் ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமான நேரம் தேவனிடம் செலவிட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எங்காவதொரு இடத்தில் சென்று ஜெபித்துக் கொண்டும், தேவனை தேடிக்கொண்டும் இருக்கத்தான் வேண்டும். ஆமென்.  101. அங்கே மேலே நான் சென்றுக் கொண்டே இருந்தேன்; அப்பொழுது ஒரு புயல் வந்தது, உடனே நான் இப்படியாக ஒரு மரத்தின் பின்னால் சென்று நின்றேன். நான் மரத்தின் பின்னால் நின்றுக் கொண்டிருந்தேன், காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. எப்படியாயினும் அங்கே காற்று வீசல் உண்டாகிக்கொண்டேயிருக்கும். அதற்கு பிறகு புயல் வீசி நின்ற பிறகு நான் மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தேன்; என் துப்பாக்கியைக் கீழே வைத்தேன். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன், எனக்கு முன்னால் வெகு தூரத்தில் கடம்பை மான் கூட்டம் சத்தமிடுவதைக் கேட்க ஆரம்பித்தேன். அவை புயலில் திசை மாறி சென்று விட்டிருந்தன. அவை ஒன்றையொன்று நோக்கி சத்தமிட்டுக்கொண்டிருந்தன. பல்  102. என் தாயார் பாதி இந்தியர் ஆவார், அதனால் தான் எனக்கு வெளியில் காட்டில் இருப்பது மிகவும் பிடிக்கும். ஓ, என்னே, தாவீது, “ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. ...” என்று கூறினது போல. ஆகவே அது அப்பொழுது உண்மையாகவே மிகவும் ஆழமாக அழைக்க ஆரம்பித்தது. அந்த கிரே ஓநாய்கள் அங்கே ஊளையிட ஆரம்பித்தது. கீழே இருந்த அதன் ஜோடி அதற்கு பதில் கொடுத்தது. நான் ஒரு குழந்தையைப் போல அழுதேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. அங்கே நின்றுக் கொண்டு என் கைகளை மேலே தூக்கிக் கொண்டு சத்தமிட்டு அழுதேன். 103. நான் அப்பொழுது உற்றுப் பார்த்தேன். அங்கே மேற்குவான விளிம்பில் சூரியன் வெளியே வந்தது, எல்லாவற்றையும் காண்கின்ற அந்த பெரிய கண்ணினூடாக எட்டிப் பார்த்தது; அங்கே சற்று தூரத்தில் எப்பொழுதும் பச்சையாகவே இருக்கின்ற காட்டின் மேற்புறம் பனிக்கட்டியால் உறைந்து போயிருந்தது. அங்கே பள்ளத்தாக்கின் குறுக்கே ஒரு வானவில்லை அது உருவாக்கிற்று. அப்பொழுது நான் நினைத்தேன், ஓ, தேவனே, எந்த இடத்தில் திரும்பிப் பார்த்தாலும் திரும்பிப் பார்க்கின்ற எல்லா இடத்திலும் அவரை உங்களால் காண முடியும். அதோ அங்கே அவர் இருந்தார். நான் நினைத்தேன், அதோ, அவர் அங்கே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார் ; அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதோ அவர் அந்த கடம்பை மான் கூட்டத்தில் இருக்கின்றார், இங்கே கீழே ஓநாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றனவே அங்கே அவர் இருக்கின்றார். இதோ அவர் இயற்கையில் இருக்கின்றார். பேதுரு கூறினது போல “இங்கே இருக்கிறது நல்லது. இங்கே நாம் மூன்று கூடாரங்களைப் போடுவோம்' என்று நான் நினைத்தேன்.  104. அப்பொழுது நான் மிகவும் பக்திவசப்பட்டு அந்த மரத்தைச் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டே என்னால் முடிந்த வரை உரத்தக் குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தேன், கூச்சலிட்டுக் கொண்டே என்னால் முடிந்த வரைக்கும் மேலும் கீழுமாக குதித்துக் கொண்டிருந்தேன். அந்த இடத்திற்கு யாராவது வந்திருப்பார்களானால், யாரோ ஒருவர் அந்தக் காட்டில் பைத்தியம் பிடித்து அலைகின்றார் என்று நினைத்து நிச்சயமாக என்னை மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல விழைந்திருப்பார்கள். ஏனென்றால் மனிதர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் முப்பத்தைந்து அல்லது நாற்பது மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தில் நான் இருந்தேன். நான் கர்த்தருடனே கூட தனிமையாக இருந்து ஒரு நல்ல தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். 105. நான் மேலே நோக்கிப் பார்த்து அதை நான் கண்டேன்... நான் நினைத்தேன், "ஆமாம். அந்த வானவில். தேவன் அதை நோவாவிற்கு கொடுத்தார். அவர் வானவில்லைப் போல பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார். அவர் முந்தினவரும் பிந்தின வருமாயிருக்கிறார், அவர் தாவீதின் வேரும் சந்ததியும் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறார். அப்பொழுது நான் என்னால் முடிந்த வரைக்கும் மறுபடியுமாக மரத்தை சுற்றி சுற்றி ஓடினேன், என் உச்சக் குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தேன்.  106. அப்பொழுது ஒரு பைன் அணில் ... சகோதரர்களாகிய நீங்கள் அதைக் கண்டிருக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அங்கே அந்த சிறிய பைன் அணிலானது ஒரு மரத்தின் மீது உட்கார்ந்துக் கொண்டிருந்தது. அந்த அணில் "கட், கட், கட், கட... கட, கட்” என்று சத்தமிட ஆரம்பித்தது, அது என்னை தூள் தூளாக கிழித்துப் போடுவது போல சத்தமிட ஆரம்பித்தது. அப்பொழுது நான், எதற்காக இந்த சிறிய அணிலானது கிளர்ச்சியுற்றிருக்கிறது? மிக அதிக சத்தம் போடுகிறதே என்று நினைத்தேன்.  107. அங்கே நான் நோக்கிப் பார்த்தேன், அப்பொழுது நான், ஒருக்கால் அது என்னைக் கண்டு பயப்படுகிறது போலும், என்று நினைத்தேன். பிறகு, நான் அப்புறம் பார்க்க நேர்ந்த போது, அங்கிருந்து கீழாக, புயல் காற்றானது ஒரு பெரிய கழுகை கீழே பறந்து இறங்கும்படிக்குச் செய்திருந்தது. அந்த பெரிய கழுகு வந்த போது தான் இந்த சிறிய அணிலானது அதை நோக்கி சத்தமிட ஆரம்பித்தது. அது ஒரு சிறிய கிளையின் மீது குதித்து உட்கார்ந்தது, அப்பொழுது அந்த அணில் மறுபடியுமாக, “கட, கட” என்று சத்தமிட ஆரம்பித்தது.  108. நான் அந்த பெரிய கழுகைப் பார்த்தேன். நான், இதோ கர்த்தாவே அந்த கழுகை பயமுறுத்தி விட்டேனா, நான் மிகச்சத்தமாக கூச்சலிட்டு விட்டேனா? என்று நினைத்தேன். ஆகவே நான் அந்த கழுகை நோக்கிப் பார்த்தேன். நான், இதோ, நான் ஏதோ ஒன்றைக் காணும்படிக்கு நீர் அந்தக் கழுகை. எனக்கு முன்பாக வைத்துள்ளீர். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நீர் அந்தக் கழுகை எனக்கு முன்பாக நிறுத்தியுள்ளீர், என்று நினைத்தேன். 109. நான் அந்தக் கழுகைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்; ஓ, அது மிகப் பெரியதாக இருந்தது, அது மிகப்பெரிய மகத்தான பறவையாக இருந்தது. அப்பொழுது அதனுடைய மகத்தான பெரிய மென்பட்டு துணியைப் போன்று காணப்பட்ட கண்களானது சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தது. நான் நினைத்தேன், “நல்லது, பையனே நான் உன்னை மெச்சத்தக்கதாக ஒரு காரியமிருக்கிறது; அது என்னவென்றால், நீ தைரியமிக்கவனாக இருக்கின்றாய்; நீ பயப்படவில்லை; மேலும் நான், ஏன் நீ பயப்படவில்லை ? அதை மாத்திரம் நான் அறிந்துக் கொள்ள விரும்புகிறேன். நீ பயப்படாமல் இருக்கின்ற காரணம் என்ன? என்னைக் குறித்த பயம் உனக்கு இல்லையா?” என்று நினைத்தேன். அப்பொழுது நான் அந்தக் கழுகை நோக்கிப் பார்த்தேன் பாருங்கள்? அப்பொழுது அது தன் சிறகுகளை முன்னும் பின்னுமாக சிலிர்த்து அசைத்தது (உங்களுக்குத் தெரியும்), அசைத்துக் கொண்டு அந்த மரக்கட்டையின் மீது முன்னும் பின்னுமாக நடந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தது. அது அந்த பைன் அணிலை பார்த்தது, பிறகு என்னை உற்றுப் பார்த்தது, நான், “பையனே, என்னால் உன்னை சுட்டு வீழ்த்த முடியும் என்று உனக்குத் தெரியுமா?” என்று கூறினேன். அக்கழுகு என்னை பார்த்துக் கொண்டேயிருந்தது, தொடர்ந்து முன்னும் பின்னுமாக அசைந்தது. எந்த ஒரு பயமும் அதைத் தொல்லைப்படுத்தவில்லை.  110. அப்பொழுது நான், ஏன் நீ பயப்படாமலே இருக்கின்றாய்? என்று நினைத்தேன். அப்பொழுது நான் “இப்பொழுது, கர்த்தாவே நான் சற்று ஆராயப்போகிறேன். ஏன் அவ்விதம் இருக்கின்றது? இதோ, நான் உம்மை அங்கே வானவில்லில் காண்கிறேன்; அங்கே ஓநாய்களின் கூட்டத்தில் உம் சத்தத்தை நான் கேட்கின்றேன்; அங்கே சூரியன் மறைதலில் உம்மை நான் காண்கின்றேன். இன்னுமாக இங்கே அந்த கழுகில் நீ இருக்கின்றீரே?" என்று கூற நேர்ந்தது. அப்பொழுது நான் அந்தக் கழுகை சிறிது உற்றுப் பார்த்தேன். நான், "ஆம், அது - அது பயமுறாமல் இருக்கின்ற காரணம் என்னவென்றால் அது தன் சிறகுகளை முன்னும் பின்னுமாக அசைத்துக் கொண்டிருக்கிறது, தேவன் அதற்கு இரு செட்டைகளைக் கொடுத்துள்ளார், நான் என் துப்பாக்கியை என் கையில் எடுக்குமுன்னரே அது பறந்து மரத்தின் உச்சிக்கு சென்று விடும், அப்பொழுது என்னால் அதைச் சுடவே முடியாது”, என்று நினைத்தேன், நான் "தேவனுக்கு மகிமை" என்றேன். மற்றுமொரு பிரசன்ன தருணம் எனக்குண்டானது. இன்னுமாக மரத்தை சுற்றி சுற்றி ஓட ஆரம்பித்தேன். நான், “அது சரி”, என்று நினைத்தேன். உங்களைச் சுற்றிலும் பரிசுத்த ஆவியானவரை உங்களால் உணர முடியுமானால் அது எப்படிப்பட்ட ஒரு வித்தியாசத்தை அது உண்டாக்கும். என்னவாயிருந்தாலும் எல்லாவற்றையும் - அப்படியே போகவிடுங்கள். அந்த சிறிய காரியத்தை நீங்கள் காண்கின்ற வரையிலும் அவர் இங்கே இருக்கின்றார் என்பது உனக்கு தெரியுமல்லவா என்று நினைத்தேன். யாரோ ஒருவர் என்னிடமாக, “சகோதரன் பிரன்ஹாம், ஏதாவது ஒரு இரவு கூட்டத்தில் நீர் தவறு செய்து விடுவீர் என்று உங்களுக்கு பயமில்லையா?" என்றார். நான், “இல்லை, அவரை நான் - உணர்ந்துக் கொண்டிருக்கும் வரையிலும் என்னால் தவறாகப் பேச முடியாது” என்றேன். இல்லை ஐயா, அவர் கடந்து செல்லும் போது நான் பிரசங்க மேடையிலிருந்து இறங்கிவிடுவேன். ஆனால் அவர் இருக்கின்ற வரையிலும்... 111. நான் அந்த கழுகை சில நிமிடங்களுக்கு கவனித்துக் கொண்டிருந்தேன், நான் என் பொருளின் பேரில் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். நான் அந்தக் கழுகை சிறிது கவனித்துப் பார்த்தேன். அந்த பைன் அணில் “சட, சட, சட” என்று சத்தமிடுவதைக் கேட்டு அந்த கழுகிற்கு அலுத்துப்போன போது, அப்பொழுது அது அப்படியே ஒரு மகத்தான குதி குதித்து உயரமாக எழும்பினது; அந்த குதிப்பில் நேராக மரங்களின் உச்சிக்கு சென்றது, இரண்டு முறை சிறகுகளை அடித்தது. அதற்குப் பிறகு மறுபடியுமாக தன் செட்டைகளை அடிக்கவில்லை. தன் சிறகுகளை எப்படி அசைத்து நிறுத்த வேண்டும் என்று அது அறிந்திருந்தது. நான் அதை கவனித்துக் கொண்டிருந்தேன். காற்று வரும்போதெல்லாம் அது சற்று மேலே எழும்பும். காற்று வரும்போதெல்லாம் அது சற்று அசைத்து மேலே எழும்பும். அது எழும்பி, மேலே, மேலே, மேலே, மேலே, பறந்து சென்றுக் கொண்டேயிருந்தது, ஒரு சிறு புள்ளியைப் போல வானத்தில் அது காணப்படும் வரைக்குமாக மேலே எழும்பி பறந்தது.  112. நான் அங்கே நின்றுக் கொண்டு என் உச்சக் குரலில் கூச்சலிட்டேன். நான், “ஆம் கர்த்தாவே, அதுவே தான், அதுவே தான். ஒரு குதி குதித்து மெத்தோடிஸ்டை சேர்ந்துக் கொள்வது பிறகு அங்கிருந்து மறுபடியுமாக பாப்டிஸ்டிற்கு குதித்துச் செல்வது, அங்கிருந்து பிரஸ்பிடேரியனுக்குச் செல்வது, அங்கிருந்து பெந்தெகொஸ்தே, அசெம்பிளீஸ், ஒருத்துவ சபை மற்றும் சுற்றிலும் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் செல்வது என்பதல்ல. அது சிறகுகளை சரியாக அமைத்துக் கொள்ளுதல் மட்டுமே.” என்றேன். அல்லேலூயா! அது சரி.  113. ஒரு சுகமளிக்கும் கூட்டத்திலிருந்து இன்னொரு சுகமளிக்கும் கூட்டத்திற்கு ஓடுதல் அல்ல. ஒரு மருத்துவரிடத்தினின்று இன்னொரு மருத்துவரிடமாகச் செல்லுதல் அல்ல, அது உங்கள் விசுவாச சிறகுகளை பரிசுத்தஆவியின் வல்லமைக்குள்ளாக எப்படி அமைத்துக் கொள்ளுதல் என்பதை அறிவது தான் காரியமாகும். ஒவ்வொரு முறையும் அது பறக்கும் போது, அது மேலே மேலே பறத்தல் ஆகும். (அல்லேலூயா.) நீ இந்த பூமிக்குரிய “சட சட, சட்” சத்தத்தை விட்டு விட்டு மேலே எழும்புதலாகும். "அற்புதங்களின் நாட்கள் கடந்த காலத்திற்குரிய ஒன்றாகும், அது முந்தைய காலத்து மக்களுக்குரிய ஒன்றாகும்' என்று கூறுகின்ற இந்த பழையக் கூட்டம் இருக்கின்றது, அதற்கு மேலாக பறந்து செல்லுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு முறையும் அசைந்து வருகையில், உங்கள் சிறகுகளை அதற்குள்ளாக அசைத்து அமைத்து, காட்சியிலிருந்து அப்படியே கடந்து சென்று விடுங்கள், வானாதி வானங்களுக்குள்ளாக மேலே பறந்து விடுங்கள். “ஆம், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்று நான் நம்புகிறேன். அற்புதங்கள் உள்ளதென்று நினைக்கின்ற அந்த மக்கள் சரியான மனநிலை இல்லாதவர்கள் என்று நினைக்கின்றேன்” என்று கூறுகின்ற, பூமியில் பிணைக்கப்பட்டிருக்கின்ற பூமிக்குரிய இன்னார்-இன்னார் போன்றவர்களை அப்படியே விட்டு விடுங்கள். அப்படியே மேலே பறந்து செல்லுங்கள். ஆமென். அப்படி இப்படி என்று சிறகை அடித்துக் குதிக்காதீர்கள். உங்கள் சிறகுகளை சீராக அமைத்துக் கொண்டு, பரிசுத்த ஆவி உங்களைப் பற்றி மேலே செல்லும்படிக்கு இழுக்க, மேலே, மேலே இழுக்க விட்டு விடுங்கள். நீங்கள் காட்சியிலிருந்து கடந்து செல்லும் வரைக்கும் அப்படியே சீராக பறந்துக் கொண்டேயிருங்கள்.  114. பிறகு, ஒரு நாள் நான் கால்நடைகளை அங்கே மேலே மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கழுகைக் குறித்த வேறொரு காரியத்தை நான் கவனிக்க நேர்ந்தது. ஒரு தாய்க் கழுகு தன் கூட்டைக் கட்டுகையில், பெரிய குச்சிகளையும் மற்றவைகளையும் கொண்டு அது கூட்டைக் கட்டுகின்றது. அதைச் சுற்றிலும் நாற்றமெடுக்கும். 115. ஆகவே, அந்த சிறு கழுகுக் குஞ்சுகள் பறக்கக் கற்றுக் கொள்ளும் போது... நான் கவனித்துக்கொண்டிருந்தேன்... நான் என் குதிரையின் கயிற்றை ஒரு சிறு மரத்தில் சுற்றி கட்டி குதிரையை நிறுத்தி விட்டு அங்கே சென்றேன். சில தூரத்தில் இருப்பவைகளை காண உதவும் தொலைதூரக் கண்ணாடிகளை வைத்திருந்தேன், அதைக் கொண்டு கவனித்தேன். அங்கே மேலே உச்சியில் அந்தத் தாய்க்கழுகை நான் கண்டேன். அது ஏதோ ஒன்றைச் செய்துக் கொண்டிருந்தது; சுற்றி சுற்றி சிறகை அடித்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. என் தொலைதூரக் கண்ணாடியை அக்கழுகிற்கு நேராக வைத்துப் பார்த்தேன், ஏனென்றால் அது கால்நடைகளை கீழேக் கொண்டு வருதல் நேரமாக இருந்தது. நான் அங்கே மேலே நோக்கிப் பார்த்தேன், அந்த சிறு கழுகுக்கு குஞ்சுகளை அது எப்படி கூட்டை விட்டு வெளியே எடுத்துக் கொண்டிருந்தது என்று பார்த்தேன். அது அந்த கழுகுக் குஞ்சுகளை வெளியே சுற்றி சுற்றி இழுத்துக் கொண்டே இருந்தது. 116. சிறிது நேரம் கழித்து அக்கழுகு தன் குஞ்சுகளை தன்னுடைய செட்டைகளின் மேல் ஏற வைத்தது; அந்த பழைய நாற்றமெடுக்கின்ற கூட்டிலிருந்து அக்குஞ்சுகளை வெளியே எடுத்து, குஞ்சுகளுடன் கீழே பள்ளத்தாக்கிற்குச் சென்றது; அங்கே தன்னுடைய பெரிய செட்டைகளை அப்படியே மடித்தது, அக்கழுகு தன்னுடைய செட்டைகளை மடித்த போது அந்த சிறு கழுகு குஞ்சுகளெல்லாம் கீழே இறங்கி அங்கே சுற்றுமுற்றும் நடக்க ஆரம்பித்தது; அக்கழுகுக் குஞ்சுகள் முதல் தடவையாக தங்கள் கால்களை புல்லின் மீது வைத்தது. என்னே, அவைகள் ஒரு அருமையான தருணத்தைக் கொண்டிராமல் வேறு என்னத்தை அது உடையதாக இருக்கும்! நான், “கர்த்தாவே, அது என் வாழ்க்கையில் கண்டிராத ஒரு பழமை நாகரீக பரிசுத்த ஆவியின் எழுப்புதலேயல்லாமல் வேறெதுவாக இருக்கமுடியும்” என்று நான் கூறினேன். அது சரி. நான், “அவைகளைப் பாருங்கள்” என்றேன். அங்கே மேலே இருக்கின்ற அந்த பழைய நாற்றமெடுக்கும் கூட்டிலிருந்துவெளியே வந்துள்ளன, உங்களுக்குத் தெரியுமா, அந்தக்கூட்டில் பழைய நாற்றமெடுக்கின்ற குச்சிகள் கம்புகள் நிறைந்ததாகஇருக்கும். 117. அந்த விதமாகத் தான் தேவன் செய்கின்றார். அவர் உங்களை கழுகின் செட்டைகளின் மேலே வைத்து, அந்த நாற்றமெடுக்கின்ற உலகக்காரியங்களினின்று உங்களை வெளியே எடுத்து, எந்த ஒரு காரியமும் சாத்தியமான ஒன்றாக, நிகழக்கூடிய (All things are possible) இந்த இடத்தில், உங்களால் முடிந்த வரைக்கும் முழு விடுதலையுடனே இருக்கத்தக்கதாக இந்த இடத்திற்கு அவர் உங்களைக் கொண்டு வருகின்றார். ஆமென். 118. அப்பொழுது, அக்கழுகுக் குஞ்சுகள் இங்குமங்குமாக ஓடி இங்கே சிறிது காட்டுப் புற்களை கொத்தாகப் பிடுங்குவது, அங்கே கொஞ்சம் பிடுங்குவதுமாக பிடுங்கி விளையாடிக் கொண்டிருந்தன, எந்த ஒரு கண்டிப்பதற்கு யாரும் இல்லாமல் ஒரு பெரிய தருணத்தை அக்குஞ்சுகள் அனுபவித்துக் கொண்டிருந்தன. நான், “சரி, இந்த தாய்க் கழுகு அடுத்ததாக என்ன செய்யப்போகின்றது?” என்று நினைத்தேன்.  119. அதனுடைய குஞ்சுகள் மிக அருமையாக விளையாட ஆரம்பித்து மிக அருமையான ஒரு தருணத்தை அவை அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அக்கழுகு தன் செட்டைகளை விரித்து அமைத்தது. அங்கே இருந்ததிலேயே மிக உயரமான மலைப்பகுதிக்கு அது பறந்து சென்றது. அது அங்கே சென்று அமர்ந்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க ஆரம்பித்தது.  120. ஓ, என்னே, அப்பொழுது நான் நினைத்தேன். அது சரி, கர்த்தராகிய இயேசு என்னை மிக உளையான சேற்றிலிருந்து வெளியே தூக்கி எடுத்து கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் உட்கார வைத்து, அவர் மகிமையின் அலங்கங்களுக்கு ஏறிப்போய், மிக உயரத்தில் உட்கார்ந்துக் கொண்டு என்னை கவனித்துக் கொண்டிருக்கின்றார். அவருடைய கண்கள்அடைக்கலான் குருவிகளின் மேலும் நோக்கமாயிருக்கிறது. அவர் என் மேல் கண்ணோக்கமாக இருக்கின்றார் என்று நான் அறிவேன். நாம் அவருடைய தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் வரைக்கும் எந்த ஒரு தீங்கும், எந்த ஒரு ஆபத்தும், எந்த ஒன்றுமே நடக்காது. ஆமென். எது வந்தாலும், எது சென்றாலும், என்னவாக இருந்தாலும் சரி; மரணம் கூட தன்னுடைய கொடுக்கை இழந்து போனது. ஏனென்றால் அவர் இன்றிரவு மகிமையில் நின்றுக் கொண்டிருக்கின்றார்; தம்முடைய சிறு பிள்ளைகள் தேவனுடைய சிங்காசனத்தைச் சுற்றி ஆர்ப்பரித்துக் கொண்டு தேவனுடைய வார்த்தையில் களிகூர்ந்துக் கொண்டு, தேவனுடைய பிரசன்னத்தில் (ஓ, என்னே) எந்த ஒரு கவலையுமில்லாமல் சத்தமிட்டுக் கொண்டிருக்கையில், சரியாக என்ன நடக்கப்போகின்றது என்று காணத்தக்கதாக இந்தக்கூட்டத்தை அவர் அங்கே மகிமையிலிருந்து கண்ணோக்கமாயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார். அந்தச் சிறு கழுகுக் குஞ்சுகள் ஏதாவது ஒன்று வருகின்றதா என்றுக் கூட பார்க்கவில்லை. ஓ மனிதனே, ஒரு ஓநாயை அந்தக் குஞ்சுகளில் ஒன்றை நோக்கிக்கூட அனுப்புவாயானால், அந்த ஓநாய் தன் வாழ்க்கையில் பெற்றிராத ஒரு மிக பயங்கரமான அடியைப்பெற்றிருக்கும். ஆமென். ஓ, என்னே.  121. ஆகவே அது அங்கே உட்கார்ந்த போது, பிறகு சிறிது நேரம் கழித்து... நான் உட்கார்ந்துக் கொண்டு சுமார் இரண்டு மணி நேரமாக அவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வடதிசையிலிருந்து வேகமாக ஒரு சிறிய பச்சைக் கீற்றைப் போல வந்தது - புயல்கள் மிக வேகமாக வந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்தக் கழுகு மிகப்பெரிய ஒரு சத்தத்தை இட்டது, அங்கே மேலே இருந்த கூட்டிலிருந்து அது கிளம்பின போது . . . அது நேராக பறந்து இறங்கி ஒரு கூக்குரலிட்டது. அப்பொழுது அந்த புல்வெளியில் ஆங்காங்கே சிதறியிருந்த கழுகுக்குஞ்சுகள் எல்லாம் ஓடி வந்து ஒன்றாகச் சேரத்துவங்கின. அக்கழுகு தன்னுடைய செட்டைகளை இந்த விதமாக விரித்தது. அப்பொழுது அந்த சிறிய கழுகுக் குஞ்சுகள் ஒவ்வொன்றும் ஓடி வந்து அந்த தாய்க்கழுகின் செட்டைகளின் மேல் குதித்து ஏறிக்கொண்டன, தங்கள் சிறிய அலகை அந்த சிறகிற்குள்ளாக அப்படியாக வைத்துக் கொண்டன. அப்பொழுது அந்த கழுகு தன்னுடைய மகத்தான மிகப்பெரிய தலைச்சிறந்த செட்டைகளை எழுப்பினது, அங்கே அந்தப் புயலானது மணிக்கு அறுபது மைல் வேகத்திற்கு அடித்துக் கொண்டு மலையின் கீழாக வந்துக் கொண்டிருந்தது. அக்கழுகு தன்னால் முடிந்த வரை மிக வேகமாகப் பறந்த நேராக அந்த மலைக்குக் சென்று அவைகளை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றது.  122. நான் நினைத்தேன். “ஆம், வருகின்ற என்றாவதொரு நாட்களில், மேலே உன்னதத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தம் வரும்; கர்த்தராகிய இயேசுவானவர் வந்து தம்முடைய மகத்தான செட்டைகளை விரிப்பார், அப்பொழுது அவருடைய சிறு பிள்ளைகள் எல்லோரும் அந்த கரடு முரடான சிலுவையின் கரங்களின் மேல் குதித்து ஏறுவார்கள், அப்பொழுது இந்த வாழ்க்கையில் புயல் முடியும் வரைக்கும் இந்த நாட்களிலே பாதுகாப்பிற்குள்ளாக நாம் தூக்கிச் செல்லப்படுவோம்”. ஓ, தேவனை, அவருடைய இயற்கையிலே நீங்கள் நோக்கிப் பார்ப்பது எவ்வளவு அற்புதமான ஒன்றல்லவா.  123. தாவீது இதைக் கண்டிருந்தான், தேவன் இருந்தார் என்றும் தேவன் விடுவிப்பார் என்றும் அவன் அறிந்திருந்தான். அவன் தேவனை இயற்கையில் கண்டிருந்தான். அதனால் தான் அவன், “இந்த சிறு கவண்கல்லை எனக்குக் கொடுங்கள். அதை நான் ஏற்கெனவே உபயோகித்துப் பார்த்துள்ளேன். ஏதாவதொன்றைக் குறித்து நான் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த கவண்கல்லைக் குறித்து மாத்திரமே அறிந்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினான். ஒரு விசுவாசியும் கூட ஏதாவதொன்றைக் குறித்து அறிந்துக் கொள்ளவேண்டுமென்றால் இந்த ஒன்றைக் குறித்து அவன் அறிந்துக் கொள்ள விரும்புவான், “அதை தேவன் கூறியுள்ளார். இது தான் அந்த பழைய கவண்கல்லாகும். இதை நான் எந்த நேரத்திலும் நம்புவேன், பிசாசு வைக்கின்ற எந்த ஒன்றுக்கும் எதிராக ... (ஆமென்) இது தேவனுயைட வார்த்தையாகும்”  124. ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ தேவனை அவருடைய வார்த்தையின் பேரிலே அப்படியே தைரியமாக நம்பிக்கை வைத்து அதை எடுப்பார்களானால், தேவனுடைய வார்த்தை மாத்திரமே சாத்தானை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தோற்கடிக்கும். ஆமென். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, “சரி, புறப்பட்டுப் போ, கர்த்தர் உன்னோடே கூட இருப்பாராக” என்று கூறுவதை என்னால் காணமுடிகின்றது.  125. அவன் அங்கே கீழே சென்று, தேவனுடையவைகளை எடுத்தான், ஐந்து சிறு கற்களை எடுத்து அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அட்டைப் பையிலே போட்டான். அவைகளில் ஒன்றைத் தன்னுடைய கவணிலே வைத்து கோலியாத்தை சந்திக்கும்படிக்கு அங்கே போனான். அப்பொழுது கோலியாத் அவனைப் பார்த்து “நான் நாயா?” என்றான். அவன் தன்னுடைய தேவனின் நாமத்தினாலே தாவீதை சபித்தான். அவன், “இதோ நான் உன்னை வீழ்த்துவேன். மிகவும் ஒல்லியான உருவம் கொண்டவனே, பரிசுத்த உருளையனே, உன்னை எடுத்து, இந்த ஈட்டியை உனக்குள்ளாக குத்தி உன்னை மேலே தூக்கி தொங்க விடுவேன், அப்பொழுது ஆகாயத்துப் பறவைகள் உன்னை சிறிது நேரம் சாப்பிடட்டும்' என்று கூறினான். ஆம் ஐயா. "தாவீது பரிசுத்த உருளையனாக இல்லை” என்று நீங்கள் கூறுகின்றீர்களா, ஆம், அவன் அப்படித்தான், நீங்கள் பரிசுத்த உருளையன் என்று அழைக்கிறீர்களே, அப்படித்தான் அவனும் இருந்தான். 126. கர்த்தருடைய பெட்டி வரத்துவங்கின போது அவன் அங்கே சென்று அவனால் முடிந்த வரைக்கும் அப்பெட்டியின் முன்பாக நடனம் பண்ணினான்; அவனுடைய மனைவி. அவனைப் பார்த்து பரியாசம் செய்தாள்.... 127. அவன், உனக்கு அதைப் பிடிக்கவில்லையா, இதைப்பார் என்றான். அவன் மறுபடியுமாக பெட்டியைச் சுற்றி, சுற்றி, சுற்றி நடனம் ஆடினான். அவன் ஒரு பரிசுத்த உருளையன் இல்லையென்றால், என் வாழ்க்கையில் ஒரு பரிசுத்த உருளையனை நான் கண்டதேயில்லை என்பதே அதன் அர்த்தமாகும். உங்களுக்குப் புரிகின்றதா. ஒருவர் என்னிடம், “சகோதரன் பிரன்ஹாம், ஏதோ ஒரு புதிய விதமான ஒரு மதத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்களல்லவா, அப்படித்தானே?' என்று கேட்டார். நான், “இல்லை, பழைய விதமான அருமையான ஒன்றையே நான் கொண்டுள்ளேன்” என்றேன். ஆமென். அவர், 'நான் என்ன கூற முனைந்தேன் என்றால், அந்த கூச்சல் போடுகின்ற மதத்தைத் தானே” என்றார்.  128. அதற்கு நான், “எனக்குத் தெரிந்த வரை இருப்பதிலேயே மிக பழமையான மார்க்கம் அதுவே தான்” என்றேன். மேலும் நான் கூறினதாவது, தேவன் யோபுவிடம், “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய், விடியற் காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவப்புத்திரர் கெம்பீரித்தார்களே, உலகம் தோன்றுவதற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீ எங்கிருந்தாய்” என்று கூறினார். ஆமென். எப்படியாயினும் நீங்கள் என்னை பரிசுத்த உருளையன் என்று தான் அழைக்கப்போகிறீர்கள். ஆகவே நீங்கள் அதற்கு தயாராகி, அப்படி அழைக்கப்படும் போது கேட்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவனியுங்கள், சகோதரர்களே. 129. உங்களுக்கு ஒன்றை நான் கூறட்டும், தாவீது அறிந்திருந்தான், அவன் அந்த பழைய கவணை எடுத்து சுற்றி வைத்துக் கொண்டான். அவன் அங்கே சென்று, "ஒரு பெலிஸ்தனாக, பெலிஸ்தனின் நாமத்தாலே கவசத்தோடும் ஈட்டியோடும் நீ என்னை சந்திக்க வருகிறாய்; ஆனால் நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலின் கர்த்தராகிய தேவனின் நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் உன்னுடைய செத்த பிணத்தை பூமியின் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் கொடுப்பேன்' என்று கூறினான். நான் இந்த பெலிஸ்தர்களின் மாம்சத்தை எடுத்து ... அப்பொழுது கோலியாத் அவனுக்கு எதிராக ஓடி வர ஆரம்பித்தான்.  130. இப்பொழுது, தாவீதைக் கவனியுங்கள், அவன் அந்த சிறிய நீரோடையைக் கடந்து அவனை சந்திக்க ஓடினான். அவன் ஓடின போது, அவன் தன் கையில் என்னத்தைக் கொண்டிருந்தான்? இதோ, இதைத் தான் தாவீது வைத்திருந்தான். அவன் ஐந்து கற்களைக் கொண்டிருந்தான். விசு-வா-ச-ம் F-A-I-T-H ஐந்து விரல்க ள் J-E-S-U-S, இயேசு, எடுத்துக்கொண்டு ஓடி வருகிறான். ஐந்து கற்கள் மற்றும் ஐந்து விரல்கள், கர்த்தராகிய இயேசுவில் விசுவாசம். அப்பொழுது அந்தக் கல் அந்த இராட்சதனின் மண்டைக்கு நேராக செலுத்தப்பட்டது. தாவீது அவனை வீழ்த்திக் கீழே தள்ளி அவனுடைய தலையை வெட்டி எடுத்தான். அவன் அவ்விதமாகச் செய்த போது சுற்றுமுற்றும் பார்த்தான், அவன் செய்ததைக் கண்ட மற்ற போர்ச்சேவகர்கள் தைரியம் கொண்டு தங்கள் பட்டயத்தை வெளியே எடுத்து பெலிஸ்தர்களை எதிர்த்து போரிட்டு பின்னே தள்ளி அவர்களை வெட்டிப் போட்டார்கள்.  131. இங்கே சில வருடங்களுக்கு முன்னர் நான் பிரசங்கிக்க ஆரம்பித்த போது, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கிப்போர் ஏறக்குறைய ஒருவர் கூட இல்லை. காங்கிரஸ்காரர் உப்ஷா மற்றும் அநேகர் சுகமாக்கப்பட்டதைஅவர்கள் கண்ட போது, நான் உங்களுக்குக் கூறுகிறேன். பிரஸ்பிடேரியன்கள், மெத்தோடிஸ்டுகள், அசெம்பிளீஸ் ஆஃப் காட் மற்றும் எல்லோரும் ஒருவரைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்கள் ஒருவரைப் பெற்றுக்கொண்டார்கள், சர்ச் ஆஃப் காட் ஒருவரைப் பெற்றுக்கொண்டனர். ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் இன்னொருவர் யாரோ ஒருவரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே சகோதரனே, நாம் பெலிஸ்தர்களை வலது புறமாகவும் இடது புறமாகவும் வெட்டிக் கொண்டே இருக்கின்றோம். அல்லேலூயா, ஏனென்றால் இன்றிரவு ஒவ்வொரு இருதயமும் தைரியங்கொள்கின்றது, மேலும் இன்னும் பாதிப்பேர்களுக்கு காரியமானது இன்னுமாகச் சொல்லப்படவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் வாக்குத்தத்தம் செய்துள்ளார். இன்றிரவு உங்கள் கையிலிருக்கிறது என்ன? நீங்கள் எதை உங்கள் கையில் கொண்டிருந்தாலும் அதைத் தேவனுடைய மகிமைக்கென்று உபயோகப்படுத்துங்கள்.  132. சிம்சோன் என்னும் பெயரைக் கொண்ட ஒரு நபரை அங்கே என்னால் காணமுடிகின்றது. அவன் ஒரு நாளிலே அங்கே சென்றான் (பெலிஸ்தர்கள் சிறிது தீங்கை அங்கே விளைவித்திருந்தனர்). சிம்சோன் சில நரிகளின் வால்களை ஒன்று சேர்த்துக்கட்டி அவர்களுடைய பயிர்களை சுட்டெரித்துப் போட்டான். அப்பொழுது அந்த இஸ்ரவேலர் அங்கே வந்து அவனைப் பிடித்து “உன்னை நாங்கள் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்' என்று கூறினர்.  133. அப்பொழுது அவர்கள் அவனை அங்கே கொண்டு போய் அவனை சில கயிறுகளால் கட்டி அவனை அங்கே கொண்டு சென்றார்கள். அங்கே பெலிஸ்தர்கள் அவனை அவமானப்படுத்தி துன்புறுத்த எத்தனித்திருந்தனர். அவனை அப்படிச் செய்தபோது, கர்த்தருடைய ஆவி அவன் மீது வந்தது. ஆமென். அதுதான் வித்தியாசத்தைப் பிறப்பித்தது. கர்த்தருடைய ஆவி அவன் மீது வந்திருப்பதை அவன் உணர்ந்தபோது அவன்கையில் அப்பொழுது ஒன்றுமே இல்லாதிருந்தது. அவன் கீழே பார்த்தான். அங்கே கழுதையின் தாடை எலும்பு கிடந்தது. அவன் அந்த தாடையெலும்பை தன் கையில் எடுத்து அதினாலே ஆயிரம் பெலிஸ்தரைக் கொன்று போட்டான். ஆமென். அவன் கையில் வைத்திருந்தது அவ்வளவே தான்.  134, அவன் முன்னே சென்று “இதோ, சற்றுப் பொறு. கீழே இருக்கின்ற இந்த கழுதைத் தாடை எலும்பை நான் எடுத்து அது அழுத்தத்தைத் தாங்குமா இல்லையா என்று நான் சோதித்துப் பார்க்கட்டும்” என்று கூற வேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அந்த விதமான காரியங்களைப் பற்றி சிந்திக்கக் கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை. ஒரு அவசர நிலைமையாய் அவனுடைய நிலைமை இருந்தது, பெலிஸ்தர் அவன் மீது வந்திருந்தனர். அவன் செய்ய வேண்டி இருந்த ஒன்றே ஒன்று என்னவென்றால் ஒரு தாடை எலும்பை எடுத்து சண்டையிட வேண்டியது மாத்திரமே தான். அங்கே இருந்தது அது மாத்திரமே...  135. ஆகவே இன்றிரவில், நீங்கள் ஓடிச்சென்று இந்த காரியமானது என்னவென்று யோசித்துப் பார்க்க உங்களுக்கு நேரமே கிடையாது. நாளை இரவு எழுப்புதலானது முடிந்து விட்டிருக்கும். நாம் தேவனுடைய வார்த்தையை எடுப்போமாக. உங்களுடைய கையிலிருப்பது அதுவே. உங்களுக்குள்ளாக இருக்கின்ற எல்லாவற்றுடன் நாம் போரிடுவோமாக. ஆமென். தேவன் சிம்சோனுக்கு வெற்றியை அளித்தார்.  136. வேதாகமத்தில் சம்கார் என்னும் பெயரைக் கொண்ட ஒரு சிறிய மனிதன் இருந்தான். நியாயாதிபதிகள் புஸ்தகத்தில் அவனுடைய காரியமானது கவனிக்கப்படக்கூட முடியாமல் இருக்க ஏதுவுண்டு, அப்படிப்பட்ட ஒரு சிறிய மனிதனாக அவன் இருந்தான். அவனைப் பற்றி சிறிது நாடகப்பாணியில் பார்ப்போமாக.. 137. அவன் மிகவும் எளிமையான ஒரு மனிதனாக இருந்தான், அங்கே அவனை என்னால் காணமுடிகின்றது. ஒவ்வொருவரும் தான் விரும்பியபடி செய்துக்கொண்டிருந்த ஒரு நேரமாக அது இருந்தது. அப்பொழுது இஸ்ரவேலுக்கு ராஜா இல்லாதிருந்தது. அது முழுவதுமாக வேறுபடுத்தப்பட்டு, இன்றைக்கு சபை எப்படியிருக்கின்றதோ அப்படியே அவர்கள் அவர்களுக்குள்ளாக அநேக சிறு சிறு குழுக்களாக பிரிந்திருந்தனர்.  138. ஒன்று அசெம்பிளியாக இருக்கின்றது. மற்றொன்று தேவனுடைய சபை ஸ்தாபனமாக இருக்கின்றது. மற்றொன்று ஒருத்துவமாக இருக்கின்றது. மற்றொன்று பாப்டிஸ்டாக இருக்கின்றது. ஒன்று பிரஸ்பிடேரியனாக இருக்கின்றது. ஒன்று மெதோடிஸ்டாக இருக்கின்றது. ஓ, என்னே. இங்கே உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அந்த சபைக்கு சென்று விடுகிறோம், அங்கிருந்து வேறே செல்கிறோம். அங்கிருந்து வேறு சபைக்கு செல்கிறோம். மற்றும் அங்கிருந்து ... ஓ, என்னே, எனக்கு - எனக்கு - எனக்கு அது சிறிது கூட புரியவில்லை .  139. அவர்கள் அங்கே வந்த போது . . . ஆகவே, ஓ, அவர்களுக்குத் தேவைப்பட்டது என்னவென்றால் ...... அவர்களுக்கு அப்பொழுது தேவைப்பட்டது என்னவெனில் ஒரு அருமையான பழமை நாகரீக பாணியிலான, இன்றைக்கு நமக்குத் தேவைப்படுகின்ற விதமான ஒரு விடுதலையே (ஆமென்), சபையானது ஜீவனுள்ள தேவனுடைய விசுவாசத்திற்கு மறுபடியுமாக திரும்பிச் செல்லுதல், தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு திரும்பிச் செல்லுதல், தேவனுடைய மகிமைக்கு திரும்பிச் செல்லுதல், தேவனுடைய வல்லமைக்கு திரும்பிச் செல்லுதல். 140. சம்கார் தன்னுடைய எல்லாவற்றையும் தயார் படுத்தினான், ஒவ்வொரு வருடமும் அவன் செய்தது போல தன்னுடைய கோதுமையைத் தயார்படுத்தினான். அவன் தன்னுடைய பயிர்களை அறுவடை செய்து வைக்கும் போது பெலிஸ்தர் அங்கே வந்து அதை அவனிடத்திலிருந்து எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள். பிசாசும் அந்த விதமாகத் தான் செய்கின்றான். அதைத்தான் பிசாசு அருமையாகச் செய்வான். நீங்கள் சிறிது தைரியத்தை வளர்த்து அல்லது அதைப் போன்று ஒன்றைச் செய்யும் போது, அப்பொழுது பிசாசு வருவான், அதை உங்களிடமிருந்து எடுத்துச் சென்று விடுவான். அது சரி.  141. இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கின்ற எழுப்புதலைப் போலவே - நீங்கள் அதை ஆரம்பித்து, தேவனுடைய மகிமையானது விழ ஆரம்பிக்கும் போது, அப்பொழுது யாரோ ஒரு போலியாள் அங்கே வந்து சரியாக இல்லாது இருக்கின்ற ஒன்றைச் செய்து, காரியத்திலிருந்து மகிமையை எடுத்துப் போடுவான். இங்கே சிறிது காலத்திற்கு முன்னர் நம்முடைய கிறிஸ்தவ சகோதரிகளில் ஒருவருடன் நான் சென்றேன், அவள் யேசபேலைப் போல முகத்திற்கு வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள். நான், 'உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன்.  142. அதற்கு அவள், "ஆம், தேவனுக்கு மகிமை. இது பெண்களின் விடுதலையைக் குறிக்கும் ஒன்றாகும் என்று என் மேய்ப்பர் என்னிடம் கூறினார்' என்று கூறினாள். பெண்களின் விடுதலையா? உங்களுக்கு என்ன ஆயிற்று? அதுவல்ல காரியம். அப்படிப்பட்டது இல்லவே இல்லை. கிறிஸ்து உங்களை பாவத்திலிருந்து விடுவித்தாரே; ஆகவே அதைப்போன்று நடந்துக் கொள்ளுங்கள், அதைப் போன்று உடுத்திக் கொள்ளுங்கள். சபையானது கட்டி எழுப்பப்பட்டு சிறந்த ஒரு துவக்கத்தைப் பெறும் போது, அப்பொழுது அந்த விதமான ஒன்றானது நடந்து தான் ஆக வேண்டும். ஆம், ஐயா.  143. அதற்கு அவள், “சரி, நான் உங்களுக்குக் கூறுகிறேன். என் மேய்ப்பர் என்னிடம் நீ இவை எல்லாவற்றையும் செய்யலாம் என்று கூறினார்...” என்று கூறினாள். ஒரு வீட்டின் முற்றத்திற்குவர்ணம் தீட்டுகின்றதற்குப் போதுமான அளவிற்கு அவள் முகத்தில் தீட்டியிருந்தாள். அவளுடைய - அவளுடைய நகங்களானது பச்சை மாட்டிறைச்சி எலும்பைச் சாப்பிட்டது போலக் காணப்பட்டது, அவளுடைய நகங்களைச் சுற்றிலும் இரத்த நிலத்தில் இரத்தம் போலக் காணப்பட்டது. நான் "பெண்ணே நீ எனக்கு ஒரு கிறிஸ்தவளைப் போலக் காணப்படவில்லையே” என்று நினைத்தேன்.  144. கவனியுங்கள், பெண்ணே, அந்த விதமான அர்த்தமற்றவைகளை உங்கள் தொண்டைக்குள்ளாக ஊற்றப்பட அனுமதிக்காதே. ஒரு அருமையான பழமை பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது உங்களை அதினின்று சரியாக அப்படியே வெளியே எடுத்து ... ?..... அது சரி. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எங்கோ ஓரிடத்தில் வழி தவற விட்டுள்ளீர்கள். அந்தப் பெண் பிரசங்கி கூறினதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை . . . கூறப்போனால் முதலாவதாக அப்படிப்பட்டவைகளை உனக்குக் கூறுவதற்கு அவள் தேவனால் நியமிக்கப்படவில்லை. அது சரி. அது வார்த்தைக்கு முரணான ஒன்றாகும்.  145. கவனியுங்கள். வேதாகமத்தில், ஒரு மனிதனைச் சந்திக்க தன் முகத்திற்கு வர்ணம் பூசினதாக ஒரேயொரு பெண் தான் குறிப்பிடப்படுகிறாள், அவள் யேசபேல் ஆவாள். தேவன் அவளை நாய்களுக்கு இரையாக்கினார்.  146. ஆதலால், முழுவதுமாக வர்ணம் தீட்டியுள்ள ஒரு பெண்ணைக் காண்பீர்களானால், நீங்கள் அவளை “செல்வி நாய் ஆகாரக்கறியே, (Miss. Dog meat) எப்படி இருக்கிறீர்கள்” என்று கூறலாம். அந்த விதமாக தேவன் யேசபேலுக்குச் செய்தார். அவளை ஒரு நாய் தின்னும் மாம்சமாக ஆக்கினார். அதற்கு எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம்; அது பிசாசினால் உண்டானதாகும். சரி. ஓ, யாக்கோபு தன்னுடைய மனைவியினிடமும், மகளிடமும் கூறினது போல அவள் முதலாவதாக தன்னைச் சுத்தம் பண்ணி அதைப் போலசெயல்பட வேண்டியவளாக இருக்கின்றாள். நீங்கள் எவ்வாறு இருக்கவேண்டுமோ அந்த விதத்திலே உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். ஆமென்.  147. இன்றிரவு நமக்குத் தேவைப்படுவது என்னவென்றால் ஒரு அருமையான பழமை பாணியிலான பரிசுத்த ஆவியின் எழுப்புதல் மற்றும் சபையின் உள்ளும் வெளியிலும் அசைந்துக் கொண்டிருக்கின்ற தேவனுடைய வல்லமைக்குத் திரும்பக் கொண்டு வருகின்ற பிரசங்கம் மற்றும் விறைப்பான குளிர்ந்த நிலைகள் தகர்க்கப்படுதலேயாகும். அல்லேலூயா. ஆம், ஐயா, அது தான் நமக்குத் தேவைப்படுகின்றது. ஆம் ஐயா, அது சரி.  148. சம்கார் அங்கே சென்றான், அந்த நேரத்தில் அவன் சிறிது காரியத்தைச் சேர்த்த போது அப்பொழுது அந்த சமயத்தில் அவ்விதமான ஒரு காரியமானது நடந்தாக வேண்டும். அந்த விதமாகத் தான் சபைக்கும்... எழுப்புதலானது ஆரம்பிக்கையில், அப்பொழுது அதற்கு எதிராக ஏதாவதொன்று எழும்பித்தானாக வேண்டும். சகோதரனே, அந்த பழமை பாணியிலான அப்படியே பிரசங்கி.... 149. ஆம், எங்கள் பிரதேசத்தில் நாங்கள் நிறைய ஆடுகளை வைத்திருந்தோம், அவர்கள் ஆடுகளைக் கொல்கின்ற ஒரு நாயை வைத்திருந்தார்கள். நாங்கள் அந்த நாயின் அதன் பல்லில் ஒரு ஆட்டின் ரோமம் இருக்கும் போதே அதைப் பிடித்தோம்; அந்த பழைய துப்பாக்கியை எடுத்தோம், அந்தத் துப்பாக்கியின் இரட்டைக் குழல்களை அதற்கு நேராகத் திருப்பிச்சுட்டோம். சகோதரனே, அந்த விதமான ஆட்களுக்கு நேராக அந்தக்காரியத்தைத் தான் திருப்ப வேண்டும், அந்த இரட்டைக்குழல் துப்பாக்கி, அதின் இரண்டு குழல்களையும் அவனுக்கு நேராக குறி வைக்கப்பட வேண்டும். நான் உங்களுக்குக் கூறுகிறேன், அது காரியங்களைச் சரி செய்யும். நிச்சயமாக அது செய்யும். அது உங்கள் ஆடுகள் கொல்லப்படுவதை நிறுத்தும். ஆமென். நான் அவ்விதமாகக் கூறுவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் சற்றுநினைவில் கொள்ளலாம். அது சரி. அதைக்குறித்து சற்று சிந்தியுங்கள்.  150. என்னே! அங்கே அந்த சமயத்திலே அவன் தன்னுடைய கோதுமை எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்து வைத்தான், அப்பொழுது அங்கே அந்த பெரிய தடித்த பெலிஸ்தர்கள் அங்கே வந்தனர், கோதுமையை அவனிடமிருந்து எடுத்துச் சென்று விட்டனர். சரியாக சாலையிலேயே அவன் கொண்டு வந்த போது அங்கிருந்தே அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். 151. ஒரு நாளில், அவன் தன்னுடைய எல்லாப் பயிரையும் புடைத்து சுத்தம் செய்து உள்ளே கொண்டு வந்து வைத்திருந்தான். அதோ அங்கே, அந்த ஏழையான சிறிய நபராகிய அவன் தன்னுடைய பயிர்க்களஞ்சியத்தின் அருகே உட்கார்ந்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன், "ஆம் தாயே, ஒருக்கால் நாமும் - நாமும் நம்முடைய குழந்தைகளும் இதைக்கொண்டு வருகின்ற குளிர் காலத்தில் நாம் ஜீவனம் செய்யலாம்” என்று கூறினான். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான், முதலாவதாக என்ன நடந்ததென்று தெரியுமா, சாலையிலே ஏதோ ஒரு சத்தத்தை அவன் கேட்க நேர்ந்தது, “தட், தட், தட், தட்” என்று சத்தம் கேட்டது. அங்கே பெரிய தலைக்கவசங்கள் அணிந்து, பெரிய இரும்புக் காலணிகளை அணிந்து, தங்கள் கைகளில் ஈட்டிகளுடனும், பெரிய பட்டயங்கள் தங்கள் இடுப்பிலே மாட்டிக்கொண்டு ஆயுதந்தரித்த அறுநூறு பேர்கள் வந்துக்கொண்டிருந்தனர். அவர்கள் சம்காருடைய கோதுமையை அவனிடமிருந்து எடுத்துக்கொள்ள அங்கே சாலையில் வந்துக்கொண்டிருந்தனர்.  152. அந்த சிறிய சம்கார், “ஓ என்னே, அங்கே பார். இதோ அவன் மறுபடியுமாக வருகின்றான்” என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. அவன் தன்னுடைய பரிதாபத்திற்குரிய மனைவியைப் பார்த்தான். அவள் அங்கே நின்றுக்கொண்டிருந்தாள், அவளுடைய முழங்கை அவளுடைய ஆடையிலிருந்து வெளியே நீண்டுக் கொண்டிருந்தது. அந்த சிறு பிள்ளைகள் அங்கே நின்றுக்கொண்டிருந்தனர், அவர்கள் மிகவும் மெலிந்து போய்க்காணப்பட்டனர். ஏனென்றால் சாப்பிடுவதற்கு அவர்களுக்கு எதுவுமேயில்லாதிருந்தது. பெலிஸ்தர்கள் ஆகாரத்தைக் கொண்டு சென்று விட்டிருந்தனர்.  153. அந்த விதமாகத் தான் சில கிறிஸ்தவர்கள் இன்றிரவு இருக்கின்றனர். ஒரு விசுவாசியென்றும், மறுபடியும் பிறந்த ஒரு விசுவாசி என்றும் அழைக்கப்படுவதற்கு எதுவுமே இல்லாதிருக்கின்ற மிகச் சிறிய விதத்தில் இருக்கின்றனர். ஆமென். எழுதும் மை இருந்தாலும் கூட அதில் தொட்டு ஒரு "ஐ" என்கின்ற எழுத்தை இடுவதற்குக் கூட அவர்களிடம் போதுமான விசுவாசம் இல்லை. அது சரி. ஓ. என்னே!  154. பிசாசானவன் உள்ளே வந்து சபையிலிருந்து தேவனுடைய மகிமையை வெளியே எடுக்கவும், உங்கள் மேய்ப்பரை வெளியே அனுப்பிவிட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் வேதாகமத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்களை உள்ளே கொண்டு வந்து, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்ளே வந்து எழுந்து நின்று மரித்துக்கொண்டிருக்கின்ற ஒரு கன்று குட்டி எப்படி "ஆமென்” என்று கூறுமோ அந்த விதமாக அவர்கள் கூறும்படிக்குக் செய்வதை நீங்கள் அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு என்ன தேவைப்படுகின்றதென்றால் ஒரு பழமை பாணியிலான, காடுகளைப் போல, நீலவான, பாவத்தைக் கொல்கின்ற ஒரு மார்க்கத்திலான, சத்தியத்தைப் பிரசங்கித்து, தேவன் கூறினது உண்மை என்பதின் பேரில் நின்று மக்களை விடுவிக்கின்ற ஒரு பிரசங்கியே. ஆமென்.  155. நான் கடுமையாகக் கூறவில்லை. நான் கடுமையாக இருக்க வேண்டும் என்று நான் விழையவில்லை. ஆனால் சகோதரனே, கறுப்பை கறுப்பென்றும், வெள்ளையை வெள்ளை என்றும் கூறப்படவேண்டிய ஒரு காலமானது வந்துவிட்டது. ஆம், ஐயா, நீங்கள் காரியங்களை சரிசெய்வீர்களானால் அப்பொழுது உங்கள் கூட்டத்தில் தேவன் இருக்கப்பெறுவீர்கள், இராஜாவின் கூட்டத்தில் மறுபடியுமாக சத்தத்தைக் கேட்பீர்கள். ஆமென். இப்பொழுது கவனியுங்கள். அந்த சிறிய சம்கார் அங்கே நின்றுக்கொண்டு ஜன்னலிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அதோ அங்கே பெலிஸ்தர்கள் வந்தனர். அப்பொழுது அவன், “ஓ, தாயே, இதோ பார்” என்றான். அவனுடைய பெண் பிள்ளை அழுதுக்கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய கைகளைக் கீழே போட்டு “அப்பா, குளிர் காலத்திற்கு நமக்கு சாப்பிடுவதற்கு ஆகாரமே இல்லை'' என்றாள். அந்தத் தாயை நான் கவனித்தேன், அப்பொழுது அவள் அழத்துவங்கினாள்.  156. உங்களுக்குத் தெரியுமா? சம்கார் சுற்றுமுற்றும் பார்த்தான், என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன், 'என்னால் சண்டையிட முடியாது. நான் ஒரு போர் வீரன் அல்ல, எப்படி வாட்போரிடுவது என்றும் இந்த பயிற்சிகள் மற்றும் எல்லாக் காரியங்களையும் கற்றுக் கொள்ள எனக்கு - எனக்கு நேரமே கிடையாது. அதைச் செய்ய எனக்கு - எனக்கு நேரம் இருக்கவில்லை” என்று கூறினான்.  157. அப்பொழுது அவன் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அங்கே மூலையில் ஒரு பழைய தாற்றுக்கோல் கிடந்தது. தாற்றுக்கோல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு பெரிய கோல். அதன் ஒரு முனையில் வெண்கல முனை இருக்கும்... அது எதற்கு என்றால் வாசலில் கால்நடைகளை உள்ளே செல்லச் செய்வதற்காக அவைகளை அந்த வெண்கல முனையைக் கொண்டு குத்தவும் (punch) மற்றும் காளைகள் ஏர் உழும் போது ஏர்முனையில் சேரும் மண்ணைக் கொத்தி வெளியே தள்ளவும் உபயோகப்படுகின்ற ஒன்று. அங்கே ஒரு பழைய தாற்றுக்கோல் அங்கே கிடந்தது. அவன் தன்கையில் எடுக்கத்தக்கதாக இருந்தஒரு பொருள் அது மாத்திரமே இருந்தது. ஆனால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவன் கோபப்பட்டான் என்று நான் கூறவில்லை, ஆனால் அவனுடைய நியாயமான கோபமானது மேலே எழும்பினது. ஆம் ஐயா, சகோதரனே, நான் உங்களுக்கு கூறுகிறேன் அவன். 'உன் கையிலிருக்கிறதென்ன?" ஒரு தாற்றுக்கோலைத் தவிர வேறொன்றும் இல்லை"  158. அவன், “நான் ஒரு சண்டை வீரன் அல்ல. என்னால் - என்னால் சண்டையிட முடியாது. எனக்கு - எனக்கு எந்த ஒரு பயிற்சியும் கிடையாது” என்று கூறினான். எந்த ஒரு பயிற்சியும் பெறுவதற்கு அவனுக்கு நேரமே இல்லாதிருந்தது. அவனுக்கு தேவைப்பட்ட ஒரேயொரு காரியம் தேவனுடைய ஆவி அவன் மேல் இருக்க வேண்டும் என்பதே. தேவனுடைய ஆவியினாலே அவன் அந்த ஜன்னலிலிருந்து வெளியே குதித்தான். அவன் அந்தத் தாற்றுக்கோலை எடுத்து அறுநூறு பெலிஸ்தர்களைக் கொன்றான். ஆமென்.  159. இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவது என்னவென்றால், வேதாகம கலாசாலைக்குச் சென்று மாற்கு 16 சரியானதா அல்லது தவறானதா என்று கற்றுக்கொள்வதல்ல. சகோதரனே, மக்கள் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நாம் செய்தாக வேண்டிய காரியம் என்னவெனில், சரியாக அதினின்று வெளியே வருவதே தான். நீ போரிடத்தெரிந்தவன் அல்லது சரியானவன் என்பது காரியமல்ல. அது நீ எழும்ப வேண்டும் என்பதே. ஆம், ஐயா.  160. அவன் ஒரு பெலிஸ்தன் என்று அவன் அறிந்திருந்தான். அவர்கள் விருத்தச்சேதனம் பண்ணப்படாத பெலிஸ்தர்கள் என்று அவன் அறிந்திருந்தான். எனக்கு நிச்சயமாக தெரிந்த வரையில் அந்த வியாதியானது ... உங்களுக்கு இருதயக் கோளாறு உள்ளது என்று அறிந்துள்ள வரையில், உங்கள் வியாதி என்னவாயிருந்தாலும் சரி, அது பிசாசினாலானது என்பது நமக்குத் தெரியும். அவன், தான் ஒரு இஸ்ரவேலன் என்று அறிந்திருந்தான். அவன், தான் விருத்தசேதனம் பண்ணப்பட்டஒருவன் என்று அறிந்திருந்தான். வாக்குத்தத்தத்தை அடைய அவனுக்கு உரிமை இருந்தது என்று அவன் அறிந்திருந்தான். அவனை ஆசீர்வதிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்வார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே அவன் அதன் பேரில் கோபங்கொண்டான், ஆகவே அவன் தாற்றுக்கோலை எடுத்தான். காரியத்தைச் செய்யச் சென்றான்.  161. இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவது என்னவெனில், என் சகோதரனே, நீ தேவனுடைய பிள்ளை என்றும் அதற்கு உண்டான உரிமை உள்ளதென்றும், அந்த வாக்குத்தத்தம் உன்னுடையது என்றும் நீ விசுவாசிக்க வேண்டும் என்பதே. உன் கையில் என்ன இருக்கின்றதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். போய் பிசாசை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு பக்கம் வெட்டிச் சாய்த்துக்கொண்டேயிருங்கள். ஆமென். அப்பொழுது இறகுகள் சிதறிப் பறந்துக்கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள், பிசாசு தோற்கடிக்கப்படுவான். அப்பொழுது நீங்கள் மறுபடியுமாக முழுமையாக ஆகிவிடுவீர்கள்.  162. உன் கையிலிருக்கிறதென்ன? நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம், என் கையில் எதுவுமே இல்லை ” என்று கூறலாம். நீங்கள் ஒரு ஜெப அட்டையைக் கொண்டிருக்கலாம். அதைத்தரையிலே போடுங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே எழும்புங்கள், “நான் கிறிஸ்துவை என் சுகமளிப்பவராக எடுத்துக்கொள்கிறேன்'' என்று கூறுங்கள். அல்லேலூயா.  163. கத்தோலிக்க சபையின் வினா விடை புஸ்தகத்தை நீங்கள் உங்கள் கரத்தில் ஒட்டி வைத்துக் கொண்டு, நான் சரியாக இருக்கின்றேனா அல்லது தவறாக இருக்கின்றேனா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள நீங்கள் அதைக் கொண்டிருக்கலாம். அதை தூக்கி வீசி எறியுங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழும்புங்கள், பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டு பாளையத்துக்குள்ளே உள்ளே செல்லுங்கள். ஆமென். ஆம், ஐயா, சபைக்குச் செல்வதற்குமுன்பாக காலையில் நீங்கள் திரும்பத் திரும்ப உச்சரித்து நீங்கள் கூறத்தக்கதாக கற்றுக்கொள்ள வேண்டிய சபையின் உபதேசங்களை நீங்கள் கொண்டிருக்கலாம். அந்த காரியத்தை தூக்கி எறிந்து போட்டு பரிசுத்த ஆவியினால் உங்கள் இருதயம் நிரப்பப்படும்படிக்குச் செய்யுங்கள். ஆமென். அதைக் கீழே போட்டு விட்டு உங்கள் கரத்தில் இருக்கிறதை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் என்ன இருந்தாலும் சரி. அதை எடுத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய மகிமைக்கென்று உங்களால் முடிந்தவரைக்கும் சிறந்ததைச் செய்யுங்கள். ஆமென். ஓ, அருமை. நிச்சயமாக நான் இவ்வளவு நேரம்..... ஓ, நேரம் ஏறக்குறைய பத்து மணியாகிவிட்டது. நாம் ஜெபிப்போம்.  164. எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் கைகளில் அதிகமாக எதுவுமில்லை. ஆனால், தேவனே எங்கள் கையில் என்ன இருக்கிறது என்பதல்ல; நீர் எங்கள் கையில் என்ன வைக்கின்றீரோ அது தான் காரியமாகும். ஓ, தேவனே, எங்களுக்கு இன்றிரவு விசுவாசம் தேவைப்படுகின்றது. கர்த்தாவே, நீர் தாமே இன்றிரவின் சிறிய செய்தியை எடுத்து ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்தில் வைத்து, அவர்கள் சரீரபிரகாரமாக எவ்வளவு பலவீனப்பட்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் அவர்கள் இன்னுமாக கிறிஸ்துவை சமீபத்தில் கொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் அறிந்துக் கொள்ளச் செய்யும். நீர்தாமே இந்த ஆசீர்வாதங்களை அளித்து, இழக்கப்பட்டவர்களை இரட்சித்து, கிறிஸ்துவுக்கு வெளியே இருப்பவர்களை பரிசுத்த ஆவியால் நிரப்பி, இந்த ஆராதனையிலிருந்து மகிமையை பெற்றுக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று நான் கேட்கின்றேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கின்றேன்.  165. உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், நாம் இன்னும் சில நொடிகளில் இந்த பீட அழைப்பைச் செய்கையில் ... இந்த பிரசங்கமானது பழமை பாணியிலான, கரடுமுரடான, துடைத்தெடுக்கின்ற, தோலுரிக்கின்ற, ஏறக்குறைய சரியாக உச்சரிக்கப்படாத விதத்தில் இருக்கின்றது என்று எனக்குத் தெரியும், ஆனால் சகோதரனே, சில சமயங்களில் அது உங்களுக்குத் தேவைப்படுகின்றது. அது சரி. அது உங்களுக்குத் தேவைப்டுகின்றது. .  166. இப்பொழுது மிகவும் பரிதாபத்திற்குரிய அனுபவத்தைப் பெற்றவர்களாக இருந்து அழுதுக்கொண்டே இருக்கின்ற நபர்கள் யாராவது இன்றிரவு இல்லாதிருக்கிறார்களா என்று நான் அதிசயிக்கிறேன், அவர்கள் ... கவனியுங்கள். எனக்குத் தெரிந்தவரையில் அதன் பேரில் வஞ்சிக்கப்படும்படிக்கு அநேகம் பேர்கள் இருப்பார்கள். என் தாயார் பரலோகம் சென்றார்கள். அதினாலே நானும் பரலோகத்திற்கு சென்று விடுவேன் என்பதானது கிடையாது. நான் பரலோகம் செல்லத்தக்கதாக இயேசுகிறிஸ்து மரித்ததனால் தான் என்னால் அங்கே செல்ல முடியும். என் தாயை நான் காண விரும்புகிறேன் - நிச்சயமாக. ஆனால் நான் கிறிஸ்துவிடம் வந்தாக வேண்டும். என் தாயார் சென்றார் என்பதனால் அல்ல, ஆனால் நான் ஒரு பாவியாக வந்து என் பாவங்களை அறிக்கையிட்டு தேவனால் அருளப்பட்ட வழியை ஏற்றுக்கொண்டதனால் மட்டுமே செல்ல முடியும். அது சரி.  167. இப்பொழுது, இன்றிரவு நீங்கள், “பிரசங்கியே, நான் ஒரு பாவி, நீங்கள் என்னை ஜெபத்தில் நினைவுகூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாவியாகிய என்னை நீர் உமது ஜெபத்தில் நினைவுகூரும்படியாக கேட்கும்படி உமக்கு நேராக என் கையை உயர்த்தியுள்ளேன். அங்கே உங்கள் கைகளை உயர்த்துவீரா, ஜனக்கூட்டத்தில் எங்கிருந்தாலும் பரவாயில்லை, உங்கள் கையை உயர்த்துங்கள். சுற்றிலும் இருக்கின்ற உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. என்னே, என்னே, என்னே? அங்கே தூரத்தில் பால்கனியிலுள்ள வட்டத்தில் எவராவது இருக்கின்றீர்களா? ஆம், என்னால் உங்கள் கரங்களைக் காணமுடிகிறது. எல்லா இடங்களிலும் உள்ளவர்களையும்தேவனும் காண்கின்றார். நிச்சயமாக அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஆராதனை முடிந்தவுடனே இங்கே பிரசங்க மேடையின் கீழே நீங்கள் வந்து, பாவ அறிக்கை செய்து, உங்கள் இருதயத்தை கிறிஸ்துவுக்கு அளித்து, உங்கள் முழு இருதயத்துடனே கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.  168. பரலோகப் பிதாவே, இரவு பொழுதானது கடந்து சென்றுக் கொண்டேயிருக்கின்ற நேரத்தில், வியாதியுள்ள சிறு பிள்ளைகள் சுற்றிலும் அமர்ந்துள்ளனர். அருமையான தேவனே, இப்பொழுது உம்முடைய இரக்கங்கள் தாமே எங்கள் இருதயங்களில் சிந்தப்படட்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். “உன் கையிலிருக்கிறதென்ன?” என்கின்ற இந்த சிறிய பொருள் தாமே (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) மோசேக்கு அது ஒரு உலர்ந்து போன ஒரு கோலைத் தவிர வேறொன்றுமல்ல; தாவீதிற்கு அது ஒரு இரண்டு சிறிய இழைகள் (strings) மற்றும் ஒரு தோல் துண்டைத் தவிர வேறொன்றுமல்ல, அது ஒரு கவண்கல் ஆகும். சிம்சோனுக்கு அது ஒரு உலர்ந்து போன கழுதையின் தாடை எலும்பு தானே தவிர வேறொன்றுமல்ல. ஓ, தேவனே, சம்காருக்கு தன் கையிலிருந்தது ஒரு தாற்றுக்கோலைத் தவிர வேறொன்றும் அல்ல. அது ஒரு முனையில் வெண்கல முனையைக் கொண்ட ஒரு கோலாக அது இருந்தது அதைக்கொண்டு அவன் அறுநூறு பெலிஸ்தர்களை அடித்துச் சாய்த்தான். அவன் ஒரு போர் வீரன் அல்ல, சண்டை பயிற்சி பெற்றவன் அல்ல, ஆனால் அவன் உடன்படிக்கையில் இருந்த ஒரு மனிதனே ஆவான்.  169. ஓ பரலோகப் பிதாவே, கர்த்தாவே, நீர் தாமே இன்றிரவு உயர்த்தப்பட்ட ஒவ்வொரு கரத்தையும் கவனத்தில் கொண்டு அவர்களுடைய இருதயத்திற்கு விசுவாசத்தைத் திறந்து கொடுப்பீரா, கர்த்தாவே, அவர்கள் காத்துக்கொண்டிருக்கின்ற நேரத்திலே உம்முடைய பரிசுத்த ஆவி தாமே இன்றிரவு மிகஅதிகமாக கிரியை செய்யட்டும். கடந்த இரவில் நீர் தாமே குருடர் பார்வை அடையும்படிக்குச் செய்ததையும், செவிடர் கேட்கும்படிக்கும், பாவிகள் உம்மண்டை வரும்படிக்கும் செய்ததை நாங்கள் கண்டது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் ஓ தேவனே, நீர் செய்த அந்த மகத்தான காரியங்களாவன; உடல் முடமாகி முறுக்கிப்போன நிலையில் இருந்தவர்களை சீராக்கி அவர்கள் தாமே சக்கர நாற்காலியிலிருந்து வெளியே வந்து கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே சுற்றுமுற்றும் நடந்து சென்றார்கள்.  170. ஓ கர்த்தராகிய தேவனே, நீர் மகத்தானவர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இன்றிரவு தங்கள் கரத்தை உயர்த்தின ஒவ்வொருவரையும் நீர் தாமே இரட்சிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் தாமே இழக்கப்படாதிருப்பார்களாக, ஆனால் அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ளும் இரவாக இது இருப்பதாக. சரீரப்பிரகாரமாக நூறு அல்லது நூற்றிரண்டு பேர் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளார்கள். நீர் தாமே இயேசுவுக்காக அவர்கள் ஒவ்வொருவரையும் இரட்சிக்கும்படிக்கு நான் ஜெபிக்கின்றேன். ஏனெனில் அவருடைய நாமத்தில் தான் நாங்கள் அதைக் கேட்கின்றோம். ஆமென்.  171. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) அவர் அங்கே யூதருக்கு பத்து இலட்சம் வேதாகமங்களை அனுப்பினார். அவர்கள் அங்கே இரானிலிருந்து வந்தனர், இரான், இராக் மற்றும்... ? ..... மற்றும் அங்கிருந்த நாடுகளிலிருந்து வந்தனர். இலட்சக்கணக்கான யூதர்களை அவர்கள் எப்படி கொண்டு வந்தனர் என்று பத்திரிக்கைகளில் நீங்கள் வாசிக்கிறீர்கள். அந்த தீர்க்கதரிசன காரியத்திற்கு நாம் செல்ல நமக்கு நேரமிருந்தால் ....... அந்த யூதர்கள் திரும்பி வந்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வருகின்ற ஒரு புகைப்படத்தை நான் வைத்திருக்கிறேன், அவர்கள் கப்பல்களிலிருந்து இறங்கும் போது, விமானங்களிலிருந்து இறங்கும் போது அந்தபுகைப்படத்தை எடுத்தார்கள். அவர்கள் தங்களுடைய முடவர்களையும், ஊனமுற்றவர்களையும், குருடர்களையும் கூட கொண்டு வந்தார்கள். அப்பொழுது நாங்கள் அவர்களிடமாக நடந்து சென்றோம். இந்த படத்தை அந்த மனிதன் எடுத்திருந்தார். சகோதரன் ஆர்கன்பிரைட்டும் அவர்களும் (இங்கே கூட்டத்திற்கு வரவிருக்கின்றனர்), அவர் அவர்களிடமாக “நீங்கள் எல்லாரும் ஏன் திரும்பி வருகிறீர்கள்” என்று கேட்டார். “இது எங்களுடைய தேசம்” அதற்கு அவர், “நீங்கள் ஒரு சொந்த தேசத்தை உடையவர்களாக இருந்து, உங்கள் சேதத்திலேயே மரிக்கவும் தானே வந்திருக்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள், “இல்லை, நாங்கள் மேசியாவைப் பார்ப்பதற்காகவே திரும்பி வந்துக்கொண்டிருக்கின்றோம்” என்று கூறினர்.  172. ஓ தீர்க்கதரிசன போதகர்களாகிய நீங்கள். அது என்னவென்பதை நீங்கள் மாத்திரம் அறிந்திருப்பீர்களானால் எப்படியிருக்கும். இந்த சுவிசேஷமானது புறஜாதிகளிடமிருந்து யூதர்களிடத்திற்கு திரும்பிச் செல்லுமானால், அப்பொழுது புறஜாதியின் நேரம் முடிவுற்றிருக்கும். இது கடைசி காலமாகும்.  173. ஆகவே அவர்களுக்கு வேதாகமங்களை கொடுத்தனர். அங்கே பத்து இலட்சம் வேதாகமங்களை அனுப்பியுள்ளார்கள். அந்த யூதர் அந்த ஏற்பாடுகளை வாசிக்க ஆரம்பித்தனர். அவர்கள் அதை வாசித்தனர். இயேசு இங்கே இருந்தார் என்பதை அவர்கள் அறியவில்லை. அதைக்குறித்து அவர்கள் எந்த ஒரு காரியத்தையும் கேள்விப்படவில்லை. பாபிலோனின் சிறைப் பிடித்தல் முதல் அவர்கள் அங்கே சிறைப்பிடிப்பிலே இருந்தார்கள். அப்பொழுது அவர்கள், “நீங்கள் இயேசு என்று அழைக்கிறீர்களே அவர் மேசியா என்று கூறுகிறீர்களே, அவர்இங்கே இந்த வேதாகமத்தில் செய்தபடியே அவர் மேசியாவின் அடையாளத்தைச் செய்வதை நாங்கள் காணட்டும். அப்பொழுது நாங்கள் அவரை ஏற்றுக்கொள்வோம். அவர் வந்து ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்வாரானால் நாங்கள் எல்லோருமே அவரை ஏற்றுக்கொள்வோம். நாங்கள் ஏற்றுக்கொள்வோம்." என்று கூறினர்.  174. சகோதரர்களே, ஓ, என்னே, சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ரவேலிலிருந்து இருநூறு மைல்களுக்கு அருகில் இருந்தேன், ஆனால் “அதற்கு இன்னும் சமயம் வரவில்லை” என்று பரிசுத்த ஆவியானவர் என்னைக் கட்டுப்படுத்தினார். ஓ, அவர்களில் சில இலட்சக்கணக்கானவர்களை வெளியே அழைத்து, “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் நான் சவாலிடுகிறேன். அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தை செய்தாரெனில், இங்கே இதே இடத்தில் எத்தனைப்பேர் அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்கள்” என்று கூற எனக்கு எவ்வளவு விருப்பமான காரியமல்லவா. அப்பொழுது அவர்கள் ஏற்றுக்கொள்ளும் போது “சரியாக இந்த இதே நிலங்களில் தான் உங்கள் ஆதிப்பிதாக்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றனர். நீங்கள் வேதாகமத்தில் வாசிக்கின்ற, இயேசு செய்த அந்த அதே அடையாளங்கள் மறுபடியுமாக சரியாக அதே விதத்தில் நடக்கும்” என்று கூறுவேன். அவர்களுக்கு ஒரு ... அவர்களுடைய தேவன் வல்லமையுள்ள தேவனாவார். அவர்களுடைய தேவன் பொய்யுரையாதவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனாவார். அவர்களும் அதை விசுவாசிக்கின்றனர்.  175. கவனியுங்கள். இயேசு இங்கே பூமியில் இருந்த போது, தாம் சுகமாக்குகிறவர் என்று உரிமை கோரவில்லை. அவரிடம் வந்த அநேக மக்கள் சுகமடையவில்லை. ஒருக்கால் அநேக முறை அவரை மரித்தவர்களிடத்தில் கொண்டு சென்றிருப்பார்கள். அவர் இங்கே பூமியில் இருந்தபோது ஆயிரக்கணக்கானோர் இறந்து போயிருப்பார்கள் என்று நான்கற்பனை செய்து பார்க்கிறேன். ஒரு உறுதிபடுத்தலுக்காக மூன்று பேரை உயிரோடெழுப்பினாரேயல்லாமல் வேறு எவரையும் அவர் உயிரோடெழுப்பவில்லை. முடவர், சப்பாணிகள், குருடர், சூம்பின உறுப்புடையவர்கள் இருந்த பெதஸ்தா குளத்தின் வழியாக அவர் கடந்து சென்ற போது அவர்கள் ஒருவரையும் கூட அவர் சுகப்படுத்தவில்லை . அங்கே ஒரு வைக்கோற்படுக்கையில் படுத்துக்கிடந்த ஒரு மனிதனிடம் சென்று அவனை சுகப்படுத்தினார்; அங்கே படுத்துக்கிடந்த மற்றவரை அப்படியே விட்டுவிட்டு நடந்து சென்று விட்டார்.  176. வல்லமையால் முழுவதுமாக நிறைந்திருந்த ஒரு மனிதன், தேவன் தாமே, இம்மானுவேல், இங்கே பூமியின் மீது நமது மத்தியில் வாசம் பண்ணினார், அவர் 'நானாகவே எதையும் செய்வதில்லை' என்று கூறினார். அவர்கள் அவரைக் கேள்வி கேட்ட போது (பரிசுத்த யோவான் 5:19ல்) அவர், "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” என்று கூறினார். இப்பொழுது வேதாகமம் முழுவதுமாக அவருடைய வாழ்க்கையை நீங்கள் ஆராய்ந்துப் பார்த்து, ஒவ்வொரு தடவையும் பிதாவானவர் காண்பித்ததை மாத்திரம் தவிர வேறெதாவதைச் செய்திருக்கிறாரா என்று பாருங்கள். இயேசு, "கிரியைகளைச் செய்வது நானல்ல, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார் என்று கூறினார்.  177. பிலிப்பு மாற்றப்பட்டப் பிறகு அவன் சென்று நாத்தான் வேலைக் கண்டு அவனைத் திரும்பக் கொண்டு வந்த போது என்ன சம்பவித்தது? அவன், "வா, நாம் - நான் யாரைக் கண்டுள்ளேன் என்று பார், அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமானவர்' என்று கூறினான். அதற்கு அவன், "நாசரேத்திலிருந்து யாதொரு நன்மையும் உண்டாகக்கூடுமா?' என்றான். 178. அவன் இயேசுவைக் காண வந்த போது, இங்கே இருக்கின்ற வரிசையைப் போன்று அவனும் வரிசையில் வந்தான். இயேசு அவனை நோக்கிப் பார்த்தார். எனக்குத் தெரிந்தவரையிலும் அவன் ஜெப வரிசையில் நின்றிருந்திருப்பான். வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்த இயேசுவண்டை அவன் வந்தான். அவர் அவனை நோக்கிப் பார்த்து, அவனிடம் ... இயேசு அவனை உற்றுப் பார்த்தார், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று கூறினார். அப்பொழுது... அவன் “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டான். அது அவனை திகைப்புக்குள்ளாக்கிற்று. அதற்கு அவர், 'பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்” என்று கூறினார். அவன், “நீர் தேவனுடைய குமாரன் ; நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று கூறினான்.  179. அவர் சமாரியாவின் வழியாகச் சென்றார். அவர் எரிகோவிற்கு சென்றுக் கொண்டிருந்தார், ஆனால் அவர் சமாரியாவின் வழியாகச் சுற்றிச் சென்று மலையின் மீது சென்ற வழியில் போய்க்கொண்டிருந்தார். அவர் அங்கே உட்கார்ந்துக் கொண்டு, தம்முடைய சீஷர்களை அனுப்பிவிட்டார். அப்பொழுது ஒரு சமாரிய ஸ்திரீ வெளியே வந்தாள். அவள் தண்ணீர் மொண்டுக்கொண்டிருப்பதை அவர் கண்டார். அவர் அங்கு செல்லும்படிக்கு பிதாவானவர் அவரிடம் கூறியிருந்தார். அவர் அங்கே என்ன சம்பவிக்கப்போகிறதென்று அவரிடம் கூறாமல், “அங்கே போ” என்று மாத்திரமே கூறியிருந்தார். ஆகவே அவர் அந்த ஸ்திரீயிடம் சென்று “தாகத்துக்குத்தா" என்று கூறினார். அதற்கு அவள், “இவ்விதமாக சமாரியர்களிடம் யூதர்கள் கேட்பது வழக்கமல்லவே, யூதர்கள் எங்களுடன் சம்பந்தங்கலப்பதில்லை என்று கூறினாள். 180. அவர், “நீ இப்பொழுது பேசிக்கொண்டிருப்பவர் யாரென்று நீ அறிவாயானால், நீ என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய்” என்று கூறினார். அவர் என்ன செய்தார்? அவளுடைய ஆவியை தொடர்பு கொள்ளும் வரைக்குமாக அவளுடன் சம்பாஷணையைத் தொடர்ந்தார். அவளுடைய ஆவியை பகுத்தறிந்து அவளிடம் இருக்கின்ற தவறு என்னவென்று அறிந்த பிறகு, அவர் அவளிடம், "நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா” என்று கூறினார். அதற்கு அவள், “எனக்குப் புருஷன் இல்லை ” என்றாள். அவர், “நீ சொன்னது சரி தான். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷன் அல்ல” என்றார். அதற்கு அவள், “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். அவள், “மேசியா வரும்போது இந்த காரியங்களையெல்லாம் அவர் செய்வார் என்று நான் அறிவேன். ஆனால் நீர் யார்?” என்று கேட்டாள். அப்போது அவர், “உன்னோடு பேசுகிற நானே அவர்" என்று கூறினார். உடனே அவள் ஊருக்குள் ஓடி, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாதானோ? என்று கூறினாள். இப்பொழுது, அந்த இயேசு இன்றைக்கு அதே இயேசுவாக இருப்பாரானால், அவரால் அதே காரியத்தைச் செய்ய முடியும். தேவன் வெளிப்படுத்துகின்றபடியே இன்றைக்கும் கூட அவராலே அதே காரியத்தைச் செய்ய முடியும், அது சரிதானே?  181. இப்பொழுது கடந்த இரவு நடந்ததைப் பாருங்கள். இங்கே இந்த வரிசையில் ஆண்களும் பெண்களுமாக உடல் முடங்கினவர்களாக சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.இன்றிரவு அவர்கள் அங்கே ஜனக்கூட்டத்தில் அவர்களால் எங்கெல்லாம் உட்கார முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்கள், சுற்றிலும் நடந்துக்கொண்டிருக்கிறார்கள். ஏன்? அது - இயேசு கிறிஸ்து.  182. தங்கள் வாழ்க்கையில் பாவத்தைக் கொண்டவர்களாக பிரசங்க மேடைக்கு வந்த ஆண்களும் பெண்களும் இருந்தனர். பரிசுத்த ஆவியானவர் நேராகச் சென்று காரியம் என்னவென்றும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினார். அவர்கள் சுகமாக்கப்பட்டனர், பிரசங்க மேடையில் நின்றுக்கொண்டிருந்த போது தங்கள் இருதயங்களை கிறிஸ்துவுக்கு அளித்தனர். அது வேதாகமத்தின் இயேசு கிறிஸ்துவாக இல்லையென்றால், எனக்கு வேதாகமம் 183. போதகர்களே, அதைக்குறித்தென்ன? வேதாகமத்தின் கிறிஸ்துவைப் போல அது தொனிக்கவில்லையா? இப்பொழுது, அது ஒரு மனிதன் அல்ல அது கிறிஸ்துவாகும். இன்றிரவு இங்கே அவர் திரும்ப வந்து, அவர் பூமியில் இருந்த போது பிறப்பித்த அந்த அதே காரியத்தை இப்பொழுது செய்வாரானால் நீங்கள் அவரை உங்கள் இரட்சகராகவும், சுகமளிப்பவராகவும் ஏற்றுக்கொண்டு அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால் உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.  184. இப்பொழுது, பரலோகப் பிதாவே எனக்குச் செய்யத் தெரிந்ததெல்லாம் இவ்வளவே. மற்றவை எல்லாம் நீர் செய்தவற்கு மாத்திரமே உள்ளது, என் அருமை அன்பிற்குரிய இரட்சகரே, இந்த ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தின் மூலமாக நீர் தாமே அருளும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். ஆமென். கடந்த இரவு நாம் எல்லா ஜெப அட்டைகளுக்காகவும் ஜெபித்தோம். இன்று அவர்கள் புதிய ஜெப அட்டைகளை அளித்துள்ளனர் என்று நாம் நம்புகிறேன். அந்த பையன் தாமே ..... சற்றும் முன்னர் அவன் இருந்திருப்பானானால், அது என்ன. ..? ... "0" வரிசையிலிருந்ததா? அப்படியானால் நாம் அதிலிருந்து துவங்கி அந்த எண்ணிலுள்ளவர்களை அழைத்து இங்கே வரிசையாக நிறுத்துவோம். யாரிடம் “O” பிரிவில் எண் 1 அட்டை உள்ளது. உங்கள் ஜெப அட்டையில் அந்த எண் உள்ளதா என்று பாருங்கள். நீங்கள் தானா, நீங்கள் இங்கே வரலாம்... இங்கே இருக்கின்ற இந்த பெண்ணா ? அது சரி. ஆம். பெண்ணே இங்கே மேலே வாருங்கள். அது சிறிது கடினமாகும். நான் ஒருவர் அல்லது இரண்டுபேரை அழைக்கவேண்டியிருக்கும்....  185. யாரிடமாக "O" எண் 2 உள்ளது, உங்கள் கரத்தை சற்று உயர்த்துங்கள், யாரிடம் அட்டை எண். 2 உள்ளது? அங்கே பின்னால் இருக்கின்ற பெண்,. பெண்ணே நீங்கள் இங்கே வருவீர்களா? உங்களால் கூடுமானால்? யாரிடம் "0" எண் 3 உள்ளது? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? "O" பிரிவு எண் 3 அட்டை வைத்துள்ளவர்கள் இருப்பார்களாயின் உங்கள் கரத்தை உயர்த்துவீரா? அங்கே பின்னால் இருக்கின்ற நபரா? என்னை மன்னிக்கவும். சரி. நீங்கள் இங்கே மேலே வருவீரா? எண் 2 மற்றும் எண்.3, இப்பொழுது எண்.4, யாரிடம் “O” பிரிவு எண் 4 அட்டை இருக்கின்றது. உங்கள் கையை உயர்த்துவீர்களா? ஐயா, நீங்களா? நீங்களும் இங்கே வருவீரா? சரி.  186. எண்.5 யாரிடமாக "O" வரிசை, எண் 5 அட்டை உள்ளது? பெண்ணே நீர் அந்த அட்டையை வைத்துள்ளீரா? நீர் இங்கே வருவீரா? எண்.6 யாரிடம் எண் 6 உள்ளது? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? எண். 6? உங்களில் யாராவது ஒருவர், வாயிற்காப்போன் இங்கே வாருங்கள், இந்த நாற்காலியில் உள்ளவர்களை சற்று பிடித்துக்கொள்ளுங்கள். சரி, அது அருமையானது. அது சரி, எண்... . நான் எந்த எண்ணைகூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்? 5 ஆ? யாரிடம் ... ஆறு? யாரிடம் எண் 7 உள்ளது? ஜெப அட்டை எண் 7, இப்பொழுது உங்கள் கரத்தை உயர்த்துங்கள்....?... 7, அங்கே இருக்கின்ற பெண். 8 சீக்கிரமாக உங்கள் கரத்தை உயர்த்துவீரா, 8, 9, இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துவீரா? 9. சரி. 10? மேலும் ....  187. இப்பொழுது, அவர்கள் வரிசையில் நிற்கும் போது..... இப்பொழுது, இங்கே ஜனக்கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனைப்பேர், இங்கே சுற்றிலும் எல்லாவிடங்களிலும் இருப்பவர்களே, இப்பொழுது நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, இந்த பழமை நாகரீக, கடுமையான பிரசங்கமானது இருப்பதிலேயே மிகக் கடினமானதாக இருக்கும், ஆனால், சகோதரனே, அவ்வளவு தான் எனக்குத் தெரியும். அது தான் என்னை இரட்சித்தது. எனக்குத் தெரிந்தது அவ்வளவே. எனக்குத் தெரிந்தது எல்லாம் ... நான் உங்களைப் புண்படுத்த விரும்பவில்லை. உங்களை தேவனோடு சரியாக அமைத்து வைக்கவும், அங்கே அந்நாளிலே நான் அங்கே நிற்க வேண்டியவனாக உள்ளேன் என்றும், அப்பொழுது நீங்கள் என் முகத்திற்கு நேராக உங்கள் விரலை நீட்டி, “ஏன் நீங்கள் என்னிடமாக சத்தியத்தைக் கூறவில்லை?” என்று கேட்பீர்கள் என்று அறிந்தவனாக, இப்பொழுது சற்று உங்களைப் புண்படுத்துவது நிச்சயமாக நலமானதாகும். பாருங்கள், காரியங்களை இப்பொழுதே சரி செய்து விடுவேனாக, நீங்களும் அதற்கு தயாராக இருக்கிறீர்களா? 188. இப்பொழுது, எத்தனைப் பேருக்கு ஜெப அட்டை இல்லாதிருந்து ஜெபிக்கப்படவேண்டுமென்று எத்தனைப்பேர் விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? ஜெப அட்டை இல்லாதிருந்து, ஆனாலும் தேவன் உங்களை சுகப்படுத்துவாரென்று விசுவாசிக்கிறவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். கர்த்தராகிய இயேசு தம்முடைய இரக்கத்தில் உங்களை எப்பொழுதும் ஆசீர்வதிப்பாராக. சரி. 189. இப்பொழுது, நாம் சில நிமிடங்களுக்கு மிகவும் பயபக்தியுடன் இருப்போமானால் ... அவர்கள் வரிசையில் நிற்கும் போது ... ஆம் அந்த விதமாக நில்லுங்கள். உங்களால் முடிந்தவரைக்கும் நிறைய பேர் நிற்கலாம் என்று நான் எண்ணுகிறேன். சரி. இப்பொழுது இங்கே இருக்கின்ற இந்த சிலருக்கு நாம் ஜெபிப்போம். அதன் பிறகு அந்த ..... அந்த - நம்முடைய விலையேறப்பெற்ற பரலோகப் பிதா வழிநடத்துவாரா என்று நான் சற்று காத்திருப்போமாக. இப்பொழுது, உங்கள் முழு இருதயதோடும் நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.  190. ஒரு மனிதன் விசுவாசத்தினாலே தொட்டிருக்கின்றதை நான் காண்கிறேன்.... அது உங்கள் மகளா? அப்படித்தானே? மிகவுமாக விசுவாசத்தைக் கொண்டிருக்கிற அந்த மனிதன், போலியோ நோயால் பீடிக்கப்பட்டு முடங்கியிருக்கின்ற தன்னுடைய சிறு மகளை வைத்திருக்கிறார். இந்த ஜெப வரிசை ஆரம்பிக்கவிருக்கிற பொழுதில் அவர் தன்னுடைய சிறு மகளின் போலியோ பாதித்த கால்களைத் தாங்கி நிறுத்துகிற அந்த பெரிய கருவியையும் காலணிகளையும் கழற்றிக் கொண்டிருக்கிறார். அது தான் சரியான விதமாகும். அது தான் சரியமான விதமாகும். அது - அது விசுவாசம் ஆகும். அந்த விதமாகத் தான் விசுவாசிக்க வேண்டும். நம்முடைய அன்புமிக்க இரட்சகருக்கு எல்லாக் காரியங்களும் தெரியும். எல்லா காரியங்களையும் செய்ய முடியும்.  191. இப்பொழுது, இங்கே இந்த ஜெப வரிசையினூடாக ஒரு சிலர், ஒருக்கால் இன்னும் சிலரை மேலே அனுப்பலாம். அங்கே இருக்கின்ற உங்களை நான் கேட்க விரும்புகிறேன். ஜெய வரிசையில் உள்ள நீங்கள் எல்லோரும் எனக்கு அன்னியர்கள் தானே? அப்படியென்றால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் எல்லாருமே எனக்கு அன்னியர்களாயிருக்கிறீர்கள். அங்கே ஜனக்கூட்டத்தில் உள்ளவர்கள் எல்லாருமே எனக்கு அன்னியர்கள் தானே, உங்கள் கரங்களை உயர்த்துங்கள், கூட்டத்தின் எல்லாயிடங்களிலும் . . ? ...... எல்லாரும்அன்னியர்கள். ஆகவே உங்களை எனக்கு தனிப்பட்ட விதத்தில் தெரியாது. உங்களைக் குறித்து எதுவுமே எனக்குத் தெரியாது, ஆனால், நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை வேதத்தின் படி செய்ய நான் விரும்புகிறேன்.  192. இப்பொழுது, அவர் எனக்களித்திருக்கும் இந்த சூட், மேல் சட்டையை அணிந்தவராக இயேசு இங்கே நிற்பாரானால் எப்படியிருக்கும். இன்றிரவு இந்த சூழலில் அவர் என்ன செய்திருப்பார்? அங்கிருந்து யாரோ ஒருவர் வந்து “இயேசுவே என்னை சுகப்படுத்துவீரா?" என்று கேட்பாரானால் எப்படியிருக்கும். அவர் உங்களை நோக்கி என்னக்கூறுவார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்,"அதை நான் ஏற்கனவே செய்து விட்டேனே. அதை நீ விசுவாசிக்கமாட்டாயா?” என்று கூறுவார். அது சரியா? அவர் கல்வாரியில் செய்து விட்டதை இன்னுமாக மறுபடியுமாக அவரால் செய்ய முடியாது, பாருங்கள்? அவர் - அவர் - அவர் உங்களை கல்வாரியிலே சுகப்படுத்திவிட்டார். அவர் உங்களை கல்வாரியிலே இரட்சித்து விட்டார். இப்பொழுது, நீங்கள் “நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் சகோதரன் பிரன்ஹாம்" என்று கூறலாம். நீங்கள் இரண்டு . . . இல்லை , ஆயிரத்துத் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னரே நீங்கள் இரட்சிக்கப் பட்டீர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.  193. இயேசு கல்வாரியிலே மரித்த போது உங்கள் பாவங்களுக்காக கிரயத்தைச் செலுத்தி விட்டார். அவர் கல்வாரியில் மரித்த போது உங்கள் வியாதிக்கான கிரயத்தை செலுத்திவிட்டார். ஆதலால், தேவன் தம்முடைய இரக்கத்தில் அதை செய்திருக்கும் போது, இப்பொழுது அவரால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று என்னவென்றால், வேதாகமத்தை எடுத்து வார்த்தையை பிரசங்கிக்கலாம் அல்லது அவர் ஒரு பாஷையிலே பேசி அதை ஒருவர் வியாக்கியானம் செய்யும்படிக்குச் செய்வார், இன்னின்ன காரியத்தை செய்யும்படிக்கும் ஒருவரிடம் கூறுவார், அல்லது அவர் தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் பிரபுவாக அவர் இருக்கிறபடியினாலே ஒருக்கால் அவராலே, வேதாகமத்தின் நாட்களிலே அவர் செய்தது போல இங்கே அவர் நின்று, அப்பொழுது உங்கள் விசுவாசமானது வந்து அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு வெளியே போகும் வரைக்குமாக அவரைத் தொடும் போது அவர் திரும்பிப் பார்த்து 'என்னைத் தொட்டது யார்?' என்று கூறுவார். அது சரிதானே? அது இயேசு அல்லவா?  194. அப்படியானால் இங்கே இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்ற இந்த பெண் தாமே இங்கே மேலே வந்து இயேசு தாமே அவளுடைய காரியத்தை அறிந்து ..... எனக்கு அவளைத் தெரியாது. தேவன் அதை அறிவார். அவளை என் வாழ்க்கையிலே கண்டதேயில்லை. ஆனால் நண்பர்களே, நான் உங்களுக்கு என்ன புரிய வைக்க முயல்கின்றேன் என்றால், நீங்கள் எப்பொழுதுமே அதை நினைவில் கொள்ளத்தக்கதாக....  195. இப்பொழுது, இயேசு அந்த காரியங்களை செய்த போது, அவர் யாரென்று பிலிப்பு கூறினான்? தேவனுடைய குமாரன். அவர் யார் என்று அந்த ஸ்திரீகூறினாள்? அவரே அந்த மேசியா, ஏனென்றால் அவர் அதைச் செய்திருந்தார். ஆனால் அவர் யார் என்று அந்த யூதர்கள் கூறினது என்ன? " அவன் குறி சொல்பவன். அவன் ஒரு பிசாசு. அவன் பெயெல்செபூல், குறிசொல்பவர்களுக்கெல்லாம் தலைவன்" என்று கூறினார்கள். பாருங்கள். அவர்களிடமிருந்த தவறு என்னவென்று அவர் அறிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய இருதயங்களை அறிந்திருந்தார். அவர்களுடைய பிரச்சனைகளை அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் பிதாவானவர் தாம் இயேசுவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றிருந்தவைகளை அவருக்குக் காண்பித்தார். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களுக்குப் புரிகின்றதா? இப்பொழுது, அந்த அதே இயேசு இன்றிரவும் மாறாதவராக இருக்கின்றார். அது சரி. இப்பொழுது, நீங்கள் எங்கிருந்தாலும் சரி பயபக்தியா யிருங்கள், இது காரியத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தாக வேண்டும். அந்த பெண்ணை இங்கேக் கொண்டு வருவீர்களா அல்லது அவளை இங்கே வரும்படிக்குக் கூறுகிறீர்களா? இங்கே வாருங்கள். நான்... இப்பொழுது, பெண்ணே, நீ இங்கே நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்; நீ செய்யவேண்டியது அவ்வளவு தான், அப்படியே ..... நீ அப்படியே நில், நீ அதைச் செய்தால் போதுமென்று நான் கூறுகிறேன்.  196. இப்பொழுது, உங்களை எனக்குத் தெரியாது. உங்களுக்கும் என்னைத் தெரியாது. உங்களுக்கு என்னைத் தெரியாது என்றும் எனக்கு உங்களைத் தெரியாது என்றும் நீங்கள் இப்பொழுது தான் உங்கள் கரத்தை உயர்த்தினீர்கள். ஆனால் சகோதரியே, நம்மிருவரையும் தேவன் அறிந்திருக்கின்றார், அவரும் - அவரும் . . . நான் அந்த சகோதரியைக் குறித்து அதைக்கூறுவதற்கு ஒரு நிமிடத்திற்கு தயங்கினேன் (பாருங்கள்?), ஆனால் நீங்கள் தான் என்று நான் தெளிவாகப் புரிந்துக்கொண்டேன். இப்பொழுது . . . பாருங்கள் முதலாவதாக - முதலாவதாக நீங்கள் ஒரு கிறிஸ்தவள், ஏனென்றால் நான் உங்களுடைய ஆவியைப் பகுத்தறிந்தவுடன், நீர் ஒரு கிறிஸ்தவள் என்று அது எனக்குக் காண்பித்தது பாருங்கள். உங்களுடைய ஆவியானது வரவேற்கின்ற தன்மையைக் காண்பித்தது. அது கறுமையும் மந்தாரமாக மாறிக்கொண்டேயிருந்ததென்றால், நீங்கள் ஒரு கிறிஸ்தவன் அல்ல என்று நான் அறிந்துக்கொண்டிருப்பேன், பாருங்கள்; அப்படியாக இருந்திருந்தால் நான் உங்களை என் சகோதரியே என்று அழைத்திருக்கமாட்டேன். ஆகவே, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக உள்ளீர். இப்பொழுது அது... இப்பொழுது அந்த - இப்பொழுது அதைத் தான் பிலிப்பு நாத்தான்வேலிடத்தில் கூறினான். அவன் வந்த போது “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் அல்லது ஒரு விசுவாசி என்று கூறினார். 197. அதற்கு அவன், “நான் ஒரு இஸ்ரவேலன் என்றும் ஒரு உண்மையான விசுவாசி என்றும் நீர் எப்படி அறிவீர்'' என்று கேட்டான். பாருங்கள், அது அந்த அதே ஆவி. அந்தப் பெண் ஒருக்கால் மிகக் கேவலமான மோசமான ஒரு பாவியாக இருந்திருக்கலாம், ஆனால் அவள் ஒரு கிறிஸ்தவள் என்று நான் அறிவேன், பாருங்கள். ஏனென்றால் முதலாவது காரியமானது, அவளுடைய ஆவியாகும், இப்பொழுது இங்கே இருக்கின்ற இந்த ஆவியின் அபிஷேகமானது அதை மிக வேகமாகப் பிடித்தது, உங்களுக்குப் புரிகின்றதா? அது ஒரு கிறிஸ்தவ ஆவி என்று நான் கண்டேன். அவளுடைய ஆவி காரியத்தை தாராளமாக வரவேற்றது, பாருங்கள். ஆகவே, அவள்... அவள் ஒரு கிறிஸ்தவள் என்று நான் அறிந்துக்கொண்டேன்.  198. இப்பொழுது, அந்த பெண்ணை எனக்குத் தெரியாது, அவளுக்கும் என்னைத் தெரியாது ... அவள் எதற்காக இங்கே இருக்கின்றாள் என்று பரிசுத்த ஆவியானவர் அவளுக்குத் தெரியப்படுத்துவாரானால்... இப்பொழுது, ஆம், எவ்வளவு நீண்ட நேரமாக அவளிடம் பேசுவேனானால், எனக்கு இன்னும் அதிகமாக அவளைக் குறித்து எனக்கு அது தெரிவிக்கும். உங்களுக்கு அது தெரியும், அது ஒவ்வொரு இரவும் நிகழ்ந்தேறுகின்ற ஒன்று.  199. ஆனால் அவள் இங்கே எதற்காக இருக்கின்றாள் என்று அது கூறுமானால், இங்கே இருக்கின்ற எல்லாருமே நான் சத்தியத்தைக் கூறினேன் என்று விசுவாசிப்பீர்களா? தேவன் உண்மையைக் கூறுபவர் என்று விசுவாசிப்பீர்களா? சரி, ஒரு மனிதன் இங்கே வந்து உலகத்தில் இருக்கின்ற எந்த ஒன்றைக் குறித்தும் கூறி, ஏதோ ஒரு விதமான மூடபக்தி நம்பிக்கையை உருவாக்கி, அவன் விரும்புகின்ற எதையுமே செய்து, அதைச் செய்து, உனக்கு அதைக் கூறுவானானால், அது எந்த ஒன்றையுமே பிறப்பிக்காது. ஆனால் தேவன் வந்து அது உண்மை என்று கூறும்போது, அதை நீங்கள் விசுவாசிப்பது நல்லதாகும், ஏனென்றால் அதை அவிசுவாசிப்பது பாவமாகும். 200. ஆகவே நான் சாட்சி கொடுத்துவிட்டேன். இப்பொழுது, நான் உண்மையைச் சொன்னேன் அல்லது இல்லை என்று தேவன் சாட்சியிடுவதற்கான நேரம் இதுவாகும். சரி. இப்பொழுது, இங்கே நின்று இந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன், என்னுடைய வாழ்க்கையில் இவளை நான் கண்டதேயில்லை. அவளுடைய சகோதரன், ஒரு மனிதன் சரியாக இப்பொழுது அவள் பக்கத்தில் இல்லையென்றும் அவளுக்கு பக்கத்தில் ஏதோ ஒன்று இருக்கின்றது என்றும் இந்தப் பெண் மிகக் கவனமாக உணர்ந்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு அருகில் அதோ அந்த ஏதோ ஒன்று இருக்கின்றது. அவளும் அதை அறிந்திருக்கிறாள். அது என்னவென்றால் அங்கே அந்த புகைப்படத்தில் நீங்கள் காண்கின்ற அந்த தூதன். அது சரியாக இப்பொழுது இங்கே இருக்கின்றது, எனக்கும் இந்தப் பெண்ணுக்கும் நடுவே ஒரு ஒளியாக நிற்கின்றது. அதன் காரணமாகத் தான் அது அங்கே இறங்கினது, அது வரவேற்கப்பட்டதை நான் உணர்ந்தேன். அவள் ஒரு கிறிஸ்தவள், வழி முழுவதுமாக ஒளியாக இருக்கிறது.  201. இப்பொழுது, உங்களிடம் நான் சற்று நேரம் பேச விரும்புகிறேன், நீங்கள் தான் வந்திருக்கும் முதலாவது வியாதியஸ்தர். அதனால் தான் இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும், நீங்கள் எங்கிருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் சரி, நீங்கள் இந்த வழியாக நோக்கிப் பார்த்து, “இதோகர்த்தராகிய இயேசுவே, நீர் மாத்திரம் .. அங்கே மேலே இருக்கின்ற மனிதனை நான் அறிவேன். அவர் ஒரு மனிதன் மாத்திரம் தான், ஆகவே நீர் தாமே நான்..... நான் விசுவாசம் கொள்ளும்படிக்குச் செய்து, அந்தப் பெண்ணின் நிலைக்கேற்றாற்போல என்னுடைய விசுவாசமானது கட்டப்படும்படிக்கு செய்வீரானால்...'' என்று நீங்கள் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவன் என்ன செய்கின்றார் என்பதை கவனித்துப்பாருங்கள். அப்பொழுது நீங்கள் அவரை உங்களுடைய சுகமாக்குகிறவராயும், உங்கள் இரட்சகராகவும், உங்களுடைய தேவை என்னவாயிருந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்பொழுது, பெண்ணே நான் உங்களிடம் பேசுகிறேன். இங்கே இன்றிரவு சுற்றிலும் நிறைய மக்கள் இருக்கின்றனர். நான் உங்களைத் தனியே அழைக்க வேண்டியதாயிற்று; எல்லாவிடங்களிலிருந்தும் ஆவிகளானது ... இப்பொழுது, நான், ஒரு மனிதனாகவும், நீங்கள் ஒரு பெண்ணாகவும் மாத்திரமே இருக்கின்றோம்; அந்த கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீயிடம் இயேசு பேசிக்கொண்டிருந்த அதே விதமான ஒரு காரியமாக இது இருக்கிறது. அது மறுபடியுமாக ஒரு மனிதனும் ஒரு பெண்ணும் ஆகும்.  202. இப்பொழுது, உங்களை எனக்குத் தெரியாது, உங்களை நான் கண்டதேயில்லை, ஆனால் இங்கே பேசிக் கொண்டிருக்கின்ற அல்லது, ஜெபித்துக் கொண்டிருக்கின்ற, மக்களுடைய ஆவிகளிலிருந்து உங்களுடைய ஆவியை நான் வேறுபடுத்தி எடுக்கவேண்டியதாயிற்று. (உங்களுக்குத் தெரியுமா?) இந்த நேரத்தில், விசுவாசமானது வந்துக் கொண்டிருக்கின்றது.  203. ஆகவே உடனடியாக . . . இப்பொழுது, ஜனக்கூட்டமானது இன்னுமாக என் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பெண் என்னிடமிருந்து சென்றுக் கொண்டிருக்கிறாள், அவள் - அவள் ஒரு பெண் ... என் முன்னால் நின்றுக்கொண்டிருக்கின்ற இந்த பெண் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்தாள், சில மணி நேரங்களுக்கு முன்னர் அவள் மருத்துவமனையில் இருந்தாள். இன்றைக்கு அல்லது இன்று மதியம் அவள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டாள், அவள் மருத்துவமனையிலிருந்து இன்றிரவு ஏழு மணிக்கு வெளியே வந்தாள். அவளுக்கு ஒரு அரிதான ஒரு இரத்த நோய் உள்ளது, அதனோடு கூட மன மற்றும் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளாள். சகோதரியே, உங்கள் வழியே செல்லுங்கள், உங்கள் விசுவாசம் உங்களை சுகமாக்கினது; நீங்கள் நலமாக்கிக்கொள்ளுங்கள். ஆமென். 204. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசம் கொள்ளுங்கள்; சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் விசுவாசிக்கக்கூடுமானால் எல்லாம் கூடும்; ஆனால் நீங்கள் விசுவாசித்தாக வேண்டும். இப்பொழுது, அங்கே இருப்பவர்களே விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருங்கள், நீங்கள் எவைகளைக் கேட்கிறீர்களோ அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். சிறுநீர்ப்பை கோளாறுடன் இளஞ்சிவப்பு நிற கோட் அணிந்துள்ள ஒரு பெண் அங்கே உட்கார்ந்திருக்கின்றாள். இப்பொழுது - நீங்கள் சுகமானீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் பக்கத்தில் அமர்ந்துள்ள பெண்ணின் மேல் உங்கள் கையை வையுங்கள். ஏனென்றால் அப்பெண் நரம்புத் தளர்ச்சியினால் அவதியுறுகிறாள் - இங்கே இந்த பக்கத்தில் இருப்பவள்.  205. எங்கள் பரலோகப் பிதாவே, அவளுடைய விசுவாசம் தொட்டது. நான் பலவீனமடைந்தேன். உம்முடைய ஒளியானது அவள் மீது தொங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் சுகமடைந்தனர் என்று நான் அறிவிக்கிறேன். ஆமென். பாருங்கள், உங்களுக்கு ஜெப அட்டை அவசியமில்லை. நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கிறீர்கள்; தேவன் உண்மையைக் கூறியுள்ளார் என்று விசுவாசியுங்கள். ஏனென்றால் சத்தியத்தைத் தவிர வேறெதுவுமாக அவரில்லை; எல்லா சத்தியத்திற்கும் மூலகாரணர், ஆதாரம் அவரே. இப்பொழுது, பயபக்தியாக இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்க மாத்திரம் செய்தால், நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதைப் பெற்றுக் கொள்வீர்கள். இப்பொழுது - இப்பொழுது இவர்கள் தான் வியாதியஸ்தரா? நான் மட்டும் இங்கில்லை, ஆனால் உலகம்அதை அறிந்துக்கொள்ள முடியாது, சகோதரியே, அது எப்படிப்பட்ட ஒரு உணர்வாக அது இருக்கிறது.  206. இப்பொழுது, நமக்கு ஒருவரையொருவர் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் ஆவோம், நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்கள் சகோதரன் ஆவேன், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முயற்சிக்கின்றோம். என்னால் - என்னால் உதவி செய்ய முடிகின்ற ஒரு நிலையில் இருந்தும் ஆனாலும் உதவி செய்யமாட்டேன் என்றால், நான் ஒரு மிருகமாக இருப்பேன் ... என்னால் உங்களுக்கு உதவி செய்யமுடியுமானால் . . . ஆனால் நான் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் என்னை அனுமதிக்காவிடில் உதவி செய்வதற்கென என்னிடத்தில் ஒன்றுமே இல்லை. ஆகவே, நீங்கள் ஏன் இங்கே நிற்கின்றீர்கள் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அது பணப்பிரச்சனையாகவோ அல்லது எதுவாகயிருந்தாலும் அது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? உங்களுடைய காரியத்தில் தேவனுக்கு அக்கறை உள்ளதென்றும் அதை அவர் கேட்கப்போகின்றார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படிச் செய்வீர்களா? நீங்கள் என்னை நோக்கிப் பார்க்கையில் தேவன் அதை அருள்வாராக என்பதே என் ஜெபமாகும்.  207. உங்களுக்குத் தெரியுமா? அலங்காரவாசல் என்னப்பட்ட வாசலினூடாக சென்றுக் கொண்டிருந்த பேதுருவும் யோவானையும் போலவே, அவர்கள், “எங்களை நோக்கிப் பார், எங்களை நோக்கிப் பார்” என்றார்கள். அவர்களை இயேசுவாக பார்க்குமாறு கூறவில்லை, ஆனால் தாங்கள் என்ன கூறுகின்றனரோ அதற்கு மாத்திரமே அவர்கள் கவனத்தைச் செலுத்துமாறு கூறினர், அது ஆவியை பகுத்தறிந்து பிடித்தல் ஆகும்.  208. உங்களுக்கு கண்ணில் சில பிரச்சனை இருப்பதை நான் காண்கிறேன். ஒரு மருத்துவர் கண்ணைப் பரிசோதிப்பதை நான் காண்கிறேன். அவர் இன்னொரு மனிதனுடன் ஆலோசிக்கின்றார், அந்த மனிதன் ... உங்கள் கண்ணில் இருக்கின்ற பிரச்சனைஎன்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. என்னவென்று அவர்களால் கூறமுடியவில்லை ... அது என்னவென்று தெரியவில்லை. கண்ணின் மேல் அவர்கள் கையைக் கூட வைக்கமுடியவில்லை. பிறகு, உங்கள் வயிற்றுக்குக் கீழே ஏதோ ஒன்றை அவர்கள் உங்களுக்கு அளிப்பதை நான் காண்கிறேன். அது இயற்கைக்கு மாறாக வயிறு சரிந்து கீழே இறங்கியிருக்கும் பிரச்சனையாகும். உங்கள் வயிறு இயற்கைக்கு மாறாக இறங்கியிருக்கின்றது. மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை கொடுக்க முடியாமல் உங்களைக் கைவிட்டு விட்டார்கள். மேலும் நீங்கள் இந்த இடத்திலிருந்து ... நீங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த வழியாக வருகின்ற சாலையிலிருந்து வருகின்றீர்கள் ; அது அட்லாண்டா ஆகும். மருத்துவர்கள் உங்களை “செல்விட்ரூடி” என்றார்கள், அல்லது அதைப்போன்று உங்களை அழைத்தார். அது சரி. நீங்கள் வீடு திரும்பி சுகமாயிருங்கள். உங்கள் விசுவாசம் உங்களை சுகமாக்கினது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசத்தைக் கொண்டிருங்கள்.  209. நீர் அந்தக் குழந்தையின் தகப்பனா? தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள், விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களானால் . . . இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், இதைக்கூறுவது நானல்ல. அதற்கு செவி கொடுங்கள்; அது. இப்பொழுது அதற்கான உங்கள் மனப்பாங்கானது .... நீங்கள் நினைக்கும் போதெலாம் அதை அழையுங்கள்; நீங்கள் அதனிடமிருந்து என்ன பெற வேண்டுமென்று அது தீர்மானிக்கும். எப்படி அதை அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்துத் தான் உள்ளது.  210. அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்; அவள் தொட்ட போது வல்லமை அவளிடத்திற்கு வந்தது. அவருடைய முகத்தில் ஒருவன் அறைந்தான், ஒரு நாணற்கயிறாலே அடித்து, "உன்னை அடித்தவன் யார் என்று ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்" என்றான், அப்பொழுது வல்லமையானது புறப்பட்டு வரவில்லை. 211. அங்கே பின்னாலே உட்கார்ந்திருக்கின்ற அந்த சிறிய பெண், நீங்கள் தலையில் உள்ள பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்கள், அப்படித்தானே பெண்ணே? சரியாக அங்கே உட்கார்ந்துக்கொண்டு என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் . . . சரி பெண்மணியே. இயேசு உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அவர் உங்களை அந்தப் பொழுதிலே சுகப்படுத்தி விட்டார். நீங்கள் அதினாலே நீண்ட காலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் பெண்ணே, இப்பொழுது அது உங்களை விட்டு சென்று விட்டது. உங்கள் விசுவாசம் உங்களை முழுமையாக்கினது. ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. ஓ, எவ்வளவாக நாம் அவரை நேசிக்கின்றோம், எவ்வளவாக நீங்கள் அவரை நேசிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.  212. பரிசுத்த ஆவியானவர் அங்கே அசைந்துக்கொண்டிருக்கையில், அங்கே உங்களுக்கு பின்னால் ஒரு மனிதன் உட்கார்ந்துக் கொண்டிருக்கின்றார், அவர் மூட்டு வலியுடன் உட்கார்ந்திருக்கின்றார், கர்த்தராகிய இயேசு உங்களை சுகப்படுத்தும் படியாக, ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி ஐயா. அப்படியானால் நீங்கள் உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இது சற்று உங்களை அதிர்ச்சிக்குள்ளாயிற்று, அப்படித்தானே?  213. அங்கே சரியாக பின்புறத்தில் அமர்ந்திருக்கும் அந்த பெண், தன் கையை உயர்த்தி ஜெபித்துக்கொண்டிருக்கிறாள், அவளுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்கின்றது, அவளும் கூட சுகமளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாள், அங்கே நேராக என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவள் அங்கே பின் புறத்தில் பின்னாலே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாள். அங்கே பின்னால் உட்கார்ந்துள்ள பெண்ணே, தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கிறீர்கள் என்றால் உங்கள் சுகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆமென். அவர் அதிசயமானவர் அல்லவா? 214. இந்த பக்கத்தில் அங்கே சரியாகப் பின்புறத்தில் உட்கார்ந்துக் கொண்டிருக்கும் அந்த பெண், அவள் நேராக என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த ஒளி அவள் மீது தொங்கிக்கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அவளிடம் ஜெப அட்டை இல்லை. ஆனால் அவள் இருதயக் கோளாறினாலும் மூட்டு வலியினாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அந்த ஒளியானது இந்த மனிதனிடமிருந்து நேராக அவளின் மீது சென்றது. சரியாக இங்கே இந்த இடத்திற்கு நேராக, இப்பொழுது, சகோதரியே, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க விரும்புவீர்களானால், நீங்கள் கண்ணாடி அணிந்துள்ளீர்கள், நீங்கள் விசுவாசிக்க விரும்புவீர்களானால் நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. அது காரியத்தை முற்றுப்பெறச் செய்து விட்டது. ஆமென். ஓ, அது எவ்வளவு அற்புதமானது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  215. இப்பொழுது இங்கே..... கிறிஸ்தவ நண்பர்களே, நீங்கள் அந்த ஒளியைக் காணும் விதத்திலே தான் அது காணப்படுகின்றது. அந்த ஒளி சுழல்வதைக் காண்கிறீர்களா? அவர் சரியாக இங்கே நின்றுக் கொண்டிருக்கிறார். அது நேராக அங்கே மேலே வருகிறது . . . அங்கே உட்கார்ந்துக் கொண்டிருப்பவர், உங்களுக்கு நரம்புகள் இயற்கைக்கும் மாறாக வீங்கியிருக்கும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளீர்கள் - அதோ அங்கே உட்கார்ந்திருப்பவர். அந்த வீங்கின நரம்புகளைக் கொண்டிருக்கும் உங்களை இயேசு சுகமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா, உங்களை சுகப்படுத்துவார் என்று விசுவாசிப்பீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால் உங்கள் சுகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 216. ஐயா, சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் - நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் குழந்தையுடன் வருகிறீர்கள், மிக அழகான இனிய குழந்தை. உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் அதை அறிவீர்கள். நான் உங்களுக்கு முற்றிலும் அந்நியன் ஆவேன். என் வாழ்நாளிலே உங்களை நான் கண்டதேயில்லை என்று நான் நினைக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியராயிருக்கிறோம். ஆனால் தேவன் நம்மிருவரையும் அறிந்திருக்கிறார், அவர் அறிந்திருக்கிறாரல்லவா ஐயா? நீங்கள் உங்கள் சிறு குழந்தையை இங்கே கொண்டுவந்துள்ளீர், இந்தக் குழந்தை பரிசோதிக்கப்பட்டு வந்திருப்பதை என்னால் காணமுடிகின்றது. இந்தக் குழந்தை உயிர் பிழைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை என்று மருத்துவர் கூறுகிறார். லூகிமியா என்றழைக்கப்படுகின்ற இரத்தப்புற்று நோயால் இந்தக் குழந்தை அவதிப்படுகிறது. அது சரியே. அந்த குழந்தை பிழைக்கும் என்ற நம்பிக்கை உலகத்தில் கிடையவே கிடையாது. ஆகவே என் சகோதரனே, இந்தக் குழந்தையின் தகப்பனே, உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய சொந்த இரட்சகராக தேவைப்படு கின்றது உங்களுக்கு தேவை தானே? நீங்கள் ஒரு பாவி. இப்பொழுது அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் உங்கள் கையை உயர்த்தி, "கர்த்தாவே, நான் உம்மை ஏற்றுக்கொள்கிறேன்” என்று .கூறுவீரா? இப்பொழுது உங்கள் கரத்தை உங்கள் குழந்தையின் மீது வையுங்கள்.  217. சர்வவல்லமையுள்ள தேவனே, இந்தக் குழந்தையைக் கொல்கின்ற இந்த பிசாசை இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே கடிந்துக் கொள்கிறேன். மன்னிக்கின்ற கிருபை தாமே இந்த தகப்பனிடம் வருவதாக, இவர்கள் தாமே சென்று சந்தோஷமாக ஒன்றாக இருப்பார்களாக, இயேசுவின் நாமத்திலே, ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் பாவங்கள் போய்விட்டன. இப்பொழுது தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். ஆமென். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சுகமாக்கப்படுவீர்கள். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா?  218. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஐயா? நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முதுகில் தொந்தரவு இருக்கின்றது. அது முதுகு தண்டு பிரச்சனையாகும். அது சரியே, அப்படித்தானே? நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற நம்பிக்கையை இன்றிரவில் கொண்டிருக்கிறீர்கள்; மேலும் இன்னொரு காரியம் இருக்கின்றது, நீங்கள் கொண்டிருக்கும் ஒரு பழக்கத்திலிருந்து விடுதலையாக விரும்புகிறீர்கள், அது சரிதானே? சிகரெட் புகைக்கும் பழக்கம். சரியாக இப்பொழுதே அதை விட்டுவிடுவீர்களா? உங்கள் கரத்தை உயர்த்தி, “தேவனே, இது முடிந்து போகச் செய்கின்றது'' என்று கூறுங்கள். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள். உங்கள் முதுகு கோளாறு சுகமாகும். இயேசுவின் நாமத்தில். “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக” என்று கூறுங்கள். மரணம் அருகாமையில் அசைந்துக் கொண்டிருக்கின்றது. அதே போல ஜீவனும் இருக்கின்றது. இந்தப்பயங்கரமான பிசாசிலிருந்து கிறிஸ்துவால் உங்களைக் சுகமாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? இந்த புற்றுநோயை அவர் உங்களிடமிருந்து எடுத்துப்போட்டு உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  219. சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனுக்கு அதிபதியே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அளிக்கின்றவரே, இந்தப் பெண்ணின் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பி இவளை சுகப்படுத்தும்படியாக இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். சாத்தானே, உன்னை இயேசுவின் நாமத்தில் கடிந்துக் கொள்கிறேன். ஆமென். நீங்கள் இப்பொழுது களிகூர்ந்துக்கொண்டே உங்கள் வழியில் செல்லுங்கள். 220. ஒரு நிமிடம் பொறுங்கள்... அங்கே சக்கரநாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டிருப்பவரே, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ஐயா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு உங்களை சுகமாகக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்பொழுது அது உங்களைத் தொட்டது. அப்படித்தானே? ஏதோ ஒன்று சம்பவித்தது என்று நீங்கள் உணர்ந்தீர்கள். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று எனக்குக் கீழ்ப்படிவீர்களா? அப்படியானால் நீங்கள் உங்கள் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து அதைத்தள்ளிக் கொண்டு உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். பயப்படாதீர்கள்; விசுவாசியுங்கள். ஏனைய மற்றவர்களும், அவர் வெளியே வருகையில், நீங்களும் கூட அந்த அதே காரியத்தைச் செய்யலாம். அதோ அவர் ...?... எழுந்து நில்லுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் எழுந்து நில்லுங்கள்.  221. சர்வவல்லமையுள்ள தேவனே, ஜீவனுக்கதிபதியே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அளிக்கிறவரே, உம்முடைய ஆவியை இந்த மக்களின் மீது அனுப்பும், அவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கும். சாத்தானே, உன்னை நான் கடிந்துக்கொள்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த ஜனங்களை விட்டு வெளியே வா. நீங்கள் ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள், எல்லா இடத்திலும் உள்ளவர்கள், எழுந்து நின்று தேவனுக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுங்கள். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார்.